பொருத்து வீட்டு திட்டம் - யாழ்ப்பாண முஸ்லீம்களுக்கு அக்கறையில்லையா..?
-பாறுக் ஷிஹான்-
பொருத்து வீட்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் திகதி எதிர்வரும் ஜனவரி மாதம் 15 திகதி நிறைவுறும் நிலையில் அதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்குவதில் யாழ் முஸ்லீம்கள் அக்கறையின்றி உள்ளனர்.
இப்பகுதியில் உள்ள சில கிராம சேவகர்கள் அம்மக்களை குறித்த வீட்டுத்திட்டத்திற்கு தனிப்பட்ட விண்ணப்பிக்க வேண்டாம் என கூறுவதாகவும் ஆனால் அங்குள்ள அரசியல் வாதிகள் சிலர் வீட்டுத்திட்ட விண்ணப்பங்களை தனிப்பட்ட முறையில் வழங்கி விண்ணப்பிக்குமாறு கூறுவதனால் மக்கள் குழம்பிப் போய் உள்ளனர்.
அத்துடன் அப்பகுதியில் செல்வாக்கு பெற்ற அரசியல் கட்சி ஒன்றின் அழுத்தத்தின் காரணமாக மீள்குடியேற்றம் புனா்வாழ்வு சிறைசாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்து சமய விவகார அமைச்சா் டி.எம் சுவாமிநாதனுக்கு எதிராகவும் அவருக்கு ஒரு பாடத்தை வழங்க வேண்டும் என சில கிராம சேவகர்கள் இதற்கு உடந்தையாக செயற்பட்டு வருகின்றனர்.
இதற்கு அக்கட்சி சார்ந்த சிலரும் மக்களுக்கு தேவையற்ற விடயங்களை கூறி பொருத்து வீட்டு திட்டத்தை நிராகரிக்க வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.
எனினும் என்ன முட்டுக்கட்டை வந்தாலும் யார் தடுத்தாலும் பொருத்து வீட்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என மீள்குடியேற்றம் புனா்வாழ்வு சிறைசாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்து சமய விவகார அமைச்சா் டி.எம் சுவாமிநாதன் தெரிவித்து வருகின்றார்.
அவர் தனத கருத்தில் இப்பொழுது பல பிரச்சனைகள் இருக்கின்றது. மண் இல்லை. வேலைகளைச் செய்வதற்கான மேசன்மார்கள் இல்லை. இவ்வாறு பல பிரச்சினைகள் இருக்கின்றன.
எனவே தான் பொருத்து வீட்டுத் திட்டத்தின் மூலம் ஒரு வீட்டை நான் சுன்னாகத்திலே கட்டி இருக்கின்றேன். இந்த வீட்டை எத்தனையோ பேர் சென்று பார்வையிட்டு இருக்கின்றனர்.
ஆனாலும் இவற்றுக்கு எதிர்ப்பை மக்கள் தெரிவிக்கவில்லை. சில அரசியல் வாதிகள் தெரிவித்து இருக்கின்றனர்.
இந்த அரசியல்வாதிகள் எதிர்ப்பதற்கு காரணமம் உள்ளது அவர்களுக்கு இவ்வீட்டு திட்டத்தினால் மண் கல் தொடர்பான ஓடர்கள் இன்மையினால் அவ்வாறு செய்கின்றனர்.எத்தனை நாட்களுக்கு அம்மக்களை இப்படி இருக்க செய்ய முடியும்.
எனவே அதனைப்பற்றி இச்சந்தர்ப்பத்தில் நான் பேச விரும்பவில்லை. எனினும் இத்திட்டம் முற்றுமுழுதாக மக்கள் நலம் சார்ந்ததே. ஆகவே இத்திட்டம் விரைவில் அமுல்ப்படுத்தப்படும் என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பொருத்து வீட்டுத்திட்டத்திற்கு விண்ணப்பிக்காத மக்களுக்கு மாற்றுத்திட்டம் ஏதும் இருக்கிறதா என்ற கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கவில்லை என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
எனவே கிடைக்கின்ற சந்தர்ப்பத்தை யாழ் முஸ்லீம்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு எவரும் அம்மக்களை இன்னும் ஊக்கப்படுத்தவில்லை.
அத்துடன் முஸ்லீம் மக்களின் பெரும் கட்சிகள் இந்த விடயத்தில் மௌனம் காப்பதுடன் கட்சி பிரச்சினைகளில் அடிபட்டு காணப்படுகின்றன.
இது தவிர மீள்குடியேற்றம் புனா்வாழ்வு சிறைசாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்து சமய விவகார இராஜாங்க அமைச்சர் ஏ.எல்.எம் ஹிஸ்புல்லா கூட எதுவித கருத்துக்களையும் தெரிவிக்காமல் உள்ளமை பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.
Post a Comment