ராஜித கூறுவது உண்மைக்கு புறம்பானது - பொது பலசேனா
பொதுபல சேனாவின் பின்னணியிலிருந்து அளுத்கமை சம்பவத்திற்கு தூண்டுகோலாக கோத்தபாய ராஜபக்சவே காணப்பட்டார் என்று அமைச்சர் ராஜித கூறுவது உண்மைக்கு புறம்பானது என பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது.
எனவே குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக பொதுபல சேனா அமைப்பின் மீது குற்றம் சுமத்தும் அமைச்சர் ராஜிதவுக்கு எதிராக வழக்குத் தொடுக்க போவதாக அவ்வமைப்பின் பணிப்பாளர் திலாந்த விதானகே தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவே இருந்தார் என்று கூறியுள்ளமை தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
அமைச்சர் ராஜித சேனாரத்ன என்பவர் என்றும் உண்மைகளை கூறுகின்ற ஒருவர் அல்ல. அவரின் பேச்சு குறுகிய அரசியல் நோக்கங்களை மையப்படுத்தியதாகவே அமைந்திருக்கும் அவ்வாறு தான் தற்போது அவர் பொதுபல சேனா அமைப்பின் மீது உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அரசியல் லாபம் ஈட்ட முயற்சிக்கின்றார்.
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கும் பொதுபல சேனா அமைப்பிற்கும் எந்த தொடர்புகளும் இல்லை. அளுத்கமை சம்பவத்தின் பின்னாலும் நாம் வன்முறைகளை தூண்டவில்லை.
இந்தச் சம்பவத்தின் போது அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் காரசாரமான கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தமையினை நாம் மறுக்கவில்லை இருப்பினும் தாக்குதல்களை நாம் மேற்கொள்ளவில்லை.
அதேநேரம் அளுத்கமை பள்ளிவாசளுக்கு மதக்கடமைகளை நிறைவேற்றும் முகமாக சென்றுவந்தவர்கள் மீது தாக்குதல் நடத்துமாறு நாம் வன்முறைகளை கட்டவிழ்த்துவிடவில்லை பள்ளிவாசல் நிர்வாகிகள் இராணுவத்தின் மீதும் சந்தேகத்தினை வெளியிட்டிருந்தனர் எனவே இந்த சம்பவத்தின் பின்னால் பொதுபல சேனா உள்ளது என கூறுகின்றமையானது உண்மைக்கு புறம்பான விடயமாகும்.
நாம் முஸ்லிம் மக்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டதாக குற்றம் சாட்டுகின்ற அமைச்ச்ர ராஜித குறுகிய அரசியல் நோக்கங்களை மையப்படுத்தி செயற்படுகின்றார் எனவே அவர் மீதும் விரைவில் வழக்கு தொடுப்போம் என்றார்.
விடிவெள்ளி
அடபொதுபல! எல்லா௫ம் சொல்வது பொய் என்றால்,அப்ப உண்மை மட்டும் சொல்றது நீங்கதானா அண்டப்புழுகுகா
ReplyDeleteNeenga gotha ellarum irundu eduttha phota enna????
ReplyDeleteராஜித கூறுவது 100% சரி.
ReplyDeleteThere are photos where Gotabaya Rajapakse was with bbs leader....then what is that Dilantha Withanage? ???
ReplyDelete