மரணப்பொறிக்கு எதிராக போராடுவோம் - விமலுடைய கட்சி மாநாடு நாளை
தேசிய சுதந்திர முன்னணியின் விசேட மாநாடு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாளை பிற்பகல் 3 மணியளவில் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளதாக முன்னணி தெரிவித்துள்ளது.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச பாரிய நிதி மோசடி விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த மாநாடு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
‘பிரிவினைவாதத்தை வெற்றிபெறச் செய்யும் ரணிலின் மரணப்பொறிக்கு எதிராக போராடுவோம் என்ற தொனிப்பொருளில் இடம்பெறவுள்ள இம்மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சில முக்கிய முடிவுகளை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னணியின் இந்த விசேட மாநாட்டில் ஒன்றிணைந்த எதிரணியைப் பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்தன, வாசுதேவ நாணயக்கார மற்றும் உதய கம்மன்பில உள்ளிட்ட பலரும் கட்சி அமைப்பாளர்களும், ஆதரவாளர்களும் கலந்து கொள்வார்கள் என தேசிய சுதந்திர முன்னணி குறிப்பிட்டுள்ளது.
Post a Comment