நாட்டுக்காக ஜனாதிபதி இதுவரை, எதனையும் செய்யவில்லை
பௌத்த பிக்குமாருக்கு கைநீட்டிய அரசாங்கம் ஒன்று வரலாற்றில் என்றுமே முன்னோக்கி நகர்ந்ததில்லை என முருத்தொட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டில் தற்போது பல பிரச்சினைகள் உருவாகியுள்ளன. இதற்கு நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் நேரடியாக பொறுப்புக் கூறவேண்டும். இவர்கள் செய்த விண்ணுக்கும் மண்ணுக்கும் ஒவ்வாத அழிவுகளுக்கு இயற்கையும் எதிராக மாறியுள்ளது.
இதற்கு நாட்டில் ஏற்படும் அனர்த்தங்கள் சாட்சியமாகியுள்ளன. இப்படியான நிலைமையில் துறவிகள் குரல் அமைதியாக இருப்பது பொருத்தமானதல்ல. இதற்கு எதிராக அணித்திரள்வோம்.
ஹம்பாந்தோட்டையில் நடந்த சம்பவத்தின் போது அரசாங்கத்தின் அமைச்சர்களது குண்டர்கள் தாக்குதல் நடத்தினர். அன்று பின்வாங்கி சென்றாலும் இனிமேல் அவ்வாறு பின்வாங்கி செல்ல மாட்டோம்.
அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக வீதியில் இறங்க தயாராக உள்ளோம்.
ஹம்பாந்தோட்டை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் சுதந்திரமாக காலத்தை கடத்துகின்றனர். இவர்கள் சம்பந்தமான விடயத்தில் ஜனாதிபதி அமைதி காத்து வருகின்றார்.
ஜனாதிபதி அமைதியாக இருந்த காலம் போதுமானது. சம்பவம் குறித்து தேடி அறிய காலம் வந்துள்ளது.
மேலும் தற்போதைய ஜனாதிபதி நாட்டின் நிறைவேற்று ஜனாதிபதியாக நாட்டுக்காக இதுவரை எதனையும் செய்யவில்லை. பிரதமரின் பணய கைதியாக அவர் செயற்பட்டு வருகிறார்.
நாட்டிற்குள் இருக்கும் பிரச்சினைகளின் போதா குறைக்கு அரசாங்கம் ஓரின சேர்க்கை தொடர்பான பிரச்சினையை முன்னுக்கு கொண்டு வந்துள்ளது. இப்படியான நிலைமைக்கு நாட்டை கொண்டு செல்லாது அவற்றை தனிப்பட்ட ரீதியில் செய்து கொள்ளுமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.
விமல் வீரவங்ச சிறையில் அடைக்கப்பட்டமையானது அரசியல் பழிவாங்கல். விமல் சிறையில் அடைக்கப்பட்டாலும் அவர் போன்ற தலைவர்கள் எதிர்காலத்தில் உருவாகி வருவார்கள்.
அரச வாகனங்களை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இப்படியான குற்றங்களுக்கு சிறையில் அடைக்க வேண்டுமாயின் அனைத்து நிறுவனங்களிலும் மேல் மட்ட அதிகாரிகளில் இருந்து கீழ் மட்ட அதிகாரிகள் வரை அனைவரையும் சிறையில் அடைக்க வேண்டும்.
எதிர்வரும் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்தில் விமல் வீரவங்சவின் குரலை இல்லாமல் செய்ய அவரை சிறையில் அடைத்துள்ளனர் எனவும் முருத்தொட்டுவே ஆனந்த தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆசாமி என்ன சொல்கின்றார்??? சாமிகளுக்கு ஓர் உணர்வூட்டு இன்று வந்துள்ள வறட்சிக்கு காரணம் மதத்தின் நற்பண்புகளை தெரிந்த நீங்கள் அதனை வாழ்கையில் எடுத்துக்காட்டாமல் ரவுடிகளாக மாரிவிட்டீர்கள் அடுத்தவர்களின் உருமைகளை தடுத்து அவர்களுக்கு அனியாயம் செய்கின்றீர்கள் பாவம் உங்களை தண்டிக்க வந்துள்ள அல்லாஹுவின் வேதனை சில நல்ல பொதுமக்களையும் பாதிக்கின்றது!விமல் வீரவன்ச குற்றம் செய்து தண்டனையை பெற்றுள்ளான் அவன் போன்று ஏனையவர்களும் தவறு செய்திருந்தால் அவரை பற்றி நீங்கள் முறைபாடு செய்யுங்கள் மாற்றமாக குற்றம் செய்தவர்களை தண்டிக்க வேண்டாமென்று கூறாதீர் இது உங்களுக்கு அழகில்லை.
ReplyDelete