Header Ads



மொஹமட் சியாம் கொலையின், மரண தண்டனைகைதி பட்டம் பெற்றார்

பம்பலபிட்டி கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் சியாம் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் லக்மிணி இந்திக பமுணுசிங்க கலைமானி பரீட்சையில் சித்தியடைந்துள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் அறிவித்துள்ளது.

சிறைச்சாலையில் இருந்தவாறு படித்த அவர், சிறைச்சாலை திணைக்களத்தின் அனுமதியுடன் அண்மையில் தனது பட்டப்படிப்பு பரீட்சைக்கு தோற்றியுள்ளார்.

இன்று (05) கொழும்பு பண்டாரநாயக்கா மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ள பட்டமளிப்பு விழாவில், அவர் பட்டம்பெறவுள்ளதாக வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரி சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

சிறைச்சாலை அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

குறித்த கொலை வழக்கில் முன்னாள் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் வாஸ் குணவர்தன, அவரது மகன், உப பொலிஸ் பரிசோதகர் லக்மிணி இந்திக பமுணுசிங்க (மேல் மாகாண பிரதிப் பொலிஸ் மாஅதிபர் காரியாலயம் வடக்கு) மற்றும் பிரதி பொலிஸ் மாஅதிபர் காரியாலயத்தில் கடமை புரியும் மூன்று கான்டபிள்கள் உள்ளிட்ட ஆறு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.