Header Ads



'என்ன செய்தோம்' என்று கேட்பவர்களுக்கு இதுவே பதில்..!

யுத்தத்தால் அதிகமாக பாதிக்கப்பட்ட வடக்கிற்கு விஷேட அபிவிருத்தி திட்டங்களை கொண்டு வரவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இன்று அலரிமாளிகைளில் பலம் மிக்கதோர் இலங்கை திட்டமிட்தோர் பயணம், அனைவருக்குமு் நன்மை பயக்கும் ஓர் பொருளாதாரம் என்ற தொணிப்பொருளில் இடம் பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,

யுத்தத்தால் அதிகமாக பாதிக்கப்பட்டது வடக்கே அந்த ரீதியில் பொருளாதார அபிவிருத்தியை மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளது.

அதன் படி விவசாயம், சுற்றுலா உட்பட கைத்தொழில் போன்று அனைத்து வகையிலும் அபிவிருத்தியினை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்.

இதன் காரணமாக அபிவிருத்தில் முன்னேற்றமடைவதோடு கவர்ச்சிகரமான வாழ்க்கையினை பெற்றுக் கொள்ள முடியும்.

நாம் இந்தியா, சீனா போன்று பெரிய நாடுகள் அல்ல மிகச் சிறிய நாடு எமது பலமே இலங்கையின் அமைவிடமே. இந்து சமுத்திரத்தில் முக்கிய இடத்தில் இலங்கையில் அமைந்துள்ளது.

இதனை மையமாகக் கொண்டு பொருளாதார கேந்திர நிலையமாக இலங்கை மாற்றப்படும். பலம் மிக்கதோர் நாடாக இலங்கை வளர்ச்சியடையும்.

இதன் காரணமாகவே நாம் துறைமுகங்களை அபிவிருத்தி செய்து கொண்டு வருகின்றோம். அது மட்டுமல்லாமல் தொழில் நுட்பம், கைத்தொழில், இலத்திரனியல் உற்பத்தி, கடற்றொழில், சுற்றுலாத்துறை அனைத்தையும் முறையாக பயன்படுத்தி பாரிய அளவிலான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க உள்ளோம்.

நாடு முழுவதும் பொருளாதார கேந்திர நிலையங்கள் அமைக்கப்படும். இதன் காரணமாக மகிழ்ச்சி மிக்க கவர்ச்சிகரமானதொரு வாழ்வு இலங்கை மக்களுக்கு அமைத்துக் கொடுக்கப்படும்.

அத்தோடு நாட்டில் இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புகள் பெற்றுக்கொடுக்கப்படும், 5 இலட்சம் பெறுமதியான வீடமைப்பு உதவிகளும் பெற்றுக்கொடுக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

நாட்டை அபிவிருத்தியோடு பலம்மிக்கதோர் நாடாக உருவாக்குவதே இப்போதைய ஆட்சியின் திட்டம், என்ன செய்தோம் என்று கேட்பவர்களுக்கு இதுவே பதில் அந்தவகையில் அனைத்து செயற்பாடுகளும் முன்னெடுத்து செல்லப்படும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.

2

யாழ். பலாலி விமானத்தளம், பிராந்திய விமானத்தளமாக அபிவிருத்திசெய்யப்படும். அது இலங்கைக்கு மாத்திரமல்லாமல் தென்னிந்தியாவுக்கும் சேவைகளைமேற்கொள்ளும் என்று இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு குறிப்பாக தமிழகத்துக்கு தமிழ் பேசும் வடக்கு பகுதியை தொடர்புபடுத்தும்வகையில் இந்தியா அதனை அபிவிருத்தி செய்யவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய அவர், காங்கேசன்துறை துறைமுகம்அபிவிருத்தி செய்யப்படும்போது தமிழகத்துடனான தொடர்பு மேலும் அதிகரிக்கும் என்று அவர்சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை திருகோணமலை துறைமுகம் இந்தியா, சிங்கப்பூர் மற்றும் ஜப்பானியமுதலீடுகளின் கீழ் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக ரணில் விக்ரமசிங்கதெரிவித்துள்ளார்.

இதனிடையே இந்தியாவுடன் எட்கா உடன்படிக்கை இந்த வருடத்தில் கைச்சாத்திடப்படவுள்ளது

இதன்கீழ் இலங்கையில் முன்னேற்றங்கள் ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.