கனடா பள்ளிவாசல் தாக்குதல் சந்தேகநபர், டிரம்பின் தீவிர ஆதரவாளர்
கனடாவின் கியுபெக் நகர பள்ளிவாசலில் ஞாயிற்றுகிழமை இரவு இடம்பெற்ற தாக்குதல் குறித்து கனடா மற்றும் உலகம் பூராகவும் உள்ள தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பல்கலைக்கழக மாணவன் ஒருவன் இந்த கொடுமையான படுகொலையை மேற்கொண்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளான். இவன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தீவிர ஆதரவாளன் எனவும் ஒரு பிரான்ஸ் தீவிர வலதுசாரி தலைவன் மற்றும் பிரிவினைவாத Parti Quebecois வை சேர்ந்தவனெனவும் அவனது முகநூல் கணக்கில் இருந்து தெரிய வந்துள்ளதாக அறியப்படுகின்றது.
27வயதுடைய Alexandre Bissonnette இவன் மீது ஆறு கொலை மற்றும் ஐந்து கொலை முயற்சி குற்றங்கள் சுமத்தப்பட்டு திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான்.
இரண்டாம் உலகபோர் படை வீரர் ஒருவரின் பேரனாவான். ஞாயிற்றுகிழமை இடம்பெற்ற சூட்டு சம்பவத்திற்கான உந்துதல் என்னவாக இருக்கும் என தாங்கள் நம்பும் தகவலை பொலிசார் வெளியிடவில்லை. இருப்பினும் பிரதமர் ட்ரூடோ இதனை ஒரு பயங்கரவாத செயல் என கண்டித்துள்ளார்.
Bissonnette யின் பெயரில் உள்ள முகநூல் சுயவிவரத்தில் இவன் “பிடித்திருக்கின்றது” டிரம்ப், பிரான்ஸ் அரசியல்வாதி Marine Le Pen, separatist Parti Quebecois மற்றும் இஸ்ரேலிய ஆயுதப்படைகள் என குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சின் தேசிய முன்னணியின் தலைவரான லி பென் வெள்ளை மேலாதிக்க வாதிகளிடமிருந்து பாராட்டுக்களை வென்ற முஸ்லீம்-விரோத மற்றும் குடியேற்றவிரோத சித்தாந்தம் கொண்டவர் என அறியப்படுபவர்.
மனிதன் ஒருவன் பள்ளிவாசலிற்குள் நுழைந்து பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தவர்களிடம் எச்சரிக்கை எதுவும் செய்யாமல் துப்பாக்கி பிரயோகம் செய்ததாக பொலிசாரும் சாட்சியங்களும் தெரிவித்துள்ளன.
மாலை நேர தொழுகை வேளையில் மரணகுவிப்பு, பீதி, காயங்கள் போன்ற அனர்த்தங்கள் ஏற்பட்டன. பிரார்த்தனையில் இருந்த ஆறுபேர்கள் கொல்லப்பட்டனர். 19பேர்கள் காயமடைந்துள்ளனர்-அனைவரும் ஆண்கள். வைத்தியசாலையில உள்ள ஐவரில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கொடூரமான சம்பவம் நாடு பூராகவும் மற்றும் உலகம் பூராகவுமே பிரார்த்தனை வழிபாடுகளையும், அனுதாப வெளிப்படுத்துதல்களையும் ஏற்படுத்த தூண்டியுள்ளது.
இவன் சார்ந்த இனத்தையோ மதத்தையோ தீவிரவாதி என்றால் அதை உலகம் ஏற்றுக்கொல்லுமா.உலகில் அமைதி வரவேண்டுமானால் பலஸ்தீன் அமைதியடைய வேண்டும்.
ReplyDeleteஇதை ஒரு முஸ்லிம் பெயர்தாங்கி செய்திருந்தால் மீடியாக்கல் என்ன சொல்லியிருக்கும்
ReplyDelete