Header Ads



சீ.ஐ.ஏ. யும், ரோவும் போட்ட கொங்கிரீட் - மைத்திரி, ரணிலினால் பிரிய முடியாது.

அரசாங்கம் எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தேர்தலை நடத்தினால், மாகாண சபைத் தேர்தலில் தோல்வியடையும் என்பதால், மாகாண சபை சட்டத்தில் திருத்தங்களை செய்து, மாகாண சபைத் தேர்தலை ஒருவருடத்திற்கு ஒத்திவைப்பது குறித்து கலந்துரையாடி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர் ஒருவர் நேற்று முன்தினம் இதனை தன்னிடம் கூறியதாக கம்மன்பில கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூறினார்.

தேர்தல் நெருங்கும் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கு மகிந்த நினைவுக்கு வருகிறார்.

கதைகளை மயக்கி அவரை தமது மேடைகளில் ஏற்றவில்லை என்றால் அவர்கள் படுதோல்வியை சந்திப்பர் என்பதை அறிவார்கள்.

தேர்தல் முடிந்தவுடன் திட்டி அவமதிப்பார்கள். ஜனாதிபதி சிறிசேன தலைவராக இருக்கும் வரை பிவித்துரு ஹெல உறுமய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் போட்டியிடாது என்று பொதுத் தேர்தல் முடிந்து ஒரு வாரத்தில் தெரிவித்தோம்.

குட்டித் தேர்தலில் நாங்கள் இணைந்து போட்டியிட்டால் மகிந்தவின் புண்ணியத்தில் வெற்றிப்பெறுவார்கள்.

அனைத்து நகர சபைகளிலும் வெற்றிப்பெறும் தரப்புக்கு இரண்டு போனஸ் ஆசனங்கள் வழங்கப்படும்.

அந்த ஆசனத்திற்கான உறுப்பினரை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் பெயரிடுவார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் தோல்வியடைந்தவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமித்தது போல், குட்டித் தேர்தலிலும் தோல்வியடைந்தவர்கள் போனஸ் ஆசனங்களுக்கு நியமிக்கப்பட்டு, தலைவர்களாகவும் உப தலைவர்களாகவும் நியமிக்கப்படுவார்கள். இதனால், இரவில் விழுந்த குழியில் பகலில் விழ முடியாது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட முடியாவிட்டாலும் பிரதமரின் தேசத்துரோக வேலைத்திட்டம் தொடர்பில் ஜனாதிபதி உண்மையில் அதிருப்தியடைந்திருந்தால், எமக்கு புதிய கூட்டணியை உருவாக்க முடியும்.

அந்த கூட்டணியின் செயலாளரை கட்சித் தலைவர்களின் இணக்கத்திற்கு அமைய நியமிக்க வேண்டுமே அன்றி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர் விரும்பியது போல் நியமிக்க முடியாது என்பதை யாப்பில் உறுதிப்படுத்த வேண்டும்.

ஜனாதிபதி சிறிசேன, ஐக்கிய தேசியக் கட்சியை கைவிட்டு வருவார் என்று நாங்கள் நம்பவில்லை. அது வாழ்வை ஆபத்தில் தள்ளும் முடிவு.

ஜனாதிபதி சிறிசேனவையும் பிரதமர் ரணிலையும் ஒரு கொள்கலனில் இறக்கி விட்டு, சீ.ஐ.ஏ. மற்றும் ரோ புலனாய்வு அமைப்புகள் கொங்கிரீட் இட்டு சென்றுள்ளனர்.

மேல் பகுதி வெளியில் இருப்பதால் இரண்டு பேருக்கும் சண்டையிட்டு கொள்ள முடியும். கீழ் பகுதியில் கொங்கிரீட் போடப்பட்டுள்ளதால், இருவரும் பிரிய முடியாது.

எனினும் ஜனாதிபதி அந்த சவாலை எதிர்நோக்க தயாரானால், நாட்டின் சார்பில் நாங்களும் அரசாங்கத்தை கவிழ்க்க தேவையான பங்களிப்பை வழங்க தயார் எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.