Header Ads



இலங்கை முஸ்லிம்களின் எதிர்காலம்

மைத்ரியின் நல்லாட்சி அமுலில் இருக்கிறது. கடந்த ஆட்சியை விட முஸ்லிம்கள் ஓரளவு நிம்மதியாக இருக்கிறார்கள் கலவரங்கள் வந்துவிடுமோ தர்காடவுனை போல் முஸ்லிம்கள் தாக்கப்படுவார்களோ என்ற அச்சம் பெரிதாக இல்லை.

சமூகமும் ஏதோ இனவாதத்துக்கு நிரந்தர தீர்வு கிடைத்துவிட்டது. இனிமேல் பெரியளவு இனவாத அச்சுறுத்தல்கள் வராது என்ற எண்ணத்தில் உள்ளார்கள் போல் எண்ணத் தோன்றுகிறது.

இன்னும் சில வருடங்களில் மீண்டும் தேர்தல் வரப்போகிறது. யஹபாலன் ஆட்சி நீடிக்குமா இல்லை துண்டு துண்டாகி சிதறிப் போகுமா? யாராலும் சொல்ல முடியாது.

இனவாதிகளின் கையும் ஓங்குவதற்கான அனைத்து வாய்ப்புக்களும் உள்ளன.

இன்னும் 10 வருடங்களிலோ அல்லது அடுத்த முறையோ ஒரு இனவாதி ஆட்சிக்கு வந்தால் நமது நிலை என்ன?

ஊடகங்களைப் பொறுத்தவரையில் ஹிரு, தெரண, நெத் இப்படியான சில முன்னணி ஊடகங்கள் வெளிப்படையாக நமக்கு எதிராக இயங்கி வருகின்றன.

ரூபவாஹினி ITN என்பவற்றை பொறுத்தவரை அரசு இனவாத அரசாக இருந்தால் அந்த ஊடகங்களும் 24 மணித்தியாலம் இனவாதத்தை தான் கக்கும்.

முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் பரம்பரை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. புதிய பரம்பரை ஈவிரக்கமில்லாமல் படுமோசமாக முஸ்லிம்களை விமர்சித்து எதிர்த்து வருவதனை இப்போதே நம்மால் பார்க்கலாம் இந்த நிலை இன்னும் 10 வருடத்தில் எப்படியிருக்கும் என கற்பனையும் செய்து பார்க்க முடியாது.

"1990 இல் இருந்த பெரும்பான்மை இன மக்கள் அல்ல இன்று இருப்பது பெருமளவு மாறிவிட்டார்கள்"

நாங்களே நமக்குள் சாதாரணமாக கதைத்துக்கொள்ளும் உண்மை இது. இப்படியே போனால் 2050 இல் இதே பெரும்பான்மை இன மக்களின் மனநிலை எப்படியிருக்கும். நாம் நிகழ்காலத்தில் மட்டுமே வாழ்ந்து பழகிவிட்டோம். நிகழ்காலத்தின் நலனை நிகழ்காலத்தின் சுயநலனை மட்டும் கருத்தில் கொண்டு வாழந்து கொண்டிருக்கிறோம்.

எதிர்காலத்தை பற்றியும் சற்று சிந்திப்போம், எதிர்கால சந்ததியினருக்கு பிரச்சினைகள் குறைந்த ஒரு சூழலை ஏற்படுத்திவிட்டு செல்ல முயற்சிப்போம்.

எமது நிகழ்காலத்தால் எதிர்கால சந்ததியினரின் நிகழ்காலத்தை நாசப்படுத்தாமல் இருப்போம். இவை சில உதாரணங்கள் மாத்திரமே சிந்தித்து செயற்பட பல ஆயிரம் விடயங்கள் நம் முன்னால் அதுவெல்லாம் நமக்கு பிரச்சினையே அல்ல.

ARM INAS

4 comments:

  1. very SUITABLE ARTICLE BY MR. ANAS. JAZAKALLAH KHAIRAN. YES OFCAUSE OUR LEADERS FROM EVERY SECTOR THINK ABOUT WHAT WILL HEPPEND AFTER 20, 30 YEARS TO OUR COMMUNITY IN SRI-LANKA AND DO THE FOUNDATION FOR THAT.

    ReplyDelete
  2. சஹோதரா, அல்லாஹ் ஒருவன்இருக்கிறான். எதிர்காலத்தை தீர்மானிப்பவன் அவனே. அவன் மீது நம்பிக்கை வைத்து உன் கடமையை சரியாக செய். மற்றதைஅவன் பார்த்துக்கொள்வான்.

    ReplyDelete
  3. To bro Anas,

    Can you share the action that you have taken towards subjected? So we can also try to adopt.

    ReplyDelete
  4. excellent. every muslim MP should know about this.

    ReplyDelete

Powered by Blogger.