ஆட்சியை கவிழ்த்து காட்டட்டும் - ரணில் சவால்
இம்மாதம் நடுப்பகுதியில் ஒரு வாரம் நான் வெளிநாட்டிற்கு செல்லவுள்ளேன். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, முடியுமானால் நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்த்து காட்டுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரதமர் ரணில் சவால் விடுத்தார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் புது வருட கொண்டாட்டம் நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது. இதன்போது ஊடகவியலாளர்கள் முன்னிலையில் நகைச்சுவைப் பாங்கில் கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2017 ஆம் ஆண்டு ஆட்சியை கவிழ்ப்பதாக கூறியிருந்தார்.
இதற்கு பிரதமரின் பதில் என்ன என்று வினவினார். இதற்கு பதிலளிக்கும் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிடுகையில் ,முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆட்சியை கவிழ்க்க முடியுமானால் இம்மாதம 16 ஆம் திகதியளவில் நான் வெளிநாடு செல்லத்திட்டமிட்டுள்ளோம்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முடியுமானால் ஆட்சியை கவிழ்த்து காட்டட்டும் என்று சவால் விடுத்தார். MM.Minhaj
Post a Comment