கனடாவில் விக்னேஸ்வரன் - தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன், பணம் சேர்ப்பு..!!
இந்த ஒளிப்பதிவில் முதல்வருக்கு பக்கத்தில் நிற்கும் நபர் தான் “கனடா உலகத்தமிழர் அமைப்பின் முக்கிய நிர்வாகி “கமல்”. இவர் தான் இந்த பணம் சேகரிக்கும் திட்டத்தின் முக்கிய புள்ளி. இவரிடம் தேசியத்தின் பல மில்லியன் சொத்துக்கள் இருக்கின்றது.
கனடாவில் “கனடா உலகத்தமிழர் அமைப்பினால்(WTM) ஒழுங்கு செய்யப்பட்ட இராப்போசன விருந்தில், வட மாகாண முதல்வர் சீ வி விக்கினேஸ்வரனின் உதவி செய்யும் அறக்கட்டளை நிதிக்காக சேகரிக்கப்பட்ட நிதியை எப்படி கொடுக்கப் போகின்றார்கள்.
கனடாவிலும் மற்றும் இலங்கையிலும் தடை செய்யப்பட்ட அமைப்புத் தான் “கனடா உலகத்தமிழர் அமைப்பு(WTM). முள்ளிவாய்க்காலிற்குப் பிறகு கனடியத் தமிழர்களால் தடை செய்யப்பட்ட அமைப்பும் WTM. இப்படி இருக்கும் தருணத்தில் எப்படி வட மாகாணசபையின் முதல்வர் இலங்கையால் தடை செய்யப்பட்ட அமைப்பினரோடு உறவு வைக்க முடியும் ?
முன்னாள் நீதியரசருக்கு நாம் சட்டம் சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை. சிலவேளை அவருக்கும் இந்த நிகழ்வை ஒழுங்கமைத்தவர்களின் பின்னணி தெரியாமல் இருக்கலாம். ஆனால், இலங்கையின் சட்டத்தின் படி குற்றமென்று சாதாரண பாமர மக்களிற்கு தெரியும்.
முள்ளிவாய்க்காலிற்குப் பிறகு, தேசியத்தின் சொத்துக்களை பதுக்கிய WTM அமைப்பு கடந்த 7 வருடமாக பாதிக்கப்பட்ட மக்களையும் மற்றும் மாவீரர் குடும்பங்களையும் மற்றும் முன்னாள் போராளிகளையும் மற்றும் அரசியல் கைதிகளையும் முழுமையாக கைவிட்ட இவர்களா தற்சமயம் முதல்வருக்கு உதவி செய்ய நினைக்கின்றார்கள் ?
இவர்களின்(WTM) கைகளை முதல்வர் இறுக்கப் பிடித்தால், அவரின் எதிர்கால அரசியல் கேள்விக் குறியாக இருக்கும்.
இந்த இணை நகரத் திட்டமெல்லாம் பம்மாத்து அரசியல் நாடகம். லண்டனிலும் மற்றும் கனடாவிலும் இணை நகரத் திட்டத்திற்கு பின்னால் நின்று செயற்படுபவர்கள், தேசியத்தின் சொத்துக்களை பதுக்கியவர்கள்.
மக்களிடம் இருந்து திரும்ப பணத்தை சேகரித்து அதை அனுப்புவதாக சொல்லி அதில் பெரும் பகுதியை இலங்கை அரசாங்கம் தடை செய்துவிட்டார்களென்று திரும்பவும் பொய் சொல்ல தயாராக நிற்கின்றார்கள் “கனடா உலகத்தமிழர் அமைப்பு”.
தேசியத்தின் சொத்துக்களை பதுக்கி வைத்திருக்கும் “கனடா உலகத்தமிழர் அமைப்பு” தங்களிடம் இருக்கும் பணத்தை ஏன் முதல்வரிடம் கொடுக்க முடியாது ?
கடிநொடி எங்கும் செல்லும் எதிலும் நுழையும் ஆனால் உண்மைகளை மட்டும் வெளிக்கொண்டு வரும்.
கடி நொடி என்ற முகநூல் பக்கத்திலிருந்து, தினக்கதிர்
ஒருபுறம் அரசாங்கம் இந்த அப்பாவி தமிழ் மக்கலை எமாற்றுகின்றது போதாதற்கு புலம் பெயர்
ReplyDeleteவாழ் சில தடைசெய்யப்பட்ட அமைப்புகள் எமாற்றியதும்மில்லாமல் தமிழ் மக்கலை காட்டி
தாங்கள் வயிறு வளர்க்கின்றனர் இது எப்பதான் முடியுமோ தெறியாது.
இந்த மக்களுக்கு எப்படித்தான் விமோர்சனம் கிடைக்குமோ?
இலங்கையில் ஒரு மாகாண முதல்வர் இலங்கை சட்டதிட்டங்களுக்கு மதிப்பளித்து சத்தியாகிரகம் செய்தே பதவி ஏற்றிருக்க வேண்டும். ஆனால் தேச துரோக தீவிரவாதிகளுடன் தொடர்பை கொண்டிருக்கும் விக்னேஸ்வரன் இனியும் தன் பதவியில் தொடர என்ன தகுதியுண்டு?
ReplyDeleteAda thuu IR MS
ReplyDeleteThis CM goes all the way to collect funds for his community while our Muslim politicians do nothing for our community. This is the difference between Hindus and Muslims. Does it really matter legal or illegal in SL??. By the way, IR MS- It is not " Sadhya Kiraham, it is Sadhya Piramanam"
ReplyDelete