ஹம்பாந்தோட்டையில் கலகம் - அறிக்கை கோரியுள்ள ரணில்
ஹம்பாந்தோட்டையில் கடந்த வாரம் இடம்பெற்ற கலகம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் விசாரணை அறிக்கை கோரியுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களை சீர்குலைக்கும் முயற்சியில் திட்டமிடப்பட்ட கலக ங்கள் ஏற்படுத்தப்படுகின்றனவா என்பது குறித்து ஆராயுமாறும் பொலிஸ்மா அதிபருக்கு பிரதமர் பணிப்புரை விடுத்து ள்ளார்.
சீன முதலீடுகளை உள்வாங்கும் நோக்கில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணியில் ஹம்பாந்தோட்டையில் முதலீட்டு வலய மொன்றை உருவாக்கும் முதற்கட்ட பணி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கடந்த 7ஆம் திகதி ஹம்பாந்தோ ட்டை மஹிந்த ராஜபக்ச துறைமுகம் அமைந்துள்ள மிரிச்சவில பிரதேசத்தில் நடைபெற்றது.
நல்லாட்சி அரசாங்கத்தின் இந்தத் திட்டத்திற்கு எதிராக பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் ஹம்பாந்தோட்டையில் முன்னெடு க்கப்பட்டதோடு கடந்த 7ஆம் திகதியும் பிக்குகள், பிரதேச மக்கள் எனப் பலரும் இணைந்து முன்னெடுக்கப்பட்டபோது பெரும் குழப்பநிலை ஏற்பட்டது.
இந்தப் போராட்டங்களுக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவும் பிறப்பிக்கப்பட்ட போதிலும் அதனை மீறி போராட்ட ங்கள் முன்னெடுக்கப்பட்டதால் நீர்த்தாரைப் பிரயோகம் மற்றும் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் என்பன நடத்தப்பட்டன. சம்பவ இடத்தில் பொலிஸ்மா அதிபரும் பிரசன்னமாகியிருந்தார்.
கலகத்தின்போது பௌத்த பிக்குகள் உட்பட பலர் காயமடைந்த்தோடு 50 பேர் வரை கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் குறித்த பகுதியில் ஏற்படுத்தப்பட்ட கலகத்திற்குப் பின்னால் சூழ்ச்சி ஏதும் இடம்பெற்றுள்ளதா என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்கும்படி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொலிஸ்மா அதிபருக்குப் பணித்துள்ளார்.
விசேடமாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த போதிலும் அதனையும் மீறி போராட்டம் நடத்தப்பட்டமை குறித்தும் கவனம் செலுத்தும்படி பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
Post a Comment