'முஸ்லிம்கள் மீது, குற்றம் சுமத்துவது தவறாகும்'
-ARA.Fareel - விடிவெள்ளி-
வில்பத்து வன சரணாலய பிரதேசத்தின் எல்லையை அதிகரிக்கும் படியும் அப்பிரதேசத்தை வனஜீவராசிகள் வலயமாக பிரகடனப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுமாறும் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அப்பகுதியின் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை உறுதி செய்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிட வேண்டும் என ஜாதிக பலசேனா அமைப்பின் செயலாளர் வட்டரக்க விஜித தேரர் தெரிவித்துள்ளார்.
வில்பத்து வன சரணாலய பிரதேசத்தின் எல்லையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கும்படி ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கோரியுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்;
‘சில இனவாத சூழல் பாதுகாப்பு அமைப்புகள் வில்பத்து பிரதேத்தை முஸ்லிம்கள் ஆக்கிரமிப்புச் செய்துள்ளதாக தவறான கருத்தினை ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளன.
சூழல் பாதுகாக்கப்பட வேண்டும். இயற்கை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றாலும் இதற்காக ஒரு இனத்தின் மீது, முஸ்லிம்கள் மீது குற்றம் சுமத்துவது தவறாகும்.
வில்பத்துவில் முஸ்லிம்கள் தமது பூர்வீக காணிகளிலேயே மீள் குடியேறியுள்ளார்கள். அவர்களுக்கு அடிப்படை வசதிகள் வழங்கப்படவில்லை.
வனஜீவராசிகளுக்காக வலயம் ஒன்றினை அறிவிக்கும் ஜனாதிபதி யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு தமது காணிகளில் மீள்குடியேற முடியாது தவிக்கும் மக்களின் நலனையும் கருத்திற்கொள்ள வேண்டும். மீள்குடியேற்ற வலய மொன்றும் கசெட் பண்ணப்பட வேண்டும்.
வில்பத்து சரணாலயத்துக்கு அண்மித்த பகுதிகளில் முஸ்லிம்கள் தமது பூர்வீக காணிகளில் மரநிழலின் கீழ் கூடாரமடித்து அவல வாழ்க்கை வாழ்கின்றனர். சூழல் பாதுகாப்பு அமைப்பினர் என்று கூறிக் கொள்ளும் இனவாதிகள் முஸ்லிம்களை காணி ஆக்கிரமிப்பாளர்களாக அடையாளப்படுத்தி யிருக்கிறார்கள். இதுவன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு தரப்பினரால் காடுகள் மோசமாக அழிக்கப்பட்டிருக்கின்றன. வில்பத்துவைப் பற்றிப் பேசும் இனவாத சூழல் பாதுகாப்பு அமைப்புகள் வில்பத்துவையே இலக்காகக் கொண்டு நாட்டில் மீண்டும் இனவாத கலவரங்களை உருவாக்க முயற்சிக்கின்றன.
இது விடயத்தில் ஜனாதிபதி மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். கடந்த கால அரசாங்கம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு மறிச்சுக்கட்டி போன்ற பகுதிகளில் காணிகள் வழங்கியிருக்கின்றமையை ஜனாதிபதி கவனத்திற்கொள்ள வேண்டும்.
பல்வேறு வழிகளில் இனவாதத்தைத் தூண்டி சுயலாபம் பெற்றுக்கொள்ள முயற்சிக்கும் அமைப்புகள் தொடர்பில் ஜனாதிபதி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
well said
ReplyDeleteThanks and excellent
ReplyDeleteஇந்த நல்லாட்சி அரசில் மனிதனை விட கல்லுக்கும் காட்டிற்கும் விலங்குகளுக்குமே முக்கியம் கொடுக்கப்படும்.அதுதாண்டா நல்லாட்சி. நாமெல்லாம் வி௫ம்பிய ஆட்சி.
ReplyDeleteallah may guide you in stright pat.
ReplyDelete