கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு செல்வோரிடம், பொலிஸார் விடுக்கும் வேண்டுகோள்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஓடுதளத்தில் புனரமைப்பு நடவடிக்கைகள் ஏற்படவுள்ளமையால், அதன் செயற்பாடுகள் மூன்று மாதங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் விமான நிலையத்தினுள் செல்லும் வாகனங்கள் மற்றும் பிரயாணிகளின் நலன் கருதி விசேட போக்குவரத்து திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
இன்று முதல் ஏப்ரல் வரை மாதம் வரை இடம்பெறவுள்ள குறித்த புனரமைப்பு நடவடிக்கை காரணமாக குறித்த திட்டத்தை அமுல்படுத்தவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
அந்த வகையில் இன்று முதல் அமுலாகும் வகையில் எதிர்வரும் நான்கு மாதங்களுக்கு தினமும் பிற்பகல் 3 மணி மற்றும் காலை 9 மணிவரை விசேட போக்குவரத்து திட்டமொன்று அமுல்படுத்தப்படவுள்ளது.
அதிவேக வீதியில் கொழும்பு மற்றும் சிலாபத்திலிருந்து வரும் வாகனங்கள்
அதிவேக வீதியின் கொழும்பு மற்றும் சிலாபத்திலிருந்து விமான நிலையத்திற்கு வரும் வாகனங்கள் விமான நிலைய பிரதான நுழைவாயினுள் நுழைந்து பழைய பி.வீ.ஜி வாயில் வழியாக புறப்படுதல் மற்றும் உள் நுழைதல் வாயிலுக்கு செல்ல முடியும்.
அதிவேக வீதி வழியாக மினுவாங்கொடை குருணாகல் நோக்கி பயணிக்கும் வாகனங்கள் குறித்த சந்தியிலிருந்து எவரியவத்தை நகரின் திசையில் திரும்பி பூமர் சந்தி கோவின்ன வீதி அடியம்பலம் ஆலய சந்தியில் மினுவங்கொடை நோக்கி அல்லது ஹினட்டியன யாகெடமுல்ல வீதி ஊடாக மினுவங்கொட நோக்கி பயணிக்க முடியும். இவ்வானங்களுக்கு கட்டுநாயக்க நைகந்த வீதி வழியாக பயணிக்க முடியாது.
விமான நிலையத்திலிருந்து அதிவேக வீதி நோக்கி செல்லும் வாகனங்கள் விமான நிலைய உள்நுழையும் பிரதான வாயில் வழியாக திரும்பிச் செல்ல முடியும்.
விமானநிலையத்திலிருந்து மினுவாங்கொட நோக்கி புறப்படும் வாகனங்கள் விமான நிலையத்தின் வெளியேறும் வாயில் வழியாக வெளியேறி நைகந்த ஊடாக மினுவாங்கொட நோக்கி பயணிக்க முடியும்.
02. மினுவாங்கொடவிலிருந்து வரும் வாகனங்கள்
மினுவாங்கொட, கம்பஹா மற்றும் குருணாகலிலிருந்து விமான நிலையத்திற்கு மாத்திரம் வரும் வானங்கள் ஆடியம்பலம் நைகந்த வீதி வழியே விமானநிலையம் வந்து வாயிலினூடாக உள்நுழைதல் மற்றும் வெளிசெல்ல முடியும்.
மினுவங்கொட கம்பஹா குருணுாகலிலிருந்து கட்டுநாயக்க அதிவேக வீதியில் விமாநிலையத்திற்கு செல்லாத வாகனங்கள் கொழும்பு குருணாகல் யாகொடமுல்ல சந்தியிலும் பீல்லவத்த குருச சந்தியிலும் திரும்பி மாதுவ பூமர சந்தி வீதி வழியேயும் ஆடியம்பலம் சந்தியில் திரும்பி கோவின்ன பூமர சந்திய வீதி வழியாக எவரிவத்த நகரின் ஊடாக சீதுவ அதிவேக வீதியை நோக்கி பயணிக்க முடியும்.
இத்திட்டத்தில் ஆடியம்பலத்திலிருந்து நைகந்த வழியாக கட்டுநாயக்க நோக்கி பயணிக்கும் பாதையின் விமான நிலையம் நோக்கி பயணிக்கும் வாகனங்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படும் என்பதோடு இதன் போது விமான நிலையித்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுமாயின் ஆடியம்பலத்திலிருந்து சந்தி வரையான மினுவங்கொட கட்டுநாயக்க பாதை முழுமையாக மூடப்பட்டு மினுவங்கொடவிலிருந்து கொழும்பு அதிவேக வீதி நோக்கி மற்றும் விமான நிலையம் நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் கோவின்ன பூமர சந்தி வழியாக எவரியவத்த நகரிற்கு வந்து சீதுவ வழியாக கொழும்பு நோக்கி அனுப்பப்படும்.
எனவே இது குறித்து பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் பொறுப்புடன் செயற்படுமாறு பொலிஸ் தலைமையகம் கேட்டுக் கொண்டுள்ளது.
Post a Comment