Header Ads



மனித குலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்திய வல்லரசுகள், இலங்கைக்கு ஆலோசனை

இயற்கை வளங்களை பாதுகாக்கத் தவறினால், இலங்கை மக்களின் இருப்புக் குறித்த சவால் எழும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே ஜனாதிபதி இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அபிவிருத்திப் பணிகளுக்காக வளிமண்டலத்தில் தீய வாயுக்களைச் சேர்த்து உலக வெப்பநிலையை அதிகரித்து மனித குலத்திற்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்திய வல்லரசுகள் இலங்கைக்கு ஆலோசனைகளை வழங்கி வருவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை ஒருபோதும் பிற்போட முடியாது. இந்த நாடுகள் இயற்கை பெறுமானங்களை புறக்கணித்து செயற்படுகின்றன.

இதன் காரணமாக மனிதர்களும் ஏனைய உயிரினங்களும் உயிர் வாழ்வது பெரும் சவாலாக மாறியுள்ளது.

இலங்கையை இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் நாடாக மாற்ற வேண்டுமாயின், வன வள அடர்த்தியை 50 சதவீதம் வரையிலாவது உயர்த்த வேண்டும்.

இயற்கை வளங்களை பாதுகாக்கத் தவறும் பட்சத்தில், இலங்கை மக்களின் இருப்புக் குறித்த சவால் எழும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.