Header Ads



ஒற்றுமை நல்லிணக்கத்தை கட்டியெழுப்பவே, தேசிய அரசாங்கத்தை உருவாக்கினோம்

தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்புவதே தேசிய அரசாங்கத்தின் நோக்கம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு காலி முகத்திடலில் நிர்மாணிக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான நத்தார் மரத்தை மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்படும் இறுதி நிகழ்வு இன்று இடம்பெற்றது.

இதன்போது நத்தார் மரத்தை திறந்து வைத்து உரையாற்றியபோதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள பல்வேறு இன மக்களையும் ஒன்றிணைப்பதற்காகவும், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தேசிய அரசாங்கத்தை உருவாக்கினோம் என்றும் கூறியுள்ளார்.

5 comments:

  1. சும்மா பொய் சொல்லி முஸ்லிம்களின் வாக்குகளை கொள்ளையடித்து வரும் யூ என் பி யின் தற்போதய அரசியல்
    பற்றிய நிலைபாட்டில் வரும் காலத்தில் முஸ்லிம்கள் கவனம் செலுத்த வேண்டும்...

    ReplyDelete
  2. ஐயா! வாயிலிருந்து வருவதல்ல நல்லிணக்கம். மாறாக உள்ளத்திலிருந்து வெளியாகி செயலின் ஊடாக மலரவேண்டும். உள்ளங்கள் இருளடைந்து கிடக்கும்போது நல்லிணக்கமாவது தேசியவாதமாவதும் நிலாச்சோறுதான். முடிந்தால் உங்களது நீதிக்குப் பொறுப்பானவரை கட்டுப்படுத்திக்காட்டுங்கள் பார்க்கலாம். நீங்களே பொம்மலாட்டம் நடாத்துகின்றபோது முஸ்லிம்களே! முஃமீன்களே இச்சாக்கடை அரசியல்வாதிகளிடம் சரணாகதியடையாமல் அள்ளாஹ்வின்பால் மீண்டுவாருங்கள். அவன் எம்மை மன்னித்து இரட்சிப்பதற்கு காத்திருக்கின்றான். தாயிலும் பார்க்க 70 மடங்கு இரக்கமுடையவன் அந்த அள்ளாஹ்!

    ReplyDelete
  3. என்ன நல்லிணக்கம் ஏற்படப்பட்ப்போகுது.நல்லிணக்கத்தை சீரழிக்கும் பயங்கரவாதிகளுடன் உங்களின் பிரதி நிதியான (அ)நீதி அமைச்சரை நியமித்து உங்களின் காரியங்களை நடத்திக்கொண்டு இருக்கிறீர்கள் உங்களின் தலைவர் பிரதிநிதிகளை வைத்து வேலை சரியாக நடக்குதில்லை என்ற காரணத்தால் அவரே நேரடியாக களத்தில் இறங்கி சிறுபான்மையை ஒடுக்கும் காரியத்தில் இறங்கியுள்ளார்.எதிர் வரும் உள்ளுராச்சி தேர்தலுக்காக நீங்கள் இரண்டு கட்சியும் முஸ்லிம்களை பலிகொடுத்து உங்களின் ஆட்டத்தை நிறைவேற்ற களத்தில் இறங்கியுள்ளீர்கள்.வரும் தேர்தலில் உங்களையும் எங்களையும் படைத்த அந்த அல்லாஹ் நல்லதொரு பாடத்தை உங்கள் இரு தரப்பாருக்கும் புகட்டுவான் அப்போது தெரியும் நீங்கள் நம்பிக்கொண்டு இருக்கும் இனவாத பயங்கரவாதிகளின் செயற்பாடுகள்.உங்கள் கண் முன்னாள் ஒருவர் கேவலப்பட்டு திரியும் காட்சி இதற்க்கு சாட்சி.

    ReplyDelete
  4. உங்கள் நிலைப்பாடு சேற்றில் நாட்டிய மரம் போல

    ReplyDelete
  5. இவர்கள் தழிழ் மக்களுக்கும் காலம காலமாக இப்படித்தான் செய்தார்கள்.நயவஞ்கம்.இவர்களால் சிறுபான்மையினருக்கு எந்தசம உரிமையும் வழங்கமுடியாது. எல்லாம் பம்மாத்துதான். எல்லா அரசியல்வாதிக்கும் இது உறவை தெரியும்.அப்பாவி மக்கள்தான் பாவம்.உறவை இழந்தோம் உணர்வையும்.இப்போ உரிமையும் உயிர்ம்தான் உள்ளது இழப்பதற்கு. இதில் எதை முதலில் இழப்பது ? ? ?

    ReplyDelete

Powered by Blogger.