முஸ்லிம் சமூகம் இன்று, அமைதியிழந்து தவிக்கின்றது - ஹலீம்
வில்பத்து சரணாலயம் விஸ்தரிக்கப்பட்டு வனஜீவராசிகள் வலயமாக அந்தப் பிரதேசம் பிரகடனப்படுத்தப்படுவதான அறிவிப்பு தொடர்பில் முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்துக் குறித்து கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் ஹலீம் வெளியிட்ட கருத்து,
முஸ்லிம் சமூகம் இன்று அமைதியிழந்கு தவிக்கின்றது. நெருக்கடியான, மிகவும் மோசமான சோதனை மிகுந்த காலகட்டத்திலே நாங்கள் இருக்கின்றோம். நமது சமூகத்திற்கெதிரான பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. தினமும் வௌ;வேறு வடிவங்களில் அவை தாண்டவமாடுகின்றன. இதனால் நாங்கள் பாதிப்படைகின்றோம். ஜனாதிபதி மைத்திரிபால வில்பத்துப் பிரச்சினையை ஒரு சாராரின் நியாயங்களைக் கேட்டே கையாளுகின்றார்.
அதன் மூலமே வில்பத்து எல்லையை விஸ்தரிப்பதான முடிவை மேற் கொண்டுள்ளார். இது தொடர்பில் சம்பந்தப்பட்டிருக்கும் மக்களினதும், அவர்களின் பிரதிநிதியான அமைச்சர் ரிஷாத் பதியுதீனதும் கருத்துக்களைக் கேட்டறிந்து செயற்பட்டிருக்க வேண்டும். இறுதி முடிவை எடுக்கும் போது இவர்களிடம் கேட்டிருந்தால் இந்தப் பிரச்சினை இந்தளவு தூரம் விஸ்வரூபமாக மாறியிருக்காது. இந்த நிலையில் முஸ்லிம் எம்பிக்கள் அனைவரும் ஏகமனதான முடிவொன்றை எடுத்து பிரதமருடன் முதலில் பேச்சு நடத்துவோம், அதன் பின்னர் ஜனாதிபதியுடன் பேசி இதற்கான தீர்வுக்கு முயற்சிப்போம். கடந்த காலங்களில் பொதுபலசேனா முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொண்ட அட்டகாசங்களை நாம் ஜனாதிபதியிடம் மிகவும் தெளிவாக எடுத்துணர்த்தியுள்ளோம். இவர்கள் தொடர்பில் எமக்கு நிறையப் பிரச்சினைகளுண்டு. இந்தப் பிரச்சினை இப்போது வேறுரூபத்தில் வில்பத்தாக கிளம்பியுள்ளது.

-சுஐப் . எம் . காசிம்-
இந்தப் பிரச்சினையின் வடிவம் - முஸ்லீம்கள் தொடர்பாக ஜனாதிபதியும் அரசும் எவ்வாறான அணுகுமுறையை மேற்கொள்ள விளைகின்றன என்பதற்கான பட்டவர்த்தனமான ஒரு சான்றாகும்.
ReplyDeleteஇதனுடைய தாக்கம் நேரடியாக முசலிப்பிரதேச முஸ்லீம்களுக்கும் மறைமுகமாக இலங்கை முஸ்லீம்களுக்கும் உள்ளது.
இரன்டு தசாப்தகால அகதி வாழ்க்கையில் அல்லலுற்று அவதியுற்ற எமது மக்களுக்கு அரசு வளங்க நினைக்கின்ற பரிசா இது ????
ஜனாதிபதி அவர்களே - நீங்கள் உண்மையாளராக இருந்தால் அழையுங்கள் எங்களை - நாங்கள் எடுத்துரைக்கிறோம் உண்மையும் யதார்த்தமும் என்ன என்று தெழிவாக உங்களுக்கு
But at the same time you must be know you are enjoying perks and privilege on the sorrow of Muslim.
ReplyDeleteYOU ALL WERE ELECTED AND SELECTED TO SPEAK ALL THESE IN THE CABINET AND THE PARLIAMENT.
ReplyDeleteஇன்னும் நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் அவனுக்காக போராட வேண்டிய முறைப்படி போராடுங்கள்; அவன் உங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்; இந்த தீனில் (மார்க்கத்தில்) அவன் உங்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை; இது தான் உங்கள் பிதாவாகிய இப்றாஹீமுடைய மார்க்கமாகும்; அவன்தாம் இதற்கு முன்னர் உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான். இ(வ்வேதத்)திலும் (அவ்வாறே கூறப் பெற்றுள்ளது); இதற்கு நம்முடைய இத்தூதர் உங்களுக்குச் சாட்சியாக இருக்கிறார்; இன்னும் நீங்கள் மற்ற மனிதர்களின் மீது சாட்சியாக இருக்கிறீர்கள் எனவே நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள் இன்னும் ஜகாத்தைக் கொடுத்து வாருங்கள், அல்லாஹ்வைப் பற்றிக் கொள்ளுங்கள், அவன்தான் உங்கள் பாதுகாவலன்; இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன்; இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன், இன்னும் மிகச் சிறந்த உதவியாளன்.
ReplyDelete(அல்குர்ஆன் : 22:78)
Positive approach of Min. Haleem is most welcome. May allah grant him all success in his endeavours
ReplyDeleteAaraaroo Aareerarooo Thaayaana thaai ivaroo thangarazath
ReplyDeletether ivaroo !!!!!