முஸ்லீம் வட்டாரங்களுக்கு முன்னுரிமை - சுப்யான் சுப்யான்
வடக்கு மாகாணத்தில் முஸ்லீம் மக்கள் மீள்குடியேறுவதற்கான நடவடிக்கைகளை தற்போது அரசாங்கம் எடுத்து வருவதற்கு முழு அளவிலான ஒருங்கிணைப்பினை அமைச்சர் ரிசாத் பதியுதீன் மேற்கொண்டுள்ளதாக என யாழ் கிளிநொச்சி மாவட்டங்களின் முஸ்லீம் மக்களின் மீள்குடியேற்ற செயலணியின் இணைப்பாளர் பி.ஏ.எஸ்.சுப்யான் தெரிவித்தார்.
யாழ் முஸ்லீம் மாதர் அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த வியாழக்கிழமை(05) வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு யாழ் கிளிநொச்சி மாவட்ட பணிமனையில் யாழ் கிளிநொச்சி மாவட்ட முஸ்லீம் மக்களின் மீள்குடியேற்ற செயலணியின் இணைப்பாளர். பி.ஏ.எஸ்.சுப்யான் தலைமையில் நடைபெற்ற போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்
வடக்கு மாகாணத்தில் முஸ்லீம் மக்கள் மீள்குடியேறுவதற்கான நடவடிக்கையின் அங்கமாக ஒரு கோடியே பதினாறு லட்சம் ரூபா செலவில் 16 வேலைத்திட்டங்கள் மீள்குடியேறவுள்ள முஸ்லீம் வட்டாரங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் முதற்கட்டமாக 200 பேர்களுக்கான வீடமைப்புத்திட்டங்களுக்கான விண்ணப்படிவங்களும் வழங்கப்படவுள்ளது.இதில் யாழ்ப்பாணத்தில் 200 வீடுகளும் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்திற்கு 100 வீடுகளும் வழங்க ஏற்பாடாகி உள்ளது.
மேலும் காணி உரிமைகள் இல்லாதவர்களும் வீடமைப்பு தேவைகள் என்று விண்ணப்பங்களை சமர்ப்பித்து இருக்கின்றார்கள்.இதில் யாழ் மாநகர சபையில் உள்ள பகுதிகள் மற்றும் முஸ்லீம் வட்டார ங்களிலும் மக்களின் கோரிக்கைக்கு இணங்கலாக நாங்கள் பார்வையிட்டோம்.அவ்வாறான காணிகள் உள்ள இடங்கள் என்பன எதுவும் இப்பகுதிகளிலும் இல்லை. அதனால் இங்கு மீள்குடியேறுவதற்கான நடவடிக்கை எடுக்கமுடியாது அதில் எந்தோரு பயனும் இல்லை. இதன் காரணமாக தென்மாராட்சி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும் முஸ்லீம் மக்கள் மீள்குடியேறுவதற்கான சகல நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது .
இது ஒரு குடியிருப்பு திட்டமாக மாற்றுவதற்கான நடவடிக்கையாக இருக்கும் அத்துடன் இதனை தவிர கிளிநொச்சி மாவட்டத்திலும் நாச்சிக்குடாவில் முஸ்லீம் மக்கள் மீள்குடியேறுவதற்கான காணிகள் இருக்கின்றன.மேலும் அங்கு குடியேறும் மக்களுக்கான வீடமைப்புகள் கட்டிகொடுக்கவும் ஏற்பாடாகி உள்ளது.
யாழ் வேலணைப்பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மண்கும்பான் பிரதேசத்திலும் உங்களுக்கான வீடமைப்பு மற்றும் காணிகள் வழங்கவும் எதிர்பார்த்துள்ளோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment