Header Ads



பொலிஸ் அதிகாரியை கடித்து, விகா­ர­மான முறையில் செயற்­பட்­ட பெண் கைது

பொலிஸ் நிலை­யத்­துக்குள் சென்ற பெண் ஒருவர் அங்கு கட­மை­யி­லி­ருந்த பொலிஸ் அதி­காரி ஒரு­வரை தாக்­கி­ய­தோடு அவரின் கையைக் கடித்து காயப்­ப­டுத்­தி­யுள்­ள­தாக கல்­க­முவ பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

கடந்த 23 ஆம் திகதி மாலை மது­போ­தையில் பொலிஸ் நிலை­யத்­துக்குள் சென்ற இந்தப் பெண், பொலி­ஸாரை தகாத வார்த்­தை­களால் திட்டி கலகம் விளை­வித்­துள்ள நிலையில் அதனை தடுப்­ப­தற்­காக முயற்­சித்­த­போதே மேற்­படி பொலிஸ் அதி­கா­ரியை அவர் தாக்­கி­யுள்ளார் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இத­னை­ய­டுத்து, சம்­ப­வத்தில் காய­ம­டைந்த பொலிஸ் அதி­காரி கல்­க­முவ வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­ட­துடன் அவரை கடித்த பெண்ணை பெரும் சிர­மத்­துக்கு மத்­தியில் பெண் பொலிஸ் ஒரு­வரின் உத­வி­யுடன் கைது செய்­துள்­ளனர்.

பின்னர் அப்­பெண்ணை கல்­க­முவ வைத்­தி­ய­சா­லையின் சட்­ட­வைத்­தியர் முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்­து­வ­தற்கு பொலிஸார் நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்­தனர்.  

கைது செய்­யப்­பட்ட பெண், தான் கைதா­னதால் தற்­கொலை செய்­து­கொள்ளப் போவ­தாக பொலிஸ் நிலை­யத்­தினுள் சத்­த­மிட்டு பொலி­ஸாரை திட்டி, தனது ஆடை­களை கிழித்து தலையை சுவரில் மோதிக்­கொண்டு மிகவும் விகா­ர­மான முறையில் செயற்­பட்­டுள்ளார்.

சந்­தேக நப­ரான பெண் நேற்­று­முன்­தினம் கல்­க­முவ நீதிவான் முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­ட­த­னை­ய­டுத்து பெப்­ர­வரி 2 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது.

சந்­தேக நபர் தொடர்பில் நீதி­மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்த சட்­ட­த­ரணி நீதி­மன்றில் தெரி­விக்­கும்­போது, தனது கட்­சிக்­கா­ர­ரான பெண் காப்­பு­றுதி நிறு­வ­ன­மொன்றில் தன்னை காப்­பீடு செய்­தி­ருந்­த­தா­கவும் தனக்கு ஏற்­பட்ட நோய்க்­கான மருத்­துவக் காப்­பு­று­தியை குறித்த காப்­பு­றுதி நிறு­வனம் வழங்க மறுத்­த­த­னை­ய­டுத்து இது தொடர்பில் பொலிஸ் நிலை­யத்­துக்கு முறைப்­பாடு செய்­துள்­ள­தா­கவும் அதன்­போது பொலிஸார் அவரை அவ­ரது கணவன் கண்­முன்னே தாக்கி காய­ம­டைய செய்து வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தித்­த­தா­கவும் தெரி­வித்­துள்ளார்.

இதனை மறுத்த பொலிஸார், சந்­தேக நப­ரான பெண் கடந்த 23 ஆம் திகதி நண்­பகல் 12 மணி­ய­ளவில் பொலிஸ் நிலை­யத்­துக்கு மேற்­கு­றிப்­பிட்­டது போன்று முறைப்­பாடு ஒன்றை மேற்­கொண்­ட­தா­கவும் பின்னர் அன்­றைய தினம் மாலை பொலிஸ் நிலை­யத்­துக்கு மது­போ­தையில் வந்து இவ்­வாறு கலகம் விளை­வித்­த­தா­கவும் தெரி­வித்­துள்­ளனர்.

இவ்­வாறு பொலிஸார் நீதி­மன்றில் தெரி­வித்துக் கொண்­டி­ருக்கும் போது குறுக்­கிட்ட சந்­தேக நப­ரான  பெண், இவையனைத்தும் பொய்  என நீதிவானிடம் தெரிவித்து அழுது புலம்பியுள்ளார்.

எனினும் மருத்துவ அறிக்கையின் ஊடாக   சந்தேகநபர் மது அருந்தியிருந்தமை நிரூபிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை கருத்திற்கொண்டு நீதிவான் சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

(ரெ.கிறிஷ்­ணகாந்)

No comments

Powered by Blogger.