ஞானசாரருக்கு எதிராக திடீரென வழக்குத் தாக்கல் - காரணம் என்ன..?
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட பிக்குமார்கள் மூவருக்கு எதிராக, ஹோமாகம நீதிமன்றில், வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஹோமாகம பொலிஸாரினாலேயே, நேற்று திங்கட்கிழமையன்று -23-01-2017 இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கலகொட அத்தே ஞானசார தேரர், வித்தாரன்தெனியே நந்த தேரர் மற்றும் எம்பிலிபிட்டியே விஜித்த தேரர் ஆகியோருக்கு எதிராகவே, இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2012ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9ஆம் திகதியன்று, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் உள்ளிட்ட மேற்படி பிக்குமார்கள், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பின்னதுவ வாயிலாக, அதிவேக நெடுஞ்சாலைக்குள் பலவந்தமாக நுழைந்து, அங்கு கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிகளைத் தூற்றியதுடன் அங்கு வைக்கப்பட்டிருந்த பாதுகாப்புத் தடுப்பையும் தாக்கியிருந்தனர்.
இதனால், 60ஆயிரம் ரூபாய் பெறுமதியான அரச சொத்துக்கு இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்கிணங்கவே, மேற்படி தேரர்கள் மூவருக்கும் எதிராக, இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
very good
ReplyDeletevery good
ReplyDeleteTHEY MONKS..
ReplyDeleteIF Buddhist public fail to punish them.. THESE Monks will continue to destroy the image of Buddhism, which basically teachers CALMNESS.
நம்ம பிள்ளையும் அடுத்த வீட்டு பிள்ளையும் சண்டை இட்டுகொண்டால் நாம் நமது பிள்ளைக்கு அடித்து அவனோடு ஏன் சேர்ந்தாய் அவன் இவனுடைய இவளுடைய மகன் என்று அந்தப்பிள்ளையின் பரம்பரை வரலாறை கேவலப்படுத்தி பேசி இரகசியமாக அவர்களின் கணக்கை பார்க்க திட்டம் தீட்டும் செயல் போன்றதுதான் இந்த இனவாதிகளுக்கு எடுக்கும் நடவடுக்கை நாடகம் .
ReplyDelete