இனவாத தேரர்களுடன் ஜனாதிபதி இணைவு, முஸ்லிம்கள் பீதி - அஸ்வர்
முஸ்லிம்களின் பெரும்பான்மையான ஆதரவினைப்பெற்று நல்லாட்சியை அமைத்த ஜனாதிபதி முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத தேரர்களுடன் இணைந்து அவர்களின் ஆலோசனைப்படி மேற்கொள்ளும் தீர்மானங்களால் முஸ்லிம்கள் பீதியடைந்துள்ளார்கள்.
மறிச்சுக்கட்டி மக்கள் தமது பூர்வீகக் காணிகளை இழக்கவுள்ளார்கள். பாராளுமன்றத்தில் உள்ள முஸ்லிம் உறுப்பினர்கள் இதனை வன்மையாக எதிர்க்க வேண்டும் என முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எச்.எம் அஸ்வர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வில்பத்து வன பிரதேச எல்லையை விஸ்தரித்து வர்த்தமானி அறிவித்தல் விடுமாறு உத்தரவிட்டுள்ளமை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளதாவது;
மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் தான் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமடைந்தன என்று கூறியவர்கள் இன்று மௌனிகளாக இருக்கின்றார்கள். இன்று ஜனாதிபதியே முஸ்லிம்களுக்கெதிரான தீர்மானங்களை பகிரங்கமாக வெளியிட்டு வருகிறார். இவரை பொதுபலசேனா போன்ற இனவாத அமைப்புகள் வழிநடத்துகின்றன. நல்லாட்சியை நாடிய முஸ்லிம்கள் இன்று பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
யுத்த காலத்தில் புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லிம்கள் பல வருடங்களின் பின்பு தமது காணிகளை சீராக்கி மீள்குடியேறி வருகிறார்கள். பல வருடங்களாக கைவிடப்பட்டிருந்த காணிகள் இன்று காடுகளாக மாறியுள்ளன. மறிச்சுக்கட்டி பிரதேசம் முஸ்லிம்களின் பூர்வீக பிரதேசமாகும். அங்கே பாழடைந்த பள்ளிவாசல்கள், கோயில்கள் காணப்பட்டன.
ஜனாதிபதி இன்று விலங்குகளுக்கு வனஜீவராசிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக முஸ்லிம்களின் பூர்வீக காணிகளை கையேற்க வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுமாறு உத்தரவிட்டுள்ளார். இது முஸ்லிம்களின் மனதை வெகுவாகப் பாதித்துள்ளது. பொதுபலசேனா அமைப்பின் தேவைக்காகவே அரசாங்க வர்த்தமானி வெளியிடப்படவுள்ளது.
இனவாத தேரர்களையும் அழைத்துக்கொண்டு நீதியமைச்சர் மட்டக்களப்புக்கு விஜயம் செய்து மட்டக்களப்பில் மங்களராம விகாரை அதிபதியான இனவாத தேரர் ஒருவருக்கு அங்கீகாரம் வழங்கியமை, ஜனாதிபதி இனவாத தேரர்களுடன் நெருக்கமாக பழகுகின்றமை எல்லாம் முஸ்லிம்களை ஜானாதிபதி மீது சந்தேகமடையச் செய்துள்ளது.
இந்நிலையில் முஸ்லிம் பாரளுமன்ற உறுப்பினர்கள் இதனை வன்மையாகக் கண்டிக்க வேண்டும். முஸ்லிம்களுக்கெதிரான ஜனாதிபதியின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும். அது சாத்தியப்படாவிட்டால் அரசாங்கத்தை விட்டு விலகி கூட்டாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் அணிதிரள வேண்டும்.
அமைச்சர் சம்பிக்க ரணவக்கவே பொதுபலசேனாவை ஆதரித்ததாகவும் அவ் அமைப்பிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதிலிருந்தும் தவிர்த்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியிருக்கிறார்.
அமைச்சர் ராஜித சேனாரத்னவும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறார். எனவே இனவாதிகள் நல்லாட்சி அரசாங்கத்திலே அடைக்கலமாகி இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
NEENKELAM SAMUHATHUKKAHA PESELLA ....SANTHARPAM PARTHU MAHINDAVUKKU SATAHAM PARTHU PESERAYAL....ENNADA TERUNTHAVE MADINKKALA......ALLAH ORUVAN IRUPPATHE MARANTHU MUNAFIC THANAMA IRRUKKEYALADA.....ALLAH ORUPOTHUM SAMUHATHUKKU ANNEETHI NENAIPAVANAIYUM ANNEETHI SAIPAVANAIYUM INTHA ULAHATHILAYUM SERI MARU ULAHELUM SERI VIDEVEA MADDAN.......ALLAHUAKKABAR
ReplyDelete