மிகக்கூடிய விரைவில், பெட் ஸ்கேனை பெற்றுக்கொடுக்க ராஜித்த உறுதி
மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு பெட் ஸ்கேன் பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் இலங்கை மக்களின் உதவியுடன் சேகரிக்கப்பட்டு, தற்போது திறைசேரியில் வைப்புச் செய்யப்பட்டுள்ள நிதியிலிருந்து மிகவிரைவில் பெட் ஸ்கேன் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்தினா உறுதியளித்துள்ளார்.
ஹதீஜா பென்டேசன் மற்றும் FightCancer Team அணி ஆகியவற்றின் ஸ்த்தாபக தலைவர் எம்.எஸ்.மொஹமட் தலைமையிலான குழுவிற்கும் அமைச்சர் ராஜித்தவுக்கும் இடையில் நேற்று -23- நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பொதுவிடயத்திற்காக சேகரிக்கப்பட்ட நிதியின் மூலம் ஒரு பொருளை கொள்வனவு செய்யும் போது, டெண்டர் முறை கடைபிடிக்கப்படுகிறது எனவும், அந்த டெண்டர் கோரலில் உள்ள தாமத்தினாலேயே மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு பெட் ஸ்க்கேன் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையில் காலதாமதம் ஏற்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள அமைச்ச ராஜித்த, சுகாதார அமைச்சர் என்றவகையில் மிகக்கூடிய விரைவில் இந்த பெஸ் ஸ்கேன் வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்படுமெனவும் உறுதியளித்துள்ளார்.
மேலும் 3 மாத காலத்தில் நாட்டு மக்களிடம் இருந்து 252 மில்லியன் திரட்டிய எம்.எஸ்.மொஹமட் தலைமையிலான குழுவினரை புகழ்ந்து பேசியுள்ள அமைச்சர் ராஜித்த, சுகாதார அமைச்சினூடாக வருடாந்தம் 3000 டெண்டர் விவகாரங்கள் கையாளப்படுவதாகவும், அவற்றில் பெட் ஸ்கேன் கொள்வனவுக்கே தாம் அதி முக்கியத்துவம் வழங்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் ஆசியாவின் அதிநவீன் புற்றுநோய் வைத்தியசாலையாக, மஹரகம வைத்தியசாலையை மாற்றியமைக்கும் நோக்குடன் ஹதீஜா பென்டேசனும் FightCancer Team உம் செயற்படுவதாக அதன் தலைவர் மொஹமட் அமைச்சர் ராஜித்தவிடம் எடுத்துக்கூறியுள்ளார்.
இதற்கு தமது வாழ்த்துக்களை கூறிய அமைச்சர், அந்த இரு அமைப்புக்களுக்கும் தமது முழு ஒத்துழைப்புகளை வழங்கவும் தமது ஆர்வத்தை வெளிப்படுத்தியதுடன், இன்ஷா அல்லாஹ் என்ற வார்த்தையைக் கூறி, மஹரகமர லைத்தியசாலைக்கு ஏனைய சாதனைங்களை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகக்கு தமது உயர் அதிகாரிகளுடன் பேசி இறுதி முடிவை அறிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் நீடித்த இந்தச் சந்திப்பானது, மகிவும் பயனுள்ளதாக அமைந்ததாக மொஹமட ஹாஜி மேலும் குறிப்பிட்டார்.
Post a Comment