கோடீஸ்வரரால் தவறவிட்ட, ஒருகோடி ரூபா எழுதப்பட்ட காசோலைகளை பொலிஸில் ஒப்படைத்த நபர்
இராவணா எல்ல நீர்வீழ்ச்சியின் அருகாமையிலுள்ள கற்பாறை ஒன்றின் மீது வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி, 25 ரவைகள், வங்கியில்பணம் எடுக்கும் அட்டைகள் மற்றும் பெறுமதிமிக்க ஆவணங்கள் அடங்கிய கைப் பையைக் கண்டெடுத்த நபர் ஒருவர் அதனை எல்லபொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார் என எல்ல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிஎல்.டி.என். கருணாரட்ன தெரிவித்தார்.
அவர் இது தொடர்பில் தொடர்ந்து கூறுகையில், கம்புருபிட்டி என்ற இடத்தைச் சேர்ந்த கோடீஸ்வரரான ஒருவர் தனது கெப் வாகனத்தில் இராவணா எல்ல நீர்வீழ்ச்சியைச் பார்க்கச் சென்றுள்ளார்.
அங்கு கெப் வாகனம் பழுதடைந்ததால் அதிலிருந்த கைப்பையை நீர்வீழ்ச்சிக்கு அருகே கற்பாறை ஒன்றில் வைத்து விட்டு வாகனத்தை திருத்தியுள்ளார். வாகனம் திருத்திய பின்னர் அவர் தனது கைப்பையை மறந்து விட்டுச் சென்றுள்ளார்.
தான் கைப்பையை தவறவிட்டதை உணர்ந்து கொண்ட பின்னர் அவர் மீண்டும் குறித்த இடத்துக்கு வந்து பார்த்த போது அது அங்கு காணாமல் போயிருந்தது.
இதனையடுத்து அவர் எல்ல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பான விசாரணையை ஆரம்பித்த அரை மணித்தியாலத்தில்,எல்ல பகுதியைச் சேர்ந்த டி.எம்.விஜயசேகர என்பவர் கைப்பையை என்னிடம் ஒப்படைத்தார்.
இதனையடுத்து உடனடியாக கைப்கையை தவறவிட்ட கோடீஸ்வரரை பொலிஸ் நிலையம் வரவழைத்து குறித்த கைப்பையை ஒப்படைத்தேன் என்றார்.
அக் கைப்பையில் கைத்துப்பாக்கி ஒன்று 25 ரவைகள் ஒரு கோடி ரூபா எழுதப்பட்ட காசோலைகள், வங்கியில் பணம் மீளப் பெறும் அட்டைகள் மற்றும் பெறுமதியான ஆவணங்கள்,தேசிய அடையாள அட்டை ஆகியனவும் இருந் துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(எம்.செல்வராஜா)
கைத்துப்பாக்கியின் உண்மை தன்மை என்ன இவருக்கு பாவிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா?
ReplyDelete