Header Ads



என்னை படுகொலை செய்ய, ஏவியது யார்..?

தீவிரமான பாதுகாப்பு அச்சுறுத்தில் இருப்பது தொடர்பாக பிரதமர் செயலகத்தில் இருந்து, இந்த மாத முற்பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்குத் தகவல் அனுப்பப்பட்டதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஏவியது யார் என்பதை விசாரணைகள் ஊடாகவே அறியப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எனக்கு உயிரச்சுறுத்தல் உள்ளமை தொடர்பில் அறிய கிடைத்துள்ளது. ஆனால் அது யாரால் என்று விசாரணைகள் ஊடாகவே தெரியவரும். தனிப்பட்ட எதிரிகள் என யாரும் இல்லை. ஆனால் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் பிரச்சினைக்கு நிரந்த தீர்வை பெற்றுக் கொடுக்கும் வகையில் புதிய அரசியலமைப்பின் ஊடாக நடவடிக்கைளை முன்னின்று முன்னெடுத்து வருகின்றோம்.

இதனை பிடிக்காதவர்கள் உள்ளனர். இவர்கள் இவ்வாறான உயிரச்சுறுத்தல்களுக்கு காரணமாகின்றனரா ? என தெரிய வில்லை. ஏவ்வாறாயினும் இந்த விடயம் தொடர்பில் கைதுகள் இடம்பெற்றுள்ளது. வேளியில் இருந்து செயற்படுத்துகின்றனரா ? அல்லது உள் நாட்டில் இருந்து ஏவுதல்கள் இடம்பெறுகின்றதா ? என்று தற்போதைக்கு கூற இயலாது. 

சில புலனாய்வாளர்கள் இந்த விடயத்தில் தொடர்புபட்டுள்ளதாக எனக்கு நெருங்கிய தகவல்கள் குறிப்பிடுகின்றன. தற்போது கைது செய்யப்பட்டவர்கள் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுப்பட்டவர்கள் என குறிப்பிட்டுள்ளனர். முன்னாள் போராளிகளாகவும் இருக்கலாம். ஆனால் இவர்களை ஏவியது யாரென்று தெரிய வில்லை என தெரிவித்தார். 

உயர்மட்டப் புலனாய்வு அறிக்கைகளின் படி இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் வடக்கில் நான்கு முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. இரண்டு முன்னாள் போராளிகளை கைது செய்துள்ள நிலையில் மேலதிகள் விசாரணைகளை தற்போது  பயங்கரவாத தடுப்பு பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர். 

கிளைமோர்கள் மற்றும் டெட்டனேற்றர்களை வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டிலேயே சந்தேகநபர்கள்; கைது செய்யப்பட்டுள்ளனர் என கைது செய்யப்பட்டவர்கள் சார்பில் ஆஜராகியுள்ள பெயரை வெளிப்படுத்த விரும்பாத சட்டத்தரணி தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தமக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக அரசாங்கத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சுமந்திரன் உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த ஜனவரி 13ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் சுமந்திரன் பங்கேற்கவிருந்த நிகழ்வு ஒன்று கடைசி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டமை தொடர்பாக கருத்து வெளியிட்ட சுமமந்திரன்,  “பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக நிகழ்வை இரத்து செய்யவில்லை. அதற்கு வேறு சில காரணங்கள் இருந்தன.

பின்னரே, ஜனவரி 13ஆம் திகதி; படுகொலை முயற்சி ஒன்றுக்கு தயாராக இருந்தார்கள் என்று  நான்கு பேர் கைது செய்யப்பட்டதாக அறிந்து கொண்டதாக அவர் மேலும் தெரிவித்ததாக ஹிந்து குறிப்பிட்டுள்ளது.

(லியோ நிரோஷ தர்ஷன்)

1 comment:

  1. While playing a leading role to secure the rights of the Tamil people, Sumanthiran without any doubt stands for the rights of the people of all communities. Particularly he shows quite a lot of concern on the issues of the Muslims. He is also vociferous against all forms of corruption that prevails in the country. Let us wish that such an upcoming new leader will not be subjected to any danger.

    ReplyDelete

Powered by Blogger.