இனவாதம் பேசினால், கடலில் வீச வேண்டும் - சந்திரிக்கா அதிரடி
இனவாதத்தை தூண்டும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இந்த கோரிக்கையினை வலியுறுத்தியுள்ளார். தேசிய பொங்கல் விழா இன்று இறக்குவானையில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இனிமேல் நாட்டில் இனவாதம் என்பதற்கு இடமில்லை.
எனினும், யாராவது இனவாதம் பேசினால், அவர்களை ஒரு பையில் கட்டி கடலில் வீசுவதைத் தவிர வேறு தண்டனையொன்று வழங்க முடியாது என தான் நினைக்கின்றேன்.
நல்லாட்சி என்பதை உடனடியாக நடைமுறைப்படுத்த முடியாது. கடந்த ஆட்சியாளர்கள் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டமையால் நல்லாட்சியை ஏற்படுத்துவதில் சிரமம் காணப்படுகின்றது.
கடந்த ஆட்சியாளர்கள் நாட்டை பாரிய கடன் சுமைக்கு கொண்டு சென்றுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி ஒருவரும் இனவாதத்துக்கு தலைமை தாங்கி நாட்டிலுள்ள நல்லிணக்கத்தை சீரகுலைக்க முயற்சித்து வருகின்றார்
நாட்டில் காணப்படும் பிரச்சினைகளுக்கு இந்த ஆண்டுக்குள் தீர்வு பெற்றுக் கொடுக்க முயற்சித்து, நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த முனைவதாகவும் அவர் உறுதியளித்தார்.
Post a Comment