Header Ads



'இந்த அரசாங்கம், இறைச்சி வேடனை போல'


1818 ஆம் ஆண்டில் போல் காட்டிக்கொடுக்கும் உடன்படிக்கை மூலம் தமது கிராமங்களை வெளிநாட்டவர்களுக்கு வழங்கும் செயலுக்கு எதிராக அமைதியான எதிர்ப்பை வெளியிட்ட ஹம்பாந்தோட்டை மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கடுமையாக கண்டிப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவை மீறாது பிக்குமார் தலைமையில் ஹம்பாந்தோட்டை மக்கள் அமைதியான சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசாங்கம் பொலிஸாரை பயன்படுத்தி இவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டு, இறப்பர் குண்டு மற்றும் தண்ணீர் தாரை தாக்குதல்களை நடத்தியதுடன் வன்முறையாளர்களை பயன்படுத்தி, கல் வீச்சு தாக்குதல்களை மேற்கொண்டது.

பிக்குமார், பொதுமக்கள் மாத்திரமல்லாது அருகில் உள்ள கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலில் கர்ப்பிணி பெண்ணொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு இந்த தாக்குதல் மிலேச்சத்தன முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தங்க முட்டையிடும் கோழியை போன்ற எமது தாய் நாட்டிற்கு சொந்தமான பெறுமதிமிக்க காணிகள், ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமும், பாட்டன், முப்பாட்டன்களின் பண்டைய கல்லறைகள் உட்பட மரபுரிமைகளுடன் கூடிய ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் 15 ஆயிரம் ஏக்கர் காணியை இந்த அரசாங்கம் இறைச்சி வேடனை போல் குறைந்த விலைக்கு விற்று தீர்ப்பதை நாட்டு மக்கள் அமைதியாக பொறுமையுடன் பார்த்துக்கொண்டிருக்க வேண்டுமா?.

இப்படியான தேசிய அனர்த்தத்திற்கு எதிராக முன்னோக்கி வந்த நாட்டின் மைந்தர்கள் அரசாங்கத்தின் அடக்குமுறை சக்தியிடம் சிக்கியுள்ளனர்.

அரசாங்கத்தின் ஜனநாயக விரோத, சர்வாதிகார பயணத்திற்கு எதிராக குறுகிய பேதங்களை கைவிட்டு கைகோர்க்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. காணி விற்பதில் இந்த அரசு முந்திக்கொண்டதே என்ற ஆதங்கம் தங்களுக்கு கிடைக்க வேண்டிய கொமிஷன் கை மாறி விட்டதே..

    ReplyDelete
  2. கடந்த அரசாங்கம் ஏதோ இதய சுத்தியோடு மக்கள் அபிப்பிராயப்படி செயற்பட்டது போன்ற நினைப்பில் கதைக்கிறார்.எந்த ஊழல்,மோசடிகளிலும் ஈடுபடாத விமல்வீரவங்ச.ஹா...ஹா...

    ReplyDelete

Powered by Blogger.