Header Ads



'றிசாத்தை பலியெடுத்தலும், தெரிந்த சிங்களமொழியில் சமூக இருப்பை உறுதிப்படுத்தியமையும்' (வீடியோ)

வில்பத்து விவகாரம் தொடர்பில் நேற்று (09) இரவு இடம்பெற்ற தனியார் தொலைக்காட்சி அரசியல் விவகாரத்தில் 1984 ஆம் ஆண்டு முதல் 2015ஆம் வரை வில்பத்துவின் தோற்றம் என பொய்யான கூகுல் வரைபடைத்தைக் காட்டி அங்கு 2014ஆம் ஆண்டுக்குப் பிறகே முஸ்லிம்கள் காட்டை அழித்து குடியேறியுள்ளனர் என நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்க,

இல்லை, சகோதரரே நீங்கள் சொல்வது தவறு. இன்றைய நிகழ்ச்சிக்காக உங்களுக்கு யாரோ பிழையான தகவல்களை வழங்கியிருக்கிறார்கள் என்று அமைச்சர் ரிசாத் பதியுதீன் அமைதியாக எடுத்துக்கூற,

என்ன பிழை இருக்கிறது கௌரவ அமைச்சரே என நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்க,

சகோதரரே 1986ஆம் ஆண்டு அளவிலேயே கூகுல் மெப் சேவை ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இப்படியிருக்கையில் எப்படி 1984ஆம் ஆண்டு இந்தப் படத்தை வெளியிட்டிருக்க முடியும். இதிலிருந்தே இந்த தகவல் பொய் என்பது தெளிவாகவே தெரிகிறது.

மழுப்புகிறார் நிகழ்ச்சித் தொகுப்பாளர். பேச்சை மாத்துகிறார். இடைவேளை கொடுக்கிறார்.

அமைச்சர் நிகழ்ச்சித் தொகுப்பாளரை நோக்கி தொடுக்கும் சங்கட கேள்விகள் கேட்கும் போது அல்லது வில்பத்துவில் முஸ்லிம்கள் வாழ்ந்துள்ளனர் என்பதற்கான ஆதாரங்களை காண்பிக்க முயற்சிக்கும் போதும் நிகழ்ச்சித் தொகுப்பாளர் உடனே குறுக்கிட்டு இடைவேளைக்கு செல்கிறார்.

அத்துடன், அமைச்சர் ரிசாத் பதியுதீனை அமைதியிழக்கச் செய்து பிரச்சினையை பூதாகரமாக்க நிகழ்ச்சித் தொகுப்பாளர் எடுத்த முயற்சியும் வெற்றியளிக்கவில்லை. அமைச்சர், நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் நிதானம் இழக்காது மிகத் தைரியமாக பதிலை வழங்கியிருந்தார்.

ஆக, மொத்தத்தில் அமைச்சரை பலியெடுக்கும் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியாகவே நேற்றைய நிகழ்ச்சி அமைந்தது. அமைச்சர் ரிசாத் பதியுதீன், தனக்குத் தெரிந்த சிங்கள மொழியில் மிகத் தைரியமாக தனது சமூகத்தின் இருப்பை உறுதிப்படுத்தியிருந்தாலும், இது அமைச்சரின் தனிப்பட்ட விடயமாக கருதாமல் ஏனைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த விடயத்தில் ஒற்றுமைப்பட வேண்டிய தேவை இருக்கிறது.

ஓட்டு மொத்த பேரினவாத சக்திகள் வில்பத்து விவகாரத்தை பெரிதாக்கி அங்கு முஸ்லிம்கள் வாழவில்லை யுத்தத்திற்குப் பின்னரே காட்டை அழித்து பலவந்தமாக குடியேறியுள்ளனர் என்று காட்ட முயல்கிறார்கள்.

யா அல்லாஹ் எமது சமூகத்தின் வெற்றிக்காக எப்போதும் துணைபுரிவாயாக...

10 comments:

  1. அல்லாஹ் உங்களுடன் தான் தலைவரே..

    ReplyDelete
  2. சகோதர் கடைசியாக கேட்ட துஆவுக்கு நிச்சயம் அமீன் கூறிய ஆரம்பிக்க வேண்டும்,ரிசாட் மிக்க தைரியமார்வர் என்பது எல்லோருக்கும் தெரியும் ஆனால் அவருடன் முஸ்லிம் mp மார்கள் ஒன்று சேர்ந்து ஒத்துழைத்தால் வடக்கில் உள்ள ஏழைகள் சந்தோஷ்ப்படுவார்கள்,

    ReplyDelete
  3. Allahu Akbar we are with Hon Minister do not worry about that any donkeys

    ReplyDelete
  4. தலைவர் ரிஷாட் அவர்களே! உங்களை பிரியமாக நேசிக்கும் ஒருவனின் சில கருத்துக்கள்
    1- தலைப்புக்கு சம்பந்தமே இல்லாத விடயங்களை கொண்டு DERANA சங்க ஆரம்பித்தது முற்றிலும் தவறு, தக்க பதிலையும் கூறி உங்களால் சங்கவை விவாதத்தின் ஆரம்பத்திலே சற்று அடக்கி வாசிக்க உங்களால் முடியாமல் போனது.
    2- சர்ச்சைக்குரிய கெசட் கோர்டினே ட் பொய்ண்டை முசலியிலிருந்து நொச்சியாகமை வரை க்கும் சென்றதை சரியாக சுட்டிக்காட்டிய உங்களால் ஏன் நீதி மன்றத்தில் ரீட் மனு தொடுக்க முடியாமல் போனது ? மேலும் காலம் தாழ்த்தாது இதனை உடனே வாபஸ் பெறுவதட்கு நடவடிக்கை எடுப்பீர்கள் என உறுதியாக நம்புகிறோம்.
    3- இலங்கையில் ஏனைய ( கெஸட் பண்ணப்பட்ட ) பிரதேசங்களில் காடழித்து இடம்பெற்ற குடியேற்றங்களை தெளிவாக சுட்டிக்காட்ட தவறி விட்டீர்கள் ( கஜூவாத்த / வவுனியா கலாபோகஸ் வெவ- நாமல் கம / தப்போவ ).
    4- போலி யாக சோடிக்கப்பட்ட 1984 ருந்து google எர்த் மெ ப்பை உடனேயே சுட்டிக்காட்ட தவறிவிட்டீர்கள்.என்றாலும் விளம்பர இடைவெளி யின் பின்னர் அறிந்துகொண்ட நீங்கள் 2009 இட்கு முட்பட்ட அணைத்து கூகிள் எர்த் மெப்பயும் போலி யானது என்பதனை ஆணித்தரமாக எடுத்து கூறியதையிட்ட டெரன பார்த்துக்கொண்டிருக்கும் நேயர்களிடம் நீங்களே தீர்மானிங்கள் எது சரியென்று மெல்ல நழுவியது . இனவாத முகமூடியும் மெல்ல கிழிந்து போனது.
    5-போலி யான NGO க்களின் EIA ரிப்போர்ட் களை உடனே நிராகரித்து ப்பேசியது மிகவும் பாராட்டுக்குரியது. என்றாலும் விளம்பர இடைவி லி யின் பின்னர் அதனை உறுதிப்படுத்துகிறேன் என்று சங்க கூறியும் அவரை தொடர் கேளவிகளால் பின்தொடர வில்லை.
    6-இவ்விவாதத்தில் ஒரு கட்டத்தில் தலைவர் அவர்கள் கடும் தொனியில் பேசியதன் மூலம் டெரன சங்க கட்டாயமாக முஸ்லிம்கள் சகல அடிப்படை வசதிகளுடன் மீள்குடியேற்றப்பட வெண்டும் என்று சற்று தாழ்மையாக பேசியதையும் காணலாம்.அந்தளவிட்கு மிக நுணுக்கமாக பேசியதையிட்ட மறிச்சுக்கட்டி மக்கள் மனம் சாந்தியடைவார்கள் என நினைக்கிறேன்.
    வீடியோ கட்டம் இதுதான் -34:04 -32:25.

    மீண்டுமொரு முறை நேரடி தொலை க்காட்சி நிகழ்ச்சியில் 2012 சர்ச்சைக்குரிய கெசட்டைபற்றி கேள்வி கேட்க விடாமல் உடனே நீதி மன்றத்தில் வழக்குத் தொடர் வீர்கள் என உறுதியாக நம்புகிறோம்.

    ReplyDelete
    Replies
    1. Brother Assalaamu Alaikum..
      Your message must be conveyed to the minister to sue in the court.

      Delete
  5. அமைச்சருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக, அவரது தைரியம் முயற்சியும் பாராட்டப்பட வேண்டியதே

    நேர்முகப்பரீட்சை செய்பவர் சட்டரீதியாகவே ஆதாரம் கேட்கிரார்.
    உதாரணம் 2012ஆம் ஆண்டு cassette தவறாக உள்ளது என்றால் அதனை இன்னும் ஒரு cassette மூலமே சரி செய்யப்பட வெண்டும் ......அதற்கு அமைச்சர் என்ற வகையில் என்ன செய்தீர்கள் ?
    சட்டரீதியாக இல்லாமல் cassette பன்னியதட்கு எதிராக வழக்குகள் ஏதும் உள்ளதா ?
    ஆதாரம் ?
    ஏற்கனவே அந்த கிராமங்களில் இருந்ததட்கான voters list எங்கே ? அல்லது காணி ஆதாரபத்திரம் ?
    இவையெல்லாம் சட்டரீதியான ஆதாரங்கள் இவற்றைத்தான் அவர் ஆதாரமாக கேட்கிறார்.
    துரதிஷ்டவசமாக இந்த எந்த ஆதாரமும் முன்வைக்கப்படவில்லை.

    ReplyDelete
  6. அல்லாஹ் எப்போதும் துனை இன்ஷா அல்லாஹ் வெற்றி நிச்சயம்

    ReplyDelete
  7. பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்த, அவர்களின் வாழ்வாதாரத்துக்காக பல குற்றச்சாட்டுக்களுக்கும், தொல்லைகளுக்கும் மத்தியில் கஷ்டப்பட்டு உழைக்கும் றிசாத் அவர்களுக்கு எமது பாராட்டுக்களும், நன்றிகளும். இந்த விவாதம் இன்னும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டடிருக்கலாம் என்பது எமது கணிப்பு. Rasmin Kamarudeen and Rislan Farook, well said.

    ReplyDelete
  8. ِAlhamdulillah, Bro. Rishard go forward Allah is with you. Our duas are with you. You have done it with much courage and truth. Truth always capitalizes and falsehood disappears.

    You are man from the victimised group of people. You have the feelings to work out for them.

    ReplyDelete

Powered by Blogger.