காத்தான்குடி மண்ணின் முதல் சட்டக்கல்லூரி மாணவி, சிப்னா சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம்
இலங்கை சட்டக்கல்லூரிக்கு தெரிவு செய்யப்பட்ட காத்தான்குடியின் முதலாவது பெண் என்ற பெருமைக்குரிய மொஹமட் காசிம் பாத்திமா சிப்னா, இன்று வியாழக்கிழமை சட்டத்தரணியாக உயர்நீதிமன்ற பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
காத்தான்குடி மூன்றைச் சேர்ந்த மர்ஹ{ம் மொஹமட் காசிம் மற்றும் சல்மா பீவியின் புதல்வியான பாத்திமா சிப்னா 2013ஆம் ஆண்டு சட்டக்கல்லூரி போட்டிப் பரீட்சையில் சித்திபெற்று சட்டக்கல்லூரிக்கு தெரிவாகியிருந்தார். இதன் மூலம் சட்டக்கல்லூரிக்கு காத்தான்குடியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட முதலாவது பெண் என்ற சாதனையும் - பெருமையும் பெற்றுக்கொண்டார்.
இன்று வியாழக்கிழமை கொழும்பு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளும் நிகழ்வில், உயர்நீதிமன்ற பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவன் முன்னிலையில் பாத்திமா சிப்னா சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
இவர் காத்தான்குடி ஹிழ்ரியா வித்தியாலயம், காத்தான்குடி மில்லத் மகளிர் வித்தியாலயம் மற்றும் காத்தான்குடி மத்திய கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.
Post a Comment