மத்தல விமான நிலையத்தின், மவுசு அதிகரிக்கிறது
கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஓடுபாதை புனரமைப்பு நடவடிக்கை காரணமாக அதன் செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
அதற்கு மாற்றீடாக கடந்த 6ஆம் திகதியில் இருந்து மத்தல விமான நிலையத்தில் சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இன்றுவரையில் 84 வரை விமான பயணங்கள் மத்தல விமான நிலையத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விமான நிலையத்தின் முகாமையாளர் உபுல் கலன்சூரிய தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கன் விமான சேவையின் பீஜிங் மற்றும் ஷாங்காய் விமான பயணங்கள் இரண்டும், பிளே டுபாய் விமான சேவையும், இந்தோனேஷியாவின் ஸ்ரீ விஜய விமான சேவையும் தற்போது வரையில் மத்தல விமான நிலையத்தில் இருந்து விமான பயணங்களை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனவரி மாதம் 6ஆம் திகதியில் இருந்து இன்று வரையில் 6,275 பயணிகள் இந்த விமான நிலையத்தை பயன்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இன்றைய தினம் விமான நிலையத்தை பயன்படுத்திய பயணிகளின் எண்ணிக்கை 639 ஆகும் என அதன் முகாமையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் விமான பயணத்திற்கு பொருத்தமற்ற இடத்தில் விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளதால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. அந்த விமான நிலையத்தை பயன்படுத்த பல முன்னணி விமான சேவை நிறுவனங்கள் மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment