இப்போது கதறி அழுவதில், என்ன நியாயம் இருக்கின்றது..?
எனது முழுக் குடும்பத்தையும் கைது செய்து சிறையில் அடைக்கவேண்டும் என தெரிவித்தவரே வாகன திருடரான விமல் தற்போது புலம்புகின்றார் என அமைச்சர் சரத் பொன்சேகா தெரித்தார்.
ஊடகம் ஒன்றிக்கு கருத்து வழங்கும் போதே அவர் இதனைக் கூறினார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,
அரச கருமங்களுக்காக வாகனங்கள் செல்ல வேண்டிய நிலை கட்டாயம் அரசு தலைவர்களுக்கு உள்ளது.
ஆனால் கடந்த ஆட்சியில் மகிந்தவிற்கு 1200 வாகனங்களும், விமலுக்கு 50 வாகனங்களும் கொடுக்கப்பட்ட நிலை தற்போது இல்லை.
அதேபோன்று நாட்டின் நேர்மையான குடிமகன் ஒருவருக்கு மட்டுமே ஆட்சிக் கவிழ்ப்பை பற்றி பேச முடியும் ஆனால் 42 வாகனங்களை திருடி ஊழல் திருட்டை செய்தவர் விமல்.
அவ்வாறான முறைகேடான ஒருவர் ஆட்சிக் கவிழ்ப்பை பற்றி பேசிவதும் சவால் விடுவதும் வேடிக்கையானது. திருடனுக்கு ஆட்சிக் கவிழ்ப்பை பற்றி பேச முடியாது. அதற்கான உரிமையும் இல்லை.
இப்போது அவர் புலம்புகின்றார், அவருடைய குடும்பம் வீதியில் நின்று அழுகின்றது, மகளை காப்பாற்ற வேண்டும் என்கின்றார்.
ஆனால் முன்னர் என் முழுக் குடும்பத்தையும் சிறையில் அடைக்க வேண்டும் என கூறியவரே விமல்.
அப்போது என் மகளை காப்பாற்ற நினைக்கவில்லை, என் குடும்பமும் என் மகளும் அழுது கதறியது அவர் கண்களுக்கு தென்படவில்லை ஆனால் இப்போது அழுகின்றார் இதில் என்ன நியாயம் இருக்கின்றது.
மேலும் கூட்டு எதிர்க்கட்சி மாபெரும் மக்கள் கூட்டத்தினை ஏற்படுத்தப் போகின்றார்களாம் அது பொய்யானது.
மக்கள் அதிகம் இருக்கும் இடத்தில் சென்று கூட்டத்தினை செய்யும் போதே நன்றாக தெரிகின்றது இது மக்களை ஏமாற்றும் செயல் எனவும் பொன்சேகா தெரிவித்தார்.
Post a Comment