ஹம்பாந்தோட்டைக்கு தேவையில்லை என்றால், பொலநறுவைக்கு தாருங்கள் - மைத்திரி
பொனறுவைக்கு அபிவிருத்தித் திட்டத்தை தருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சீன உதவியுடன் மேற்கொள்ளப்பட உள்ள கைத்தொழில் முதலீட்டு வலயத்தை பொலனறுவைக்கு தருமாறு ஜனாதிபதி இன்று கோரியுள்ளார்.
ஹம்பாந்தோட்டைக்கு அபிவிருத்தித் திட்டம் தேவையில்லை என்றால் அதனை பொலனறுவைக்கு தருமாறு கோரியுள்ளார்.
அபிவிருத்தித் திட்டத்திற்கு தேவையான காணிகளை பொலனறுவையில் தம்மால் வழங்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி பதவி ஏற்றுக் கொண்டு இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment