'சுத்தமான ஹம்பாந்தோட்டை பூமியை, ஆட்சியாளர்கள் அசுத்தப்படுத்திவிட்டனர்'
அரசாங்கத்தின் அடக்குமுறை வேலைத்திட்டத்திற்கு எதிராக செயற்பட புதிய சக்தி ஒன்றின் தேவை ஏற்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
ஹம்பாந்தோட்டையில் இன்று நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் பின்னர் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும இதனை கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியினர், மக்கள் விடுதலை முன்னணியினர் ஆகியோருக்கு ஆட்சி செய்ய நாடு இருக்க வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியலில் ஈடுபட வடக்கு இருக்க வேண்டும். முஸ்லிம் காங்கிரஸ் அரசியலில் ஈடுபட நாடு இருக்க வேண்டும்.இதற்காகவே நாங்கள் போராடி வருகின்றோம்.
எமக்கு கிடைக்கும் விருப்பு வாக்குகளுக்காக ஹம்பாந்தோட்டைக்கு வந்து, கண்ணீர் புகைக்குண்டு, கல், தண்ணீர் தாரை தாக்குதல்களை எதிர்கொண்டு எமது நேரத்தை செலவிடவில்லை. இது நாட்டின் எதிர்காலம் தொடர்பான பிரச்சினை.
இது நாட்டின் தேசிய கொடி தொடர்பான பிரச்சினை. இதனால், சுத்தமான ஹம்பாந்தோட்டை பூமியை அசுத்தப்படுத்திய இந்த ஆட்சியாளர்களுக்கு எதிராக ஒரு புதிய சக்தியாக ஒன்றிணையுமாறு சகலருக்கும் அழைப்பு விடுக்கின்றோம் என டளஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment