Header Ads



மருத்துவபீட மாணவர்கள், சுயநல வாதிகளா..?

-Eng. Zafnas Zarook-

இன்று இலங்கையில் தனியார் கல்வி மற்றும் அரச கல்விக்கு இடைலான தார்மிக போராடடம் நடந்து கொண்டிருக்கும் தருவாயில் ஒரு சிலர் அறியாமையின் காரணமாகவோ அல்லது சுய நலத்தின் காரணமாகவோ சாதக ,பாதக கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர்.இத் தருவாயில் இலங்கை அரச மருத்துவப் பீடத்தினை பற்றி அறியாதவர்களுக்காய் ,சில புள்ளி விபரங்களுடன் இக் கட்டுரையை முன்  வைக்கிறேன்

 சுமார் 50  வருடத்திற்கு  முன் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை மருத்துவ பீடம் ஆனது, இன்று அங்கிகாரம் பெற்ற 17  பல்கலை கழகங்களில், 7 பல்கலை கழகங்களில் தனது மருத்துவ பீடத்தை ஆரம்பித்து ,வருடத்திற்கு 1138 மாணவர்களுக்கு MBBS (Bachelor of Medicine ,Bachelor of Surgery ) என்ற படடத்தினை வழங்கி வருகின்றது. இப் பட்டத்தினை பெற மாணவர்கள் பல தடை தாண்டல்களை தாண்டவேண்டும் ,அது குறித்து அடுத்து விரிவாய் பார்ப்போம்.
இலங்கை கல்வி இணை பொறுத்தவரை பாடசாலை  கல்வித் திடடம் பொதுவாய் செயற்முறை கல்வி முறைமைக்கு அப்பாற்படடது  அதாவது  பெரும்பாலும் தொட்டு உணரவோ , பார்வையாலோ அமைந்திருக்காது. ஆனால் உயர் கல்வி ஆனது கூடுதலாக  செயல் முறை ஆகவே அமைந்திருக்கும். இங்கு கற்பனை இற்கு முக்கியத்துவம் அளிக்கப்படாது. அதிலும் மருத்துவ பீடத்தினை பொறுத்தவரை 99 .99 வீதம் செயல் முறைக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும்.
மருத்துவ பீட மாணவர்களின் கல்வி Non Clinical Part of the Curriculum, Clinical Part of the Curriculum என  இரண்டு பிரிவாய் பிரிக்கப்பட்டிருக்கும். இதில்  5 வருட மருத்துவ கற்கை நெறியில் முதல் இரண்டு வருடமும் Non Clinical Part of the Curriculum இற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். மேலும்  மூன்றாம் வருடத்தில் இருந்து Clinical Part of the Curriculum  இற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
 Clinical Part of the Curriculum இற்காக இலங்கை அரசு தனது 593  அரச வைத்தியசாலைகளில் சுமார் 16 வைத்திய சாலைகளை Teaching Hospital என தரம் பிரித்து மாணவர்களின் கற்கை நெறிக்கு பெரும் பங்காற்றி வருகிறது. இவ்   Teaching Hospital ஆனது பிந்திய மூன்று வருடத்தில் முழுமையாக பயன்படுத்தப்படடாலும் ,ஆரம்ப இரு வருடத்தில் இதன் பங்களிப்பு அத்தியாவசியம் ஆனது.ஆக மொத்தத்தில் மருத்துவ பீட மாணவர்களுக்கு  Teaching Hospitel ஆனது சுமார் 80 வீத பங்களிப்பை அளிக்கின்றது என்பது மறுக்க முடியாத ஒன்றாகும்.
இவ்வாறு Teaching Hospitel ஆக பிரகணப்படுத்தப்படும் வைத்தியசாலைகல்  பொதுவாய் பிரசித்தி பெற்றதாகவும்,அதிக தரம் வாய்ந்ததாகவும் ,அதிக நோயாளிகளை அனுமதிக்க கூடியதாகவும் 
 காணப்படும். உதாரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலை, கலுபோவில வைத்தியசாலை, அங்கோட வைத்தியசாலை என்பன முறையே 3246 , 1093 , 1561 படுக்கைகளை கொண்டுள்ளது. இதன் மூலம் அதிக வெளிநோயாளர்களை உள்வாங்க முடியும்,இதனால் மருத்துவ பீட மாணவர்கள் அதிக நன்மைகளை பெற முடியும். அத்தோடு  குறைத்த கட்டில்களை கொண்ட பொது Teaching Hospital ஆக 900 கட்டில்களோடு மடடகளப்பு வைத்தியசாலை இடம் பெறுவதையும் இங்கு குறிப்பிட வேண்டிய விடயம் ஆகும்.

இப்படிபடட பிரசித்தி பெற்ற Teaching Hospital இல் மாணவர்களுக்கு என்ன இலாபம் என்ற வினா பலரினுள் எழலாம்.இப்படிப்படட வைத்தியசாலைகளில் பலவிதமான நோய்களை உடையோர் தினம் தினம் நூற்றுக் கணக்கானோர் வருகை தருவார்,இதனால் மாணவர்களுக்கு பல விதமான மேலதிக நன்மைகள் மற்றும் செயற்முறைகள் கிடைக்கும், அத்தோடு  மருத்துவ பீட மாணவர்கள் Post Mortem செயன் முறையை வெறுமையாய் வீடியோ மூலம் கற்பது இல்லை மாறாக  இருவர் அல்லது மூவர் சேர்ந்து தனது ஆசானின் வழிகாடடலின் கீழ் குறைந்தது இரண்டு Body களை இதயம், மூளை என ஒவ்வொரு பாகமாக வெட்டி செயற்முறைக்கு உட்படுத்துவர். இதன் மூலம் பல செயற்முறையில் தேர்ச்சி பெற்ற சிறந்த தரமான வைத்தியர்களை நம் நாடு பெற முடியும்.

இலங்கை அரச மருத்துவ பிட மாணவர்களில் கல்வி செயற்பாடு மற்றும் Teaching Hospital இந்த முக்கியத்துவம் பற்றி சிறிது  அலசிய நாம் அடுத்து SAITM பற்றி உற்று நோக்குவோம். 

SAITM (South Asian Institute of Technology and Medicine (Management)) கடந்த 2011 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தனியார் கல்லூரி.இவர்கள் மீது  கலை,வர்த்தகம், என எந்த பிரிவில் கற்றவர்களாலும் மருத்துவம் கற்க முடியும், உயர் தரத்தில் 3 பாடங்கள் சித்தி பெறாவிட்டாலும் மருத்துவம் கற்க முடியும், பணம் மட்டுமே முதலீடு என்ற பலவகையான குற்றங்கள், வைத்தியர்கள் பொறாமை காரணமாக முன் வைக்கிறார்கள் என ஒரு எடு கோளினை நாம் எடுத்துக் கொள்வோம்.

மேற்குறித்த எடு கோளின் படி SAITM இல் கற்பவர்கள் அனைவரும் உயர் தரத்தில் உயிரியல் பிரிவில் கற்றவர்கள் ,மருத்துவ பீடத்துக்கு  மிகச் சிறிய Z - Score இல் தவறியவர்கள். அனைவரும் பல மடங்கு மருத்துவ பீடத்துக்கு தகுதியானவர்கள் என்ற முடிவுக்கு வரமுடியும்.எனவே SAITM முறையானது. 

முறையான SAITM இல் மாணவர்கள் பலர் மருத்துவத்தினை தொடர்கினறனர்.அவ்வாறாயின் நான் மேலே விபரித்த முறையில் தரமான தேர்ச்சியான மருத்துவர்களை பெற  Teaching Hospital இம் மாணவர்களுக்கு அத்தியாவசியம் ஆனது . அப்படியாயின் இவர்களிடம்  Teaching Hospital இருக்கின்றதா என யாரும் வினவினாள் பதில் ஆம்.

SAITM இன் teaching Hospital ஆக Dr Neville Fernando Teaching Hospital (NFTH) ஆனது 2013 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இவ் வைத்திய சாலை ஆனது 1002 கட்டில்களை கொண்டுள்ளதோடு முழுமையான தனியார் வைத்தியசாலை  ஆனால் மருத்துவ பீடம் ஆரம்பிக்க படடது 2011 ம் ஆண்டு என்பது இங்கு நினைவு படுத்த வேண்டிய விடயம் ஆகும்.
தனியார் வைத்தியசாலை ஒன்று teaching hospitel ஆக இருந்து மாணவர்களுக்கு பிரயோசனத்தினைனை வழங்க முடியுமா? என நாம் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

மேற்குறித்த வைத்தியசாலை திறந்ததில் இருந்து 'மத்தள விமான நிலையம்' போன்று சன நடமாடடம் இன்றி காணப்படுகின்றது. ஏன் எனில் அபிவிருத்தி அடைந்து வரும் இலங்கை போன்ற நாடுகளில் தனியார் வைத்தியசாலை இற்கு பெரும்பாலானோர் காய்ச்சல் போன்ற சிறிய நோய்களுக்கு செல்வார்கள் தவிர பெரும் வருத்தங்களோடு செல்வது அரிது. இதனை Dr Neville Fernando Teaching Hospital (NFTH)  இணையத் தளத்தில் விசேட வைத்தியர்களை  250 ரூபா முதல் பெறலாம் என்று குறிப்பிடப்பட்டிருப்பதன் மூலம் இலகுவாய் உணர முடியும்.  

மருத்துவ பீடத்தில் சுமார் வீதம் தாக்கம் செலுத்தும் முறையான  வைத்தியசாலை பயிற்சியை பெறாமல் இது போன்ற வைத்தியசாலையில்  தனியார் மருத்துவ பீட மாண்வர்கள் காய்ச்சலுக்கு  மருந்து வழங்க மாத்திரமே பயிற்சியை பெற்று எவ்வாறு முழுமையான வைத்தியர் ஆக முடியும்? என்பதினை  சாதாரண மக்களினாலே தெளிவாய் விளங்கி கொள்ளமுடியும். 
இப்படியான பல குறைகளை கொண்ட தனியார் வைத்திய பீடத்தினை ஆராய 1925 ஆண்டு முதல் இயங்கும் SLMC (Sri Lanka Medical Council) ஆனது தரம் வாய்ந்த குழிவினை SAITM இற்கு அனுப்பி இருந்தது. இக் குழு ஆனது மேற்குறித்த அனைத்து விடயங்களையும் ஆராய்ந்து 'SAITM ஆனது மருத்துவக் கல்லூரி இற்கு பொருத்தம் அற்றது' என தனது 21 பக்க அறிக்கையை வெளி விட்ட்து. 

இக் குழுவின் அறிக்கை தவறானது என்றும் SLMC இணை தடை செய்ய வேண்டும் என்றும் SAITM இணை சார்ந்தவர்களால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் முடிவு எதிர்வரும் 31 ம் திகதி வெளியாகும்  என எதிர்பார்க்கப்படுகின்றது.  

பண பலமும் ,அதிகாரமும் கொண்ட அணி ஆனது, ஆசியாவில் குழந்தை இறப்பு வீதம்  1000 இற்கு 9 .5 என்ற வீதத்தினை  பேண உதவிய சுமார் 17 , 129  தகுதியான வைத்தியர்களை இனம் காட்டிய  SLMC இணை சுய நலத்துக்காய் அழிக்க ஒன்று கூடியுள்ளது.

எனவே இவவறான தகுதி அற்ற வைத்தியர்கள் மற்றும்  அநியாயங்கள் இருந்து நம் நாட்டினை பாதுகாக்க நாம் ஒன்றிணைய வேண்டும்.

23 comments:

  1. வைத்தியராக வெளிநாட்டில் படிச்சல்லேன்னா உள்நாட்டில்படிச்சாலேன்னா எது எப்படியோ இந்த தனியார் மருத்துவ பல்கலைக்கழகம் இலங்கையில் தடை செய்யக்கூடாது.இந்த தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிரானவர்கள் பொறாமை பிடிச்சவர்கள் தாங்கள் மட்டும் தான் வைத்தியராக வரவேண்டும் மற்ற பிள்ளைகள் எப்படியும் தொலையட்டும் அப்படி தான் அவர்களின் பொறாமை பிடிச்ச மனோநிலை.

    ReplyDelete
    Replies
    1. சகோ இங்கு போறாமை பற்றி நான் வாதிடவில்லை..மிக இலகுவாய் விளங்கும் வடிவில் அவர்களின் தரம் குறித்து பேசி உள்ளேன்.நான் சொல்வது பொய் என்றால் ஆதரத்துடன் கூறலாம்..நான் உண்மை எனில் ஏற்றுக் கொள்வேன்

      Delete

  2. As it's very difficult to read this format in iPhone. I can understand what the writer try to say.
    This issue going on years and years. During this period how Doctors operating in hospital 's and private madical centers, no one need a big artificial or lecture. Every one Experianced it. At the same time there are giving a service to the public. Which there are in debt to them. Because they learning from there tax money.
    On the other hand if you see India. how the private education help the country income is very important. Oslo we need not to forget.how some valuable countries knowledgeable people, left out by the university cut off marks, is very sad.
    I will strongly support private education in Sri Lanka with out delay. If any one oppose it. They won't like others to succeed. Only people against it because of there private income effected.

    ReplyDelete
    Replies
    1. சகோ!நாங்கள் தனியார் கல்வியை எதிர்கவில்லை மாறாக முறையற்ற தனியார் கல்வியை எதிர்கின்றோம்.

      முறையற்றது என்பதை இங்கு ஒரு ஆதரத்தினை கொண்டு விளக்கி உள்ளேன்.
      மேலும் இவ்வாறு வெளி ஆகும் வைத்தியர்களிடம் தாங்கள் சிகிச்சை பெற விரும்புவீர்களா??

      மேலும் இந்தியாவின் வருமானம் குறித்து பேசிய நீங்கள் ,ஏன் இந்தியாவில் அதிகரித்து காணப்படும் போலி டாக்டர்கள் ,சுகாதர முறை கேடு பற்றி பேசவில்லை??

      நிதானத்தோடு சிந்துயுங்கள்.

      மேலதிக ஆரோக்கிய கலந்துறையாடளுக்கு Zafnas Zarook என்ற முக நூலிற்கு அழைப்பு விடுகிறேன்

      Delete
    2. jazaakall brother for your reply but if there is any sort falls in a system it is the government responsibility to correct it. In India I agree the Point you mentioned about the forge or unqualified doctorates. But it is not the point to put halt the country's development and utilities the unfortunate student whose hope is destroyed by the university cut of Marks. This what we need to think about it.
      Next think even I am very cautious about Sri Lankan doctors. I normally advise any one don't rely on one Doctor rather take second opinion for certain maters. Its my experience.
      As you said that you not against the private education. You are worried about the quality education. This can achievable. By putting very good sestem in place. such as government regulations.

      Delete
  3. உயர் தரத்தில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் மூன்று பாடங்களிலும் சித்தி அடைந்தாலே அவர் மருத்துவம் படிக்க தகுதியானவர். MBBS படிப்பது உயர் தரத்தில் இரசாயனவியல், பௌதிகவியல் பாடத்தில் சித்தியடைவதை விட கஷ்டம் இல்லை

    ReplyDelete
    Replies
    1. தாங்களின் கருத்து நகைப்புக்குறியது.மேலும் உயர் தரம் மற்றும் பல்கழை கழக கல்வி தொடர்பான அறிவினை தேடிப் பெறுமாறும்,விசேடமாக மருத்துவ துறை பற்றி விசாரித்தி ஓரளவேனும் அறிவினை பெற்று விட்டு ,வாருங்கள் மேலதிக விளக்கம் தருகின்றேன்..ஏனெனில் உங்களுக்கு முதலில் தேவை அடிப்படை அறிவே.

      மேலதிக விடயங்களுக்கு Zafnas zarook என்ற முகப்புத்தக பக்கத்துக்கு அழைப்பு விடுக்கின்றேன்

      Delete
  4. Firstly the SLMC report was biased that's why saitm had to goto courts... (I have personally read the report, and the reply saitm gave in response)
    and secondly most state universities medical faculty staffs are not so qualified like saitm staff, just because state university students have better access to teaching hospitals hospitals doesn't make them superior to Saitm doctors... even when the judiciary advised SLMC to take saitm students into teaching hospitals they ignored the court order...
    if you scroll Jaffna Muslim a while back you will come across how a srilankan doctor kidneys from patients, and how a surgeon did a wrong surgery,,, and if you scroll more, you will come across how SLMC behaved just to get their children into leading schools while thousands of patients suffered in agony... these are just the tip of the ice berg,,
    The truth is most SLMC wanted to keep their monopoly in trade,,,and of course every one of them is made by state run universities,,,

    ReplyDelete
    Replies
    1. என் கட்டுரையில் நான் குறிப்பிட்ட விடயத்திற்கு பதில் அளிக்காமல் வேறு விடயத்தினை பகிர்ந்துள்ளீர்.
      விடயத்திற்கு வறுகின்றென் எந்த நியமத்தின் அடிப்படையில் அரச கல்லூரிகளின் விரிவுரையாளர்களை எடை போடுகிறீர்?மேலும் இலங்கை வைத்தியர்கள் குறித்து உங்களின் தெளிவு போதாது எனறு நினைகிறேன்.

      அத்தோடு இலவசமாய் படித்தவர்க தவறாகவும்,முறைகேடாகவும் தொழில் செய்வதாய் சொல்லும் நீங்கள்,தகுதி அற்றவர்கள் 1.2 கோடி பணத்தினை செலவளித்து படித்த மருத்துவர்கள் ,தான செலவலித்த பணத்தை மீள Pஎர இதை விட மோசமான முறை கேடுகளில் ஈடுப்படமாட்டார்கள் என்று எவ்வாறு உறுதி மொழி அளிக்கின்றீர்??

      இலங்கை மருத்துவ் துறையின் வளர்ச்சி பற்றி அறிய இறுதிப் பந்தியை சரியாக வாசிக்கவும்.

      மேலதிக கலந்துறையாடல்களுக்கு Zafnas Zarook எனற முகப் புத்தகத்துக்கு அழைப்பு விடுக்கின்றேன்

      Delete
  5. Replies
    1. நன்றி சகோ..தவறுதலாக edit பன்னப் பட்டுவிட்டது

      Delete
  6. Thank you dear Zafnas Zarook

    ReplyDelete

  7. SAITM வேண்டாம் என்பதட்கு சிம்பிள் விளக்கம்.
    எனக்கு தமிழில் Type செய்ய சரியாக வராவிட்டாலும் கருத்தை பதிவிட முயல்கிறேன்.
    அரசாங்க வைத்தியர்கள் தங்கள் மட்டும்தான் வைத்தியராக வரவேண்டும் என்று நினைத்தால் ஏன் Russia & foreign medicines ஐ எதிர்க்கவில்லை.
    நடுநிலையாக சிந்திப்பவர்களுக்கு புரியும். நிறைய பேர் விளக்கம் புரியாமல் குழப்பி கொண்டிருக்கிறார்கள்.
    எல்லா பல்கலைக்கழகங்களுக்கும் ருத்துவ இறுதி ஆண்டு பரீட்சை common. O/L , A/L பரீட்சை போல் ஒரே நாளில் நடை பெறும். Foreign graduates உட்பட சகல பல்கலைக்கழக மருத்துவ மாணவர்களும் ஒரே வினா தாள், ஒரே making scheme. SAITM எங்களிடம் படித்தால் அந்த Exam எழுதாமலே SLMC Registration பெறலாம் என்று விளம்பர படுத்துகிறது. Foreign MBBS க்கு 40 தொடக்கம் 60 இலட்சம் செலவாகும்போது SAITM கட்டணம் 1 கொடியே 20 இலட்சத்தை தாண்டுகிறது. Z score இல் சில புள்ளிகளால் university கிடைக்காதவன் எதை தெரிவு செய்வான். நன்றாக படிக்க கூடிய மாணவர்களுக்கு Common general test ஒரு problem இல்லை.
    SAITM க்கு பணம் இருந்தால் எந்த துறையில் உள்ளவர்களும் MBBS ஆகலாம்.
    SAITM இல் கட்கும் மாணவர்களில் 50% கும் மேட்பட்டோர் வைத்தியர்களின் பிள்ளைகளே, இருந்தும் வைத்திய சங்கம் எதிர்ப்பதட்கு காரணம் இதுதான்.
    ஒரு பல்கலை கழகத்தின் தரம் அதனுடைய பௌதீக வளம், விரிவுரையாளர்கள் தரம் போன்றவற்றில் தங்கி உள்ளது. அரச பல்கலை கழகங்களில் தரம் வாய்ந்த விரிவுரையாளருக்கான சம்பளம் 1 இலட்க்ஷத்தை விடவும் குறைவு. Batticaloa , Rajarata போன்ற கஷ்ட university களிலும் வேலை பார்க்க வேண்டும். SAITM ஆனது professor ஓருவருக்கு 5 லட்சத்துக்கும் மேல் சம்பளம் கொடுக்க தயாராக உள்ளது. Colombo Luxury life உட்பட. SAITM அனுமதிக்க பட்டால் சிறந்த விரிவுரையாளர்களை அரச பல்கலை கழகங்கள் இழக்கும். Private universities top will in the world rankings.
    தனியார் பாடசாலைகளால் அரச பாடசாலைகள் ஏற்கனவே வலுவிழந்து வருகின்றன. இந்தியா போன்று அரச பாடசாலைகளில் படிப்பது கேவலமாக நோக்கப்படும் கலாச்சரம் உருவாகி வருகிறது. அதே நிலமை SAITM அனுமதிக்க பட்டால் மருத்துவ கல்விக்கும் ஏட்படும். கடைசியில் காசு இருந்தால்தான் கல்வி, மருத்துவ படிப்பு என்று ஆகிவிடும். எதிர்கால சந்ததியை நினைத்து சிந்தித்து செயல் படுவோம்.
    SAITM Medical faculty is full of children of politician, Doctors & Business men. They try to produce their children as a Doctor at any cost. (SAITM MBBS cost is more than 12 Million.) Foreign Medicine cost is 4 to 6 million. Difference is Foreign Graduates has to pass the common General test with local university students. To avoid the exam SAITM is the solution. If a student want to avoid the exam in an extra cost of 6 to 8 million imagine how much of medical knowledge will he have. (But, it’s not applicable to all students. Some students don’t want to go abroad and study also want be in SAITM.)

    ReplyDelete
    Replies
    1. இதை புரியாமல் நம்மவர்கள் இருப்பது கவலையே

      Delete
  8. Standardize rather than abolition....
    SLMC can allow saitm student to register with them when foreign graduates are allowed.
    Allow them to practice in government hospital . Then the public get more service. If fear on this quality train them with experts and create framework for longer trainings.
    Whatever think positively and acquire them in to national workforce . There are plenty of ways to use them for public wellbeing rather than for pity politics and monopoly. Think wisely and neutrally.

    ReplyDelete
    Replies
    1. வரவேற்கத் தக்க கருத்து,எனினும் இதுவரை உள்வாங்கப்பட்ட மாணவர்களின் தரம் மற்றும் அவர்களின் அறிவு என்பன அரச வைதிய சாலை பயிற்சிக்கு போதாது.மேலும் பிளாஸ்டிக் பொம்மைகளுக்கு வைத்தியம் பார்த்து பழகியவர்களுக்கு எவ்வாறு உயிரூள்ள பொம்மைய கொடுக்க முடியும் ??


      எனவே அவர்களின் கற்கை நெறியை ஆரம்பிக்கும் தேவை உள்ளது

      Delete
  9. There must be private universities.It will generate more Jobs and prosperity and more educate people.But all the process,qualification of students,exam and Standard of teaching must supervised by state university staff to keep it's standard par with government Universities.Then it will not become degree selling institution.

    ReplyDelete
  10. Thank you for your reply,

    lets put aside what i said about goverment medical uni staffs for a while,,, lets focus on how you can call saitm students "Unqualified" (தகுதி அற்றவர்கள்).? minimum entry criteria for saim medial degree is two Credit passes and one simple pass in Chemistry, Biology, Physics at GCE A/L examination conducted by the Department of Examinations of Sri Lanka and equivalent qualifications for all other foreign examinations.


    அத்தோடு இலவசமாய் படித்தவர்க தவறாகவும்,முறைகேடாகவும் தொழில் செய்வதாய் சொல்லும் நீங்கள்,தகுதி அற்றவர்கள் 1.2 கோடி பணத்தினை செலவளித்து படித்த மருத்துவர்கள் ,தான செலவலித்த பணத்தை மீள Pஎர இதை விட மோசமான முறை கேடுகளில் ஈடுப்படமாட்டார்கள் என்று எவ்வாறு உறுதி மொழி அளிக்கின்றீர்??
    i never said people who got free education engage in unmoral acts, what i meant was just beacuse some doctors study in goverment uni's doesnt make them top of their trade. Just the way you cant acuse Saitm student to be money hungry people.

    in your article the main short coming you have pointed out is, not having a proper teaching hospital. but in truth, Saitm students go clinical trials at Awisawella base hospital and the Kaduwela MOH in adition to Naille fernando hospital. so i think you should read more about saitm.

    இலங்கை மருத்துவ் துறையின் வளர்ச்சி பற்றி அறிய இறுதிப் பந்தியை சரியாக வாசிக்கவும்.
    yeah here are some aditional facts,
    Medical practionars are a very few in Sri Lanka, even though we do fare much better than most south Asian nations. Ratio for doctors to patients is 55.2 doctors per 100,000 population which is still way below the global average of 170 doctors per 100,000 population. if SLMC real intentions are people's benifit then why not adress this issue and made plans to improve this.
    பண பலமும் ,அதிகாரமும் கொண்ட அணி ஆனது, ஆசியாவில் குழந்தை இறப்பு வீதம் 1000 இற்கு 9 .5 என்ற வீதத்தினை பேண உதவிய சுமார் 17 , 129 தகுதியான வைத்தியர்களை இனம் காட்டிய SLMC இணை சுய நலத்துக்காய் அழிக்க ஒன்று கூடியுள்ளது.

    Usual practise with professional bodies (Such as SLMC) is try to limit the number of individuals passing out per year to make sure that the supply will never meet the demand to ensure that wages and benifits will always remain high.



    the point im making is that, this issue is only being made by SLMC. thats why i say from the begining, the report published by SLMC is biased and has only one purpose but to squash saitm.
    Saitm is a Degree Awarding Institute referred to in the Universities Act (Section 25 and 70A – 70D of part IXA) and also in the Medical Ordinance (Medical Amendment Act No. 25 of 1988). so it does satisfy requiremnts set by ministry of health. And in adition to that, all students of the Malabe Medical College can practice as doctors in Sri Lanka once they pass out. this qulifies them to practice abroad by sitting for exams such as the PLAB exam in the UK. So why cant SLMC accept this?
    Thats why Saitm sudents have to go to courts to win their rights.

    Lookback on other things SLMC has fought for, Schools for their children, vehicle permit for themselves to name a few.
    but i have never seen SLMC fight for increase in medical spenditure in budget, establishing homiopthy body in srilanka etc.

    So by all means we should wait for Jan 31 for the court to make a decision, and hopefully it will bring SLMC to track.

    ReplyDelete
  11. @Muslim Way
    பரக்கல்லாஹ் பீஹ்
    உண்மை அரசு மேலைத்த தேய நாடுகளை போன்று தர நிர்ணயம் கொண்ட சில தனியார் கல்லூரிகளை அமைப்பது காலத்தின் தேவை. மேலும் அதற்கு சரியான சட்டம் பின்பற்ற பட வேண்டும். இது குறித்து ஏற்கனவே அரச மடடத்தில் சில முயரசிகளை மேற்கொண்டு வருவதாக அறிகிறேன்.

    எனினும் இன்று இலங்கையில் சதாம் என்பது அதிகார வர்க்கத்தின் கையில் இருப்பதால் , அது எவ்வையான தாக்கத்தினை ஏற்படுத்தும் என்பது கேள்விக்குறிதான்??

    நம் நோக்கம் சிறந்த எதிர்கால சமூகம் உருவாக்க வேண்டும் என்பதே.. பொறுத்திருந்து பார்ப்போம் எதிர்கால பிரதி பலன்களை.





    ReplyDelete
  12. @Hamdhan

    இது போன்ற ஆரோக்கியமான கருத்துப் பரிமாறலை நேசித்தவனாய் உங்கள் வினாக்களுக்கு பதில்களை தருகின்றேன்.

    1 . 2012 ம் ஆண்டில் இருந்து நான் மாலபே இல் எனக்கு அதிகம் தொடர்புகள் இருந்துள்ளது. அந்த அனுபவத்தினை வைத்து நான் தெளிவாய் குறிப்பிடுவேன் அங்கு 3 பாட சித்தி என்ற தரம் பேணப் படவில்லை. 2 படங்கள் சித்தி என்றால் 3 அல்லது 4 மாத கற்கை நெறி ஒன்றினை முதலில் தொடர வேண்டும் ,அதற்கும் பணம் அரவிடப்படும்.
    அத்தோடு ஆரம்ப காலத்தில் காலை மற்றும் வர்த்தக துறையில் கற்றவர்களும் உள்வாங்கப்பட்டு , 2013 ஆண்டின் நடுப்பகுதி அளவில் அவர்கள் நீக்கப் படடார்கள். எனவே நீங்கள் சொல்லும் தரம் இங்கு கருத்தில் கொள்ளப்படவில்லை.
    2 . மாலபே மாணவர்கள் Money Hungry உடையவர்கள் என்ற வாதத்தினை நான் முன்வைக்கவில்லை ,மாறாக மனித இயல்பிணை சொல்கிறேன். உதாரணமாக நான் ஒரு கல்வியை அல்லது ஒரு வியாபாரத்தினை பெற அல்லது ஆரம்பிக்க ஒரு முதலீடு செய்வேன் ஆயின் , நான் இடட முதலை எப்படியாவது அடைய வேண்டும் என்ற எண்ணம் மனிதனிடத்தில் ஏற்படும், அது இயற்கையாகவே நம்மை பணம் பெரும் இயந்திரமாக மாற்ற வாய்ப்புள்ளது. மேலும் 1 . 2 கோடி என்பது மிகப் பெரும் தொகை. நான் அனைவரையும் குறிப்பிடவில்லை. ஒரு சிலர் இவ்வாறு நடப்பார்கள் என்று எடுகோளின் அடிப்படையில் கூறுகிறேன்.

    தொடரும்..

    ReplyDelete
  13. 3 . நான் போதுமான அளவு மாலபே பற்றி அறிந்திருந்தாலும் ,உங்கள் வேண்டு கோள் இற்கு இணங்க மீண்டும் ஒரு முறை தேடுகின்றேன் என்ற வாக்குறுதியோடு ,நீங்கள் சொன்ன Avisavalla , kaduwala பற்றி சிறு விளக்கம் தருகின்றேன்

    பிரமாண்ட தனியார் Teaching வைத்தியசாலை உண்டு என்ற விளம்பரத்தில் மாணவர் உள்வாங்கப்படட போதும் அங்கு 'ஹர்த்தால்' போன்று சன நடமாடடம் இல்லாமல் இருந்த காரணத்தாலும் ,மாணவர்களின் தொடர் நெருக்குதலாலும், மாலப நிர்வாகம் முன்பு SP இணை நாடியது போன்று ராஜித இணை நாடினர். அவர்களின் உள் பேசசு வார்த்தைகளை தொடர்ந்து, அரசகத்துக்கு பணம் செலுத்துவதாக இணங்கி ,அரச வைத்தியசாலை ஒதுக்கப் படும் என்ற வாக்குறுதி அளிக்க படடது. எனினும் GMOA உள்ளடங்கலாக பலர் மாலப மாணவர்களின் மீது ஆதாரத்துடன் முன் வைத்த குற்றசாட்டினை தொடர்ந்து றஜிதாவின் முயற்சி தோல்வி அடைந்தது.

    எனினும் கொழும்பு மாவட்டத்தில் உள்ள 8 அரச Teachng Hospital யிலும் அனுமதி மறுக்கப் படத்தை அடுத்து வெறும் 477 கட்டில்களை கொண்ட தரம் A உடைய 11 பிரிவுகலீல் சிகிசை அளிக்க கூடிய அவிசாவளை ஆதார வைத்திய சாலை ஒதுக்கப் பட்ட்து. எனினும் அங்கு பாரிய வருத்தங்களை சிகிக்சை அளிக்கப்படுவது இல்லை என்பதினையும் நினைவூட்டுகிறேன். அத்தோடு அங்கு சென்ற மலபா மாணவர்களுக்கு தாதியர் தொடக்கம் பலர் தடையாக இருந்தமையும் இங்கு நினைவுடட வேண்டிய விடயம்.

    அடுத்து கடுவலை MOH .. இவ் நிலையமானது இலங்கை சுகாதார அமைச்சினால் வைத்தியசாலையாக குறிப்பிடப் படாமல் primary medical care unit ஆக வரையறை செய்யப் பட்டுள்ளது. எனவே இது குறித்த மேலதிக விளக்கம் தேவை இல்லை என நினைக்கிறேன்.

    ஆக மொத்தம் சுமார் 800 மாணவர்களை கொண்ட தனியார் கல்லூரி ஒரு பின் தங்கிய ஆதார வைத்தியசாலை மற்றும் primary medical care unit இல் பயிற்சி பெற்று வைத்தியன் ஆக முடியுமா?? அரச தாதியர் மாணவர்கள் இவர்களை விட எவ்வளவு மேலானவர்கள் என்பதினை அனைவரும் விளங்க முடியும் .

    Dr Navile வைத்திசாலை தொடர்பாய் நான் அறியவில்லை அறிந்தவுடன் உங்களுக்கு அறிய தருகிறேன்.

    4 . உணவில்லை என்பதற்காய், விஷத்தை அருந்தலாமா?இருக்க்கும் வைத்தியர்கள் போதவில்லை என்பதற்காய் முறையற்ற / தகுதி இல்லாத வைத்தியர்களை உருவாக்க முடியுமா?? இதனை நிவர்த்தி செய்யும் முகமாக தான் வெளிநாட்டு புலமைப் பரிசில் களினை கூட அதிகம் ஆர்வம் ஊட்டுகிறது.

    5 . 1925 ம் ஆண்டு தொடக்கம் இயங்கும் SLMC ஆனது Act No. 40 of 1998 என்றதுக்கு அமைவாக அங்கீகாரம் அளிக்கப்படடது.
    சுமார் இன்றய நாளில் 18 ௦௦௦ பேரினை சிறந்த வைத்தியர் கலாய் அறிமுகம் செயது சுகாதார நிலைமையில் உச்ச நிலையை நம் நாடு பேண உதவியது. இப்படிபடட ஒரு நிறுவனத்தின் மீது தன்னுடைய் முறை கெடட கல்லூரியை ஏற்கவில்லை என்பதற்காய் வழக்கு தொடர்வது நியாயமா?? விளம்பரத்தில் போலியாய் SLMC அங்கிகாரம் என்று இடுவது தகுமா?? SLMC தகுதி அற்றது எனில் அவர்களிடம் முதலில் தன் கல்லூரியை அங்கிகரிக்குமாறு வேண்டியது ஏன்?? SLMC இந்த குழுவினை மேற்பார்வைக்கு அழைத்தமை ஏன்?? அன்று நல்லவர்களாவும் திறமையானவர்களாவும் தோன்றியவர்கள் இன்று அனுமதி மறுக்கப் பட்ட்தால் மோசமானவர்கலாய் மாறியதன் மாயம் என்ன ??

    சகோதரே மீண்டும் சொல்கிறேன் நாங்கள் முறையற்ற கல்விக்கு எதிரானவர்கள்.

    டிசெம்பர் 31 நியாயத்துக்கு ,அநியாயத்துக்கு இடையிலான போராட்த்தின் இறுதி நாள்..

    தரமான கலவிக்கு புளிக்கும் இடையிலான போராட்த்தின் இறுதி நாள்..

    மாபியாக்களுக்கும் ,அதிகாரத்தினதும் ஒடுக்கலுக்குரிய போராட்த்தின் இறுதி நாள்..


    பார்ப்போம்.. உண்மை வெல்லுமா ?? போய் வெல்லுமா என்று??

    ReplyDelete
  14. 3 . நான் போதுமான அளவு மாலபே பற்றி அறிந்திருந்தாலும் ,உங்கள் வேண்டு கோள் இற்கு இணங்க மீண்டும் ஒரு முறை தேடுகின்றேன் என்ற வாக்குறுதியோடு ,நீங்கள் சொன்ன Avisavalla , kaduwala பற்றி சிறு விளக்கம் தருகின்றேன்

    பிரமாண்ட தனியார் Teaching வைத்தியசாலை உண்டு என்ற விளம்பரத்தில் மாணவர் உள்வாங்கப்படட போதும் அங்கு 'ஹர்த்தால்' போன்று சன நடமாடடம் இல்லாமல் இருந்த காரணத்தாலும் ,மாணவர்களின் தொடர் நெருக்குதலாலும், மாலப நிர்வாகம் முன்பு SP இணை நாடியது போன்று ராஜித இணை நாடினர். அவர்களின் உள் பேசசு வார்த்தைகளை தொடர்ந்து, அரசகத்துக்கு பணம் செலுத்துவதாக இணங்கி ,அரச வைத்தியசாலை ஒதுக்கப் படும் என்ற வாக்குறுதி அளிக்க படடது. எனினும் GMOA உள்ளடங்கலாக பலர் மாலப மாணவர்களின் மீது ஆதாரத்துடன் முன் வைத்த குற்றசாட்டினை தொடர்ந்து றஜிதாவின் முயற்சி தோல்வி அடைந்தது.

    எனினும் கொழும்பு மாவட்டத்தில் உள்ள 8 அரச Teachng Hospital யிலும் அனுமதி மறுக்கப் படத்தை அடுத்து வெறும் 477 கட்டில்களை கொண்ட தரம் A உடைய 11 பிரிவுகலீல் சிகிசை அளிக்க கூடிய அவிசாவளை ஆதார வைத்திய சாலை ஒதுக்கப் பட்ட்து. எனினும் அங்கு பாரிய வருத்தங்களை சிகிக்சை அளிக்கப்படுவது இல்லை என்பதினையும் நினைவூட்டுகிறேன். அத்தோடு அங்கு சென்ற மலபா மாணவர்களுக்கு தாதியர் தொடக்கம் பலர் தடையாக இருந்தமையும் இங்கு நினைவுடட வேண்டிய விடயம்.

    அடுத்து கடுவலை MOH .. இவ் நிலையமானது இலங்கை சுகாதார அமைச்சினால் வைத்தியசாலையாக குறிப்பிடப் படாமல் primary medical care unit ஆக வரையறை செய்யப் பட்டுள்ளது. எனவே இது குறித்த மேலதிக விளக்கம் தேவை இல்லை என நினைக்கிறேன்.

    ஆக மொத்தம் சுமார் 800 மாணவர்களை கொண்ட தனியார் கல்லூரி ஒரு பின் தங்கிய ஆதார வைத்தியசாலை மற்றும் primary medical care unit இல் பயிற்சி பெற்று வைத்தியன் ஆக முடியுமா?? அரச தாதியர் மாணவர்கள் இவர்களை விட எவ்வளவு மேலானவர்கள் என்பதினை அனைவரும் விளங்க முடியும் .

    Dr Navile வைத்திசாலை தொடர்பாய் நான் அறியவில்லை அறிந்தவுடன் உங்களுக்கு அறிய தருகிறேன்.

    4 . உணவில்லை என்பதற்காய், விஷத்தை அருந்தலாமா?இருக்க்கும் வைத்தியர்கள் போதவில்லை என்பதற்காய் முறையற்ற / தகுதி இல்லாத வைத்தியர்களை உருவாக்க முடியுமா?? இதனை நிவர்த்தி செய்யும் முகமாக தான் வெளிநாட்டு புலமைப் பரிசில் களினை கூட அதிகம் ஆர்வம் ஊட்டுகிறது.

    5 . 1925 ம் ஆண்டு தொடக்கம் இயங்கும் SLMC ஆனது Act No. 40 of 1998 என்றதுக்கு அமைவாக அங்கீகாரம் அளிக்கப்படடது.
    சுமார் இன்றய நாளில் 18 ௦௦௦ பேரினை சிறந்த வைத்தியர் கலாய் அறிமுகம் செயது சுகாதார நிலைமையில் உச்ச நிலையை நம் நாடு பேண உதவியது. இப்படிபடட ஒரு நிறுவனத்தின் மீது தன்னுடைய் முறை கெடட கல்லூரியை ஏற்கவில்லை என்பதற்காய் வழக்கு தொடர்வது நியாயமா?? விளம்பரத்தில் போலியாய் SLMC அங்கிகாரம் என்று இடுவது தகுமா?? SLMC தகுதி அற்றது எனில் அவர்களிடம் முதலில் தன் கல்லூரியை அங்கிகரிக்குமாறு வேண்டியது ஏன்?? SLMC இந்த குழுவினை மேற்பார்வைக்கு அழைத்தமை ஏன்?? அன்று நல்லவர்களாவும் திறமையானவர்களாவும் தோன்றியவர்கள் இன்று அனுமதி மறுக்கப் பட்ட்தால் மோசமானவர்கலாய் மாறியதன் மாயம் என்ன ??

    சகோதரே மீண்டும் சொல்கிறேன் நாங்கள் முறையற்ற கல்விக்கு எதிரானவர்கள்.

    டிசெம்பர் 31 நியாயத்துக்கு ,அநியாயத்துக்கு இடையிலான போராட்த்தின் இறுதி நாள்..

    தரமான கலவிக்கு புளிக்கும் இடையிலான போராட்த்தின் இறுதி நாள்..

    மாபியாக்களுக்கும் ,அதிகாரத்தினதும் ஒடுக்கலுக்குரிய போராட்த்தின் இறுதி நாள்..


    பார்ப்போம்.. உண்மை வெல்லுமா ?? போய் வெல்லுமா என்று??

    ReplyDelete

Powered by Blogger.