யாழ்ப்பாண முஸ்லிம் பகுதிகளுக்கு, ஒன்றரைக்கோடி ரூபா பெறுமதியான அபிவிருத்தி திட்டங்கள்
-பாறுக் ஷிஹான்-
யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் அக்கறையோடு செயற்பட்டு வரும் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் மீள்குடியேற்ற இணைப்பாளர் சுபியான் மௌலவிக்கு யாழ் முஸ்லிம்கள் தங்கள் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
சுமார் ஒன்றரைக்கோடி ரூபா பெறுமதியான அபிவிருத்தி திட்டங்கள் யாழ் முஸ்லிம்கள் வாழும் பகுதிக்கு பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டமை குறித்தும் அதற்கு அயராது பாடுபட்டமைக்காகவும் தங்களது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
யாழ் முஸ்லீம்கள் வாழும் பகுதிகளில் சிறைச்சாலைகள் மறு சீரமைப்பு புனர்வாழ்வளிப்பு மீள் குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர். டீ.எம். சுவாமி நாதனின் அமைச்சின் மூலம் யாழ் பிரதேச செயலகம் மற்றும் யாழ் மாநகரசபை ஊடாக பல்வேறு வேலைத்திட்டங்களுக்காக சுமார் 15 கொடி ரூபா கடந்த வருட இறுதியில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
இம்முயற்சி நடைபெற காரணம பிரதான காரணம் வடக்கு மீள்குடியேற்ற செயலணி அகும். இச செயலணியின் இணைத்தலைவரான அமைச்சர் ரிஷாத் பதியுதீன் செயற்படுவதுடன் அமைச்சரின் மீள்குடியேற்ற இணைப்பாளராக செயற்படும் மௌலவி சுபியானின் முழு முயற்சியினாலேயே யாழ் மஸ்லிம்கள் வாழும் பகுதிகளிற்கு இத்திட்ட வரைபுகள் பிரதேச செயலகங்கள் மற்றும் யாழ் மாநகர சபை ஊடாக முன்னெடுக்கப்பட்டு அமைச்சருக்கு சமர்பிக்க பட்டு அடுத்து குறித்த நிதி ஒதுக்கீட்டுகள் தற்போது நடைமுறைப்படுத்தபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் மீள்குடியேற்ற இணைப்பாளராக செயற்படும் மௌலவி சுபியானிற்கு நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
இத்திட்டங்களில் வீடுகளுக்கான கழிவு நீர்த்தாங்கி அமைத்தல் திட்டம் ( புதியசோனக தெரு பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது) அத்துடன் எம்.ஓ வீதி காமால் வீதி கலீமா வீதி அசனார் லெப்பை வீதி உள்ளிட்ட வீதிகளும் ஹதீஜா பெண்கள் கல்லூரிக்கான தளபாடக் கொள்வனவு ஓஸ்மானியாக் கல்லூரி திருத்தம் மற்றும் தளபாடக் கொள்வனவு என்பன உள்ளடங்குகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
Post a Comment