இலங்கையில் 'ஹய்பர் இன்சுலின்மியா' பரவியுள்ள, ஒரேயொரு நோயாளி இவர்தான்..!
கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டுள்ள யெஹாலி சஞ்சனா என்ற குழந்தைக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளையும் வழங்குவதற்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன நடவடிக்கை எடுத்துள்ளார்.
உடலில் இன்சுலின் ஹோர்மோன் அதிகரித்தமையால் ஏற்பட்டுள்ள ஹய்பர் இன்சுலின்மியா என்ற நோய் தாக்கம் உடைய குழந்தை பற்றி கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.
இந்த செய்தி வெளியானதை தொடர்ந்து குழந்தைக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளையும் வழங்குவதற்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன நடவடிக்கை எடுத்ததுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
3 வயதும், 10 மாதங்களுமான யெஹாலியா நேற்று பெற்றோருடன் சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இதன்படி விரைவாக செயற்பட்ட சுகாதார அமைச்சர், தேவையான மருந்துகளை குழந்தைக்கு பெற்று கொடுக்குமாறு ஒளடத பிரிவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் ஹய்பர் இன்சுலின்மியா என்ற பெயருடைய இந்த நோய் பரவியுள்ள ஒரே ஒரு நோயாளி குழந்தை இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment