ஆட்சியை கைப்பற்றும் போராட்டம், தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் - மஹிந்த
ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். எதிர்வரும் 27ம் திகதி நுகேகொடையில் நடைபெறவுள்ள கூட்டம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் சில அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க ஆயத்தமாக இருந்தார்கள் எனவும், அவர்களை பங்கேற்க வேண்டாம் என தாம் கோரியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை கைது செய்து விளக்க மறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், மூன்று மாத காலம் வரையில் அவரை பிணையில் விடுதலை செய்ய வேண்டாம் என ஒரு அமைச்சர் கூறியுள்ளதாகவும் நீதிமன்றம் தீர்மானம் எடுக்கின்றதா அல்லது அமைச்சர்கள் தீர்மானங்கள் எடுக்கின்றார்களா என்பது புரியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
27ம் திகதி கூட்டத்தில் பங்கேற்கும் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களின் பிள்ளைகள் சிறையில் அடைக்கப்படுவர் என ஒரு முதலமைச்சர் கருத்து வெளியிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Allavin naddathal athu orupothum nakkathu........ALLAH is the Great.
ReplyDeleteean enral muslimkalukku PAKSA kudumpum evelavu anniyankal seithiyal....Allah ourpothum pakkasa kudumpathai inthe naddukku archi amakka orupothum uthaviseiya maddaan ............Ameen