Header Ads



ஜனாதிபதி, பிரதமர் கனவுகளுடன் கோத்தா - சீனாவின் உளவு அமைப்பும் உதவி..?

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தீவிரமாக அரசியல் ஈடுபடவுள்ளதாக தற்போது அதிகம் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கோத்தபாயவின் அரசியல் வரவிற்காக இலங்கையின் பிரதான சிங்கள தொலைக்காட்சி ஒன்றில் பல வேலைத்திட்டங்களை பிரச்சாரம் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டத்தில் கோத்தபாய ராஜபக்சவுடன் ஊர் ஊராக சென்று மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சினையை கலந்துரையாடி அதற்கான பதிலை கோத்தபாய ராஜபக்சவிடம் பெற்றுக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

அதன் ஊடாக ராஜபக்ச மக்களுடன் இணைந்த அரசியல் தலைவராக உள்ளார் என்பதனை காட்டுவதே இதன் நோக்கமாகும்.

அத்துடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக அவமதிப்புகளை மேற்கொள்வது மற்றும் கோத்தபாய ராஜபக்சவின் சகோதரரான பசில் ராஜபக்சவின் அரசியல் திட்டங்களை கெடுப்பதுமே இதன் நோக்கமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பசில் ராஜபக்ச அரசியல் ரீதியில் வலுவடைவது, கோத்தபாய ராஜபக்சவின் அரசியல் வரவிற்கு தடையாக உள்ளமைக்கமைய, பசில் ராஜபக்ச ஏற்பாடு செய்யும் அரசியல் நிகழ்வுகளிலும் கோத்தபாய ராஜபக்ச கலந்து கொள்ளாமை, கடந்த காலங்களில் குறிப்பிடத்தக்க விடயமாக காணப்பட்டது.

கோத்தபாய ராஜபக்ச வியத்-மக என்ற அமைப்பின் சிலருடன் கடந்த காலங்களில் கிராமங்களுக்கு சென்று மக்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளார்.

எப்படியிருப்பினும் இந்த வேலைத்திட்டம் பாத் பைன்டர் என்ற அரசசார்பற்ற அமைப்பின் தலைவரான மிலிந்த மொரகொடவின் திட்டத்திற்கமைய செயற்படுவதாக தெரியவந்துள்ளது.

பாத் பைன்டர் நிறுவனம் சீனாவின் CICIR (China Institutes of ontemporary International Relations) நிறுவனத்துடன் புரிந்துணர்வுக்கு வந்து, இலங்கை அரசியல் முகாமைத்துவம் மேற்கொள்ளும் செயற்பாட்டில் தொடர்புப்பட்டுள்ளதாகவும், கோத்தபாய ராஜபக்சவை 2020ஆம் ஆண்டு ஜனாதிபதி அல்லது பிரதமராக்கும் எதிர்பார்ப்பில் உள்ளதாகவும் கடந்த ஆண்டு ஜுலை மாதம் செய்தி வெளியாகியிருந்தன.

இந்த நிறுவனம் சீனாவின் வெளிநாட்டு கொள்கை தயாரிப்பதற்கான செல்வாக்கை கொண்ட நிறுவனமாக கருதப்படுகின்ற நிலையில் சீனாவின் ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் கண்கானிப்பின் கீழ் செயற்படுத்தப்படுகின்ற புலனாய்வு பிரிவினராகும்.

3 comments:

  1. பத்தொன்பதாவது திருத்தத்தின் படி பிரிவு 91(அ)x111 இற்கேற்ப இரட்டை பிரஜாவுரிமை உள்ள ஒருவர் நாட்டின் ஜனாதிபதியாக முடியாது.கோதாபாய இரட்டை பிரஜாவுரிமை உள்ளவராதளால் ஜனாதிபதியாக தேர்தலில் போட்டியிட முடியாது.

    ReplyDelete
  2. My3 & Ranil have paved the way for Rajapaksas to emerge

    ReplyDelete
  3. அல்லாஹ் உன்னை நாசமாக்க நினைத்து விட்டால் உலகில் உன்னை யாராலும் காப்பாத்த முடியாது
    யா அல்லாஹ் இவனின் எல்லா நடவடிக்கையையும் நீ அறிந்தவன் இவனின் தீய எண்ணங்களில் இருந்து எம்மை பாதுகாப்பாயாக

    ReplyDelete

Powered by Blogger.