நெதர்லாந்தில் தமிழ், சிறுவன் தற்கொலை - காரணம் என்ன..?
நெதர்லாந்தில் Heerlen எனும் இடத்தில், தருக்சன் செல்வம் என்ற 15 வயது ஈழத் தமிழ் சிறுவன், தற்கொலை செய்து தனது வாழ்வை முடித்துக் கொண்டான். பாடசாலையில் கூடப் படிக்கும் அவனது சக மாணவர்களின் துன்புறுத்தல் காரணமாக மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டான்.
சக மாணவர்கள், இணையத்தில் (Instagram) அவனது படத்தை போட்டு மோசமாக எழுதியிருந்தனர். பலர் போலிப் பெயரில் வந்து வசை பாடி இருந்தனர். அதனால் கிறிஸ்மஸ் விடுமுறை முடிந்த பின்னரும் பாடசாலைக்கு திரும்ப மனமில்லாமல் இருந்துள்ளான்.
ஏழு கிழமைக்கு முன்னர், தருக்சன் ஏற்கனவே ஒரு தடவை தற்கொலைக்கு முயன்றதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். இது தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்தும் அவர்கள் அக்கறை எடுக்கவில்லை, எந்த உதவியும் கிடைக்கவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர். அவனது பாடசாலை நிர்வாகத்துடன் கதைத்தும், அவர்களும் கவனம் எடுக்கவில்லை என்றனர்.
தருக்சன் பாடசாலை சென்ற காலங்களில் அங்கு தன்னோடு யாரும் பேசுவதில்லை என்று கவலைப் பட்டிருக்கிறான். ஆனால், வீட்டில் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்ததாக சகோதரி சரண்யா தெரிவித்தார்.
தருக்சன் தற்கொலை செய்வதற்கு முன்னர் பிரியாவிடை கோரும் கடிதம் எழுதி வைத்திருக்கிறான். இந்தத் தகவல் லிம்பூர்க் பிராந்திய ஊடகங்களில் வந்தது.
Post a Comment