அமைச்சரவையில் மாற்றம், மோசடி அமைச்சர்கள் நீக்கம்
மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் நாடாளுமன்ற விவாதம் நடத்தப்பட்டதன் பின்னர் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
குறித்த நாடாளுமன்ற விவாதத்தின் பின்னர் அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக அரசாங்கத்தின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் சிங்கள வார இறுதிப் பத்திரிகையொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இதன்படி சில முக்கியமான அமைச்சுப் பதவிகளில் மாற்றம் செய்யப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக பிணை முறி மோசடியுடன் தொடர்புடைய சில அமைச்சர்களின் பதவிகளில் மாற்றம் செய்யப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோப் அறிக்கையில் சில அமைச்சர்கள் இந்த மோசடியுடன் நேரடியாக தொடர்புபட்டுள்ளமை அம்பலமாகியுள்ளமையினால் சில அமைச்சர்களின் செயற்பாடுகளினால் ஒட்டுமொத்த அரசாங்கமும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. எனவே அவர்களின் பதவிகளில் மாற்றம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுதந்திரக் கட்சி வட்டாரத் தகவல்களும் தெரிவிக்கின்றன.
இதேவேளை எதிர்வரும் 24ஆம் திகதி பிணை முறி மோசடி தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment