Header Ads



தொலைபேசியில் உரையாடியபடி நடந்த இளைஞன், அலைகளால் அடித்துச்செல்லப்பட்டு பலி

புது­வ­ருடக் கொண்­டாட்­டத்திற்­கு நண்­பர்­க­ளுடன் கடற்­க­ரைக்குச் சென்ற இளைஞர் ஒருவர் கட­லில் மூழ்கி உயி­ரி­ழந்த சம்­பவம் மட்­டக்­க­ளப்பு புதுக்­கு­டி­யி­ருப்பில் ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்­றுள்­ள­தாக காத்­தான்­குடிப் பொலிஸார் தெரி­வித்­தனர்.

புதுக்­கு­டி­யி­ருப்பு ஐந்தாம் வட்­டாரம், தேத்­தா­வடி வீதியைச் சேர்ந்த  23 வய­தான இளை­ஞரே உயி­ரி­ழந்­த­வ­ராவார்.

கடல் அலையால் இழுத்துச் செல்­லப்­பட்டு மீண்டும் கடல் அலையால் கரை சேர்க்­கப்­பட்ட நிலையில் மீட்­கப்­பட்டு காத்­தான்­குடி ஆதார வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட போதும் அவர் முன்­ன­தா­கவே இறந்து விட்­ட­தாக வைத்­தி­ய­சா­லையில் தெரி­விக்­கப்­பட்­டது.

சம்­ப­வம்­பற்றி மேலும் தெரிய வரு­வ­தா­வது, தனது நண்­பர்­க­ளுடன் இந்த இளைஞர் உல்­லா­ச­மாக புது­வ­ருடப் பொழுதைக் கழிப்­ப­தற்­காக கடற் கரைக்குச் சென்­றுள்ளார்.

அதன் போது கைத்­தொ­லை­பே­சியில் உரை­யா­டி­ய­ப­டியே  கடற்­க­ரையில் நடந்து சென்று கொண்­டி­ருந்த போது திடீ­ரென  எழுந்த பேர­லை­யினால் கட­லுக்குள் இழுத்துச் செல்­லப்­பட்­டுள்ளார்.

இவரை நண்­பர்கள் உட­ன­டி­யாக மீட்டு  வைத்தியசாலையில் அனுமதித்த போதும் அவனது உயிர் ஏற்கெனவே பிரிந்து விட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

No comments

Powered by Blogger.