Header Ads



பூர்வீகக் காணியில் குடியேறிய முஸ்லிம்களுக்கு, எதிராக குரல் எழுப்புவது இனவாதம் - திலக் காரி­ய­வசம்

வில்­பத்­துவில் வன பிர­தே­சங்­களை முஸ்­லிம்கள் அழிக்­க­வில்லை. முஸ்­லிம்கள் தாங்கள் குடி­யி­ருந்த காணி­க­ளையே துப்­பு­ரவு செய்து குடி­யே­றி­யுள்­ளனர்.

பொது­ப­ல­சேனா அமைப்பும், சில சூழ­லி­ய­லா­ளர்­க­ளுமே வில்­பத்து தேசி­ய­வனம் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்­ள­தாக தவ­றாகப் பிர­சாரம் செய்­கி­றார்காள். இதன் பின்­ன­ணியில் பொது­ப­ல­சேனா அமைப்பே செயற்­ப­டு­கி­றது என தேசிய சூழ­லி­ய­லாளர் அமைப்பைச் சேர்ந்த சூழ­லி­ய­லாளர் திலக் காரி­ய­வசம் தெரி­வித்தார்.

சிவில் அமைப்­பு­களும் அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களும் அர­சி­யல்­வா­தி­களும் கலந்து கொண்ட வில்­பத்து விவ­காரம் தொடர்­பான கலந்­து­ரை­யா­ட­லொன்று கடந்த வெள்­ளிக்­கி­ழமை கொழும்பு ரமடா ஹோட்­டலில் இடம்­பெற்­றது. இக்­க­லந்­து­ரை­யா­டலில் பங்கு கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே சூழ­லி­ய­லாளர் திலக் காரி­ய­வசம் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் தெரி­வித்த­தா­வது;

இன்று வில்­பத்து விவ­காரம் பெரும்­பான்மை இன மக்கள் மத்­தியில் தவ­றாகப் பிர­சாரம் செய்­யப்­ப­டு­கி­றது. முஸ்­லிம்கள் வில்­பத்து தேசிய வனத்தை அழிக்­கி­றார்கள். மரங்­களை வெட்­டு­கி­றார்கள், மிரு­கங்­களைக் கொல்­கி­றார்கள் என்­றெல்லாம் பிர­சாரம் செய்­யப்­ப­டு­கி­றது. இவை அனைத்தும் பொய்ப் பிர­சா­ர­மாகும்.

முஸ்­லிம்கள் தமது பூர்­வீகக் காணி­க­ளையே துப்­பு­ரவு செய்து மீள் குடி­யே­றி­யி­ருக்­கி­றார்கள். நாட்டின் தேசிய சொத்­தான வனத்தை அழிக்க வேண்­டிய தேவை முஸ்­லிம்­க­ளுக்கு இல்லை. இந்த உண்மை நிலையை அர­சாங்கம் நாட்டு மக்­க­ளுக்கு குறிப்­பாக பெரும்­பான்மை மக்­க­ளுக்குத் தெளி­வு­ப­டுத்த வேண்டும்.

வில்­பத்து விவ­கா­ரத்தை பின்­னா­லி­ருந்து இயக்கி பொது­ப­ல­சேனா அமைப்பு சுய இலாபம் பெற்றுக் கொள்ள முயற்­சிக்­கி­றது. இவ்­வா­றான முயற்­சி­க­ளினால் நாட்டில் நல்­லி­ணக்­கத்தைக் கட்­டி­யெ­ழுப்ப முடி­யாது.

கடந்த கால அர­சாங்­கத்தின் காலத்­தி­லேயே பெரு­ம­ளவு காடுகள் அர­சியல் லாபத்­துக்­காக அழிக்­கப்­பட்­டன. கலா­போ­கஸ்­வெவ பகு­தியில் ஆயி­ரக்­க­ணக்­கான ஏக்கர் காடுகள் அழிக்­கப்­பட்டு அவ்­வி­டங்­களில் தென்­னி­லங்கை மக்­களை அழைத்து வந்து குடி­யேற்­றி­னார்கள். அக் குடி­யேற்­றத்­துக்கு மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக் ஷவின் பெயரே சூட்­டப்­பட்­டது.

அக் குடி­யேற்றம் ‘நாமல்­கம’ என அழைக்­கப்­பட்­டது. சுமார் 5000 குடும்­பங்கள் குடி­யேற்­றப்­பட்­டன. அக்­கா­லத்தில் இன்­றுள்ள சூழ­லி­ய­லா­ளர்கள் பெரி­தாகக் கோஷ­மெ­ழுப்­ப­வில்லை.

இன்றும் அக் குடியேற்றத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் படம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று வில்பத்து பகுதியில் தங்களது பூர்வீகக் காணியில் குடியேறியுள்ள முஸ்லிம்களுக்கு எதிராக குரல் எழுப்பப்படுகிறது. இது இனவாத செயலாகும் என்றார்.

ARA.Fareel

2 comments:

  1. Allahu Akbar

    ReplyDelete
  2. Basic problem is not because of BBS or any others. It is because of the leader of the country who misled the people.

    ReplyDelete

Powered by Blogger.