Header Ads



சவூதி அரேபியாவில் சம்பளம்கேட்டு போராடியவர்களுக்கு சிறையும் கசையடியும்

சவுதியில் ஊதியம் கேட்டு போராடிய தொழிலாளர்களுக்கு கிடைத்தது சிறையும் கசையடியும்

கடந்த ஆண்டு தங்களுடைய ஊதியம் வழங்கப்படாதபோது, போராட்டங்கள் நடத்திய வெளிநாட்டு தொழிலாளர்கள் பலருக்கு சிறை தண்டனையும், கசையடிகளும் வழங்கப்பட்டிருப்பதாக சவுதி அரேபியாவிலிருந்து வருகின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

45 நாட்கள் முதல் 4 மாதங்கள் வரையிலான சிறை தண்டனையை மெக்காவிலுள்ள நீதிமன்றம் ஒன்று சுமார் 50 தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளதாக சவுதிதி செய்தித்தாள்கள் வெளியிட்டுள்ளன.

சிலருக்கு 300 கசையடிகள் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளன.

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால் சவுதி பொருளாதாரம் பாதிக்கப்பட்டபோது, பல மாதங்கள் அதிக அளவிலான தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்காத சவுதி பின்லாடின் என்ற கட்டுமான ஜாம்பவான் நிறுவனத்தோடு தொடர்புடைய வழக்கு இதுவாகும்.

இந்த நிறுவனத்திற்கு சொந்தமான பல பேருந்துகள் கோபமடைந்த தொழிலாளர்களால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

-BBC-

4 comments:

  1. பஸ் கொளுத்தியாவருக்குதான் தண்டனை வளங்கப்பட்டடுஉல்லாது

    ReplyDelete
  2. BEFORE writing bad of one person or one nation,, try clarify the background..

    IF the message is falls or twisted to give wrong message, You Are Trying to Give a Wrong image of SAUDI JUDICIAL system.

    If you are correct in your writings,, Allah will reward you insha Allah.. BUT if you are at fault,, You will have to be forgiven by the nation in front of Allah.

    Let Us FEAR Allah, in spreading bad acts of individual or a nation.

    ReplyDelete
  3. உண்மையை அறிந்நு எழுதுங்கள்

    ReplyDelete
  4. THIS IS NOT THE FIRST TIME SAUDI DOING THIS.

    ReplyDelete

Powered by Blogger.