Header Ads



ஷரீ­ஆ­வுக்கு அப்பால், முஸ்லிம் சட்டம்..? எதிர்க்க பள்ளிவாசல்களில் கையெழுத்து வேட்டை

முஸ்லிம் தனியார் சட்­டத்தில் ஷரீ­ஆ­வுக்கு முர­ணான எவ்­வித திருத்­தங்­க­ளையும் மேற்­கொள்­ள­வேண்­டா­மெ­னவும் திருத்­தங்கள் ஷரீ­ஆ­வுக்கு உட்­பட்­ட­தா­கவே அமை­ய­வேண்டும் எனவும், கொழும்பு மாவட்ட பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ளனம் தனியார் சட்­டத்தில் திருத்­தங்­களை சிபா­ரிசு செய்­வ­தற்கு நிய­மிக்­கப்­பட்­டுள்ள குழுவின் தலைவர் முன்னாள் உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ரசர் சலீம் மர்­சூ­பிடம் கோரிக்கை விடுத்­துள்­ளது.

கொழும்பு மாவட்­டத்­தி­லுள்ள அனைத்து பள்­ளி­வா­சல்­களின் ஜமா­அத்­தாரின் கையொப்­பங்­க­ளுடன் மகஜர் ஒன்றும் குழுத்­த­லைவர் சலீம் மர்­சூ­பிடம் கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக கொழும்பு மாவட்ட பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னத்தின் செய­லாளர் சட்­டத்­த­ரணி சிராஸ் நூர்தீன் தெரி­வித்தார்.

கையொப்­பங்­க­ளுடன் கூடிய மக­ஜரின் பிர­திகள் குழுவின் அங்­கத்­த­வர்கள் 18 பேரி­டமும் கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ளன.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை கையெ­ழுத்து வேட்டை கொழும்பு மாவட்ட அனைத்து பள்­ளி­வா­சல்­க­ளிலும்  ஆரம்­பிக்­கப்­பட்­டன. 

கொழும்பு மாவட்ட பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ளனம் இது தொடர்பில் தெளி­வு­ப­டுத்தி பள்­ளி­வா­சல்­க­ளுக்கு கடி­தங்­களை அனுப்­பி­வைத்­துள்­ளது. கடி­தத்தில் முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பில் தெளி­வு­ப­டுத்­து­மாறும், விழிப்­பு­ணர்­வூட்­டும்­ப­டியும் வேண்­டப்­பட்­டுள்­ளது.

முஸ்லிம் தனியார் சட்­டத்தின் திருத்­தங்­களை சிபா­ரிசு செய்­வ­தற்­காக 1990ஆம் ஆண்டு டாக்டர் சஹாஸ்தீன் கமிஷன் 1972ஆம் ஆண்டு பாரூக் தலை­மை­யி­லான குழு நிய­மிக்­கப்­பட்டு அக்­கு­ழுக்கள் சிபா­ரி­சு­களை முன்­வைத்­த­போதும் தற்­போது அமு­லி­லுள்ள தனியார் சட்டம் திருத்­தப்­படத் தேவை­யில்லை என்று நிரா­க­ரிக்­கப்­பட்­டது.

இந்­நி­லை­யிலே 2009ஆம் ஆண்டு சலீம் மர்சூப் தலை­மையில் குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டது என்று கடி­தத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இது தொடர்பில் கொழும்­பு ­மா­வட்ட பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னத்தின் தலைவர் எம்.அஸ்­லிமை விடி­வெள்ளி தொடர்­பு­கொண்டு வின­வி­ய­போது அவர் பின்­வ­ரு­மாறு தெரி­வித்தார்.

சலீம் மர்சூப் தலை­மையில் நிய­மிக்­கப்­பட்­டுள்ள குழு ஷரீ­ஆ­வுக்கு அப்பால் சில திருத்­தங்­களை முன்­வைக்­கு­மென சந்­தே­கிக்­கின்றோம். குறிப்­பாக பெண்கள் காதி நீதி­ப­தி­க­ளா­கவும், விவாகப் பதி­வா­ளர்­க­ளா­கவும் நிய­மனம், விவாகப் பதிவில் மணப்­பெண்ணின் கையொப்பம் அவ­சியம். போன்ற விட­யங்கள் சிபா­ரிசு செய்­யப்­பட்­டுள்­ள­தாக சந்­தே­கிக்­கின்றோம்.

அத­னா­லேயே தற்­போ­தைக்கு தனியார் சட்­டத்தில் திருத்­தங்கள் தேவை­யில்லை. திருத்­தங்கள் அத்­தி­யா­வ­சி­ய­மென்றால் அவை ஷரீ­ஆ­வுக்கு உட்­பட்­ட­தாக இருக்­க­வேண்டும் என வேண்­டி­யுள்ளோம்.

மக்கள் முஸ்லிம் தனியார் சட்டம் திருத்­தப்­ப­டத்­தே­வை­யில்லை என்­பதில் ஆர்­வ­மாக இருக்­கி­றார்கள். அவர்கள் கையொப்பங்களை பதிவதில் காட்டும் அக்கறை இதனை உறுதி செய்கிறது என்றார்.

No comments

Powered by Blogger.