Header Ads



சுவிஸ் செல்கிறார் ரணில்

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலக வர்த்தக மாநாட்டில் கலந்துகொள்ளும் நோக்கில் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று -16- அதிகாலை 2.50 அளவில் பயணமாகிச் சென்றுள்ளார். 

பிரதமர் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை டாவோஸில் தங்கியிருந்து சந்திப்புக்களை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த வருடமும், உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழைப்பு கிடைத்திருந்த நிலையில், அங்கு ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட சர்வதேச உடன்படிக்கைகள் இலங்கையின் எதிர்கால பொருளாதார அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு பாரிய அனுகூலத்தை ஈட்டித்தந்தன. 

உலக பொருளாதாரத்தின் புதிய மேம்பாடுகளை ஆழமாக ஆராயும் 2017 ஆம் ஆண்டுக்கான பொருளாதார மாநாட்டில் 40 க்கும் அதிகமாக நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர். 

மாநாட்டின் இறுதியில் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முக்கிய அரச தலைவர்களுடனும், முன்னணி வர்த்தக சமூகத்தினருடனும் பல கட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார். 

No comments

Powered by Blogger.