'நீதிமன்றில், “லகும் தீனுக்கும் வலியதீன்” என்ற அல்குர்ஆன் வசனத்தை குறித்துக்காட்டினேன்'
-MC.Najimudeen-
உத்தேச அரசியலமைப்பு விவகாரத்தில் வடக்கையும் கிழக்கையும் மாத்திரம் பிரதானப்படுத்தி தீர்வு காணமுனைந்தால் முஸ்லிம்கள் சிறுபான்மையினருக்குள் சிறுபான்மையினராக மாறும் அபாயம் உள்ளது.
சிங்களப் பெரும்பான்மை முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுகிறதென்றால் அதனைப்போன்று தமிழ் பெரும்பான்மையும் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படாது என்பதில் நம்பிக்கை இல்லை. மேலும் தற்போது சிறுபான்மையினர் பிரச்சினை எனும்போது தமிழ் மக்களின் பிரச்சினைகளை மாத்திரம்தான் கருத்தில் எடுக்கின்றனர்.
தீர்வு முயற்சியில் முஸ்லிம்களின் விடயம் கருத்தில் கொள்ளப்படுவதாக இல்லை என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.யூ.எம்.அலி சப்ரி தெரிவித்தார். விடிவெள்ளிக்கு வழங்கிய செவ்வியின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அந்த செவ்வியின் ஒரு பகுதி வருமாறு,
கேள்வி : கடும்போக்குவாதிகளின் நெருக்கடிகளிலிருந்து முஸ்லிம்களைப் பாதுகாப்பதற்கு எவ்வாறான உபாயங்களை கையாளலாம்?
பதில் : உலகளாவிய ரீதியில் பெரும்பான்மையினரும் சிறுபான்மையினரும் மோதிக்கொள்கின்ற சந்தர்ப்பங்களில் அங்கு சிறுபான்மையினரே பாதிக்கப்படுகின்றனர். ஆனால் பத்ர் யுத்தம் போன்ற நபி ஸல்லல்லாஹுஅலைஹிவஸ்ஸல்லாம் அவர்களின் காலத்தில் நடைபெற்ற சம்பங்களில்தான் சிறுபான்மையினராக இருந்த முஸ்லிம்கள் வெற்றிபெற்றனர். அப்போது அல்லாஹ்வின் நேரடி உதவி கிடைத்தது. ஆனால் தற்போது அவ்வாறான நிலை இல்லை. எனவே தற்போதைய உலகில் இடம்பெறும் நடைமுறைப் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். கடும்போக்குவாதத்தை உரிய முறையில் இனம்கண்டு அது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும். எனினும் கடும்போக்குவாதிகளை எம்மால் திருப்திப்படுத்த முடியாது. எனினும் இலங்கையிலுள்ள 95 தொடக்கம் 98 சதவீதமான பெளத்த மக்கள் கடும்போக்குவாதத்திற்கு எதிரானவர்கள். எனவே அவ்வாறானவர்களை நாம் எமது பக்கம் வைத்துக்கொள்ள வேண்டும். அதனைவிடுத்து அவர்களையும் கடும்போக்குவாத கொள்கைவாதிகளின் பக்கம் தள்ளிவிடக்கூடாது.
கேள்வி: தெளஹீத் ஜமாஅத் அமைப்பின் செயலாளர் ராஸிக்கிற்கு எதிராக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் சார்பில் தாங்கள் நீதிமன்றில் ஆஜரானதாக தெரிவிக்கப்படுகிறதே.
பதில் : ஆம்... அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் சார்பில் நீதிமன்றில் ஆஜராயிருந்தேன். ஏனெனில் 2013 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஸ்ரீலங்கா தெளஹீத் ஜமாஅத்தின் செயலாளர் ராசிக் உரையொன்றை ஆற்றினார்.
அதில் பெளத்த மதம் தொடர்பில் தவறான கருத்துகளை வெளியிட்டிருந்தார். எனவே அக்கருத்து தொடர்பில் பெளத்த மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பலை வெளியானது. அவரின் கருத்தினால் ஏற்கனவே நான் குறிப்பிட்ட95 தொடக்கம் 98 சதவீதமான பெளத்த மக்களும் வன்மையான கண்டனங்களை வெளியிட்டனர்.
மேலும் பொதுபல சேனா அமைப்பின் நடவடிக்கையையும் நியாயம் என கருதும் நிலைக்கும் தள்ளப்பட்டனர். அது மாத்திரமல்லாமல் அந்த உரை தொலைக்கட்சிகளில் அடிக்கடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. மேலும் குறித்த விடயம் நீதிமன்றுக்கு வந்தபோது ஸ்ரீலங்கா தெளஹீத் ஜமாஅத்தின் செயலாளர் ராஸிக் சார்பாக முஸ்லிம் சட்டத்தரணிகள் ஆஜராயினர். அச்சந்தர்ப்பத்தில் சுமார் 35 சிங்கள சட்டத்தரணிகள் வரையில் அவருக்கு எதிராக ஆஜராயினர்.
“ராஸிக் குறிப்பிட்டுள்ள கருத்தானது அவருடைய தனிப்பட்ட கருத்து. எனவே முஸ்லிம்களுக்கு எதிராக கிளர்ந்துள்ள நெருக்கடியை நீதிமன்றத்தினூடாக தடுக்குமாறு” அப்போது அகில இலங்கை ஜம்இய்துல் உலமா சபை என்னிடம் வேண்டிக்கொண்டது.
அவ்வாறான சந்தர்ப்பத்தில் குறித்த நெருக்கடியிலிருந்து முஸ்லிம்களை எவ்வாறு பாதுகாப்பதென்ற சிந்தனையில் மிகவும் இராஜதந்திரமான முறையில் அதனைக் கையாண்டோம். ஆகவே நாம் முஸ்லிம்கள் என்ற ரீதியில் நீதிமன்றில் ஆஜராகி இஸ்லாம் எந்தவொரு மதத்தையும் நிந்திக்கும் வகையில் கருத்து வெளியிடுமாறு குறிப்பிடவில்லை என்பதை தெரிவித்ததுடன் “லகும் தீனுக்கும் வலியதீன்” என்கின்ற அல்குர்ஆன் வசனத்தையும் குறித்துக்காட்டினேன்.
மேலும் ஸ்ரீலங்கா தெளஹீத் ஜமாஅத்தின் செயலாளர் ராஸிகின் கருத்தானது முஸ்லிம் சமூகத்தின் கருத்தாக கொள்ள முடியாது. மேலும் தொலைக்காட்சிகளில் அவரின் உரையை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பாக்கி மக்கள் மத்தியில் அதிர்வலைகள் ஏற்படுத்தப்படுகின்றன. எனவே தொலைக்காட்சிகளில் குறித்த உரை ஒளிபரப்பாவதை தடுக்குமாறும் வேண்டிக்கொண்டேன். எனவே அதனைத் தொடர்ந்து குறித்த உரை ஒளிபரப்பாவது தடைசெய்யப்பட்டது.
மேலும் ஸ்ரீலங்கா தெளஹீத் ஜமாஅத்தின் செயலாளருக்கு நடவடிக்கை எடுத்ததுபோல் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் எதிராக கருத்துக்களை வெளியிடும் பொதுபல சேனா போன்ற அமைப்புகளுக்கு எதிராகவும் நடவடிக்கைஎடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டேன். ஆகவே அதன் பயனாக மூன்று மாத காலப்பகுதியில் பொதுபல சேனா அமைப்புக்கு எதிராக இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
எனவே குறித்த வழக்கில் ஆஜரானதன் மூலம் மூன்று விதமான நன்மைகள் கிடைத்தன. குறித்த உரையின் மூலம் பெளத்த மக்கள் முஸ்லிம்கள் மீது கொண்டிருந்த தப்பபிப்பிராயம் தணிக்கப்பட்டது. அவ்வுரை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படுவது தடுக்கப்பட்டது. மேலும் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான கருத்து தெரிவிப்பவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கும் வழிவகை செய்யப்பட்டது.
ஆகவே இவ்வாறாக நாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இராஜதந்திர ரீதியில் முன்னெடுத்து தீர்வு காண வேண்டிய தேவை எமக்குள்ளது. எனினும் சமூகத்தின் நலன் கருதி குறித்த வழக்கில் ஆஜரானதன் மூலம் எனக்கு எதிரான பிரசாரங்களும் மேற்கொள்ளப்பட்டன. இருந்தபோதிலும் அவற்றை நான் பெரிதாகக் கொள்ளவில்லை. இவ்வாறாக சமூகத்தைப் பாதுகாக்கும் விடயங்களில் தொடர்ந்தும் முன்னின்று செயற்படுவேன்.
உண்மையிலேயே தாங்கள் அன்று நீதிமன்றில் ஆஜராகி வாதிட்டது சரியான நேரத்தில் சரியாக எடுக்கப்பட்ட சரியான முடிவாகும்.அள்ளாஹ் உங்களுக்கு அருள் செய்வானாக.சிலருக்கு மேடையேறி வாய் இருக்கின்றது என்பதற்காக வாய் கிழியக்கத்துவது அல்ல மார்க்கமும் மக்களும்,மக்களது எதிர்காலமும்.முஸ்லிம்களுக்கெதிரான சக்திகள் மிகமிக கச்சிதமாக தனது சூழ்ச்சிகளை வகுக்கின்றனர்.முஸ்களைப் பயன்படுத்தியே அவர்கள் தங்களுக்கும் மார்க்கத்துக்கும் நல்லது தானே செய்கின்றோம் என்று நினைப்பில் படுகுழியில் விழுவதை அப்பொழுதே அவர்களால் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கும்.அன்றைய சமூகமும் அதைப்புரியாதிருக்கலாம்.பின்பு தெரியவரும் மாபெரும் வரலாற்றுத் தவறைப்புரிந்து விட்டோம்.என்று.அது ஒரு சுடலை ஞானமாகும்.எனவே சட்டத்தரனியே நீங்கள் செய்தது 100% சரியே.
ReplyDeleteAs a Person who know Sabry for long time, its my obligation towards the community in exposing a bit of him. He is an ardent supporter of Rajapakse & Co. Official lawyer for Gotabaya on all his cases. He will represent him in many more future cases. As a Stooge of Mahinda, he has been a vocal man in persuading Muslims specially in Kalutara district towards Mahinda. He failed to criticize Mahinda and Gota during Aluthgama riots, instead openly blamed muslim youths citing racism on our end. He has no interest at all in community but works hard to bring back his masters to power. He has demanded large sums of money to defend muslim youths in courts over racist attacks by monks. Gnanasara has a high degree of respect to him always. so do not rush to judge on him
ReplyDeleteYES, roshan MM..
ReplyDeleteI too agree with you.. I once saw a live discussion in which this Guy -Ali , participated. Noted this guy seems to be knowing some Qur'aan VERSES only. No any genuine knowledge of islam and its teachings. Mr.Ali you must not go behind RACISTS and FASCISTS from budist sinkala community..
May ALLAAH guide him and us in the straight path...
@Roshan,I agree your comment.many don't know his true color.
ReplyDeleteI beleive this one good deed that we know for sure, he performed on behahalf of ACJU deserves praise.
ReplyDeleteRoshan
ReplyDeleteAli Sabri is a MUSLIM and a LAWYER .It is just like any
MUSLIM who is a DOCTOR ! I made it very simple for you
to see how it works .All Srilankans have a vote and a
religion . Out of six presidents of Srilanka ,five were
elected with the votes of Buddhists , Hindus , Muslims
and Christians . Now , having a vote means you have a
right for your own political vision like your belief in
a religion and a duty to your profession . I have seen
him in many Sinhala TV discussions defending his
religion very skilfully while not offending Buddhism.
This is what you call Diplomacy . REMEMBER ONE THING
ROSHAN, WE ALL ARE LIVING IN A MULTI CULTURAL SOCIAL
BACKGROUND IN THE COUNTRY AND THE LACK OF EXPERIENCE
OR ZERO EXPERIENCE INTO IT IS , LIKE THE LIFE OF
'FROG IN THE WELL.'
@Muzammi. Political affiliation or affection to a party is one's democratic right. I have not disputed on it. Your politics should not be at the cost of the religion or community.He will stoop to any level for gota baya. He has been yelling that muslim youths also involved in 83 July riots against tamil. I watched this debate he was in along with top end racists during Mahinda time. He is a citizen and a lawyer like any other profession but should not be a liar. Get facts on him if possible from close circle. He has one goal that is bring back any of Rajapaksa.
DeleteYou have done good job. But we didn't forget that you went to shopping for Ghoutabaya. So, please stop to shopping for Ghoutabaya. Thanks
ReplyDeleteRoshan,
ReplyDeleteThank you for your reply .Sabri is not personally known
to me but one of his late uncles had been a friend to
me and they were all pious and respectable.
I understand your point but my point is , if you can't
find a genuine Ulemma among so many Ulemmas today ,how
on earth are we going to find someone of Sabri's calbre
to be so dedicated to his religion so as to put religion
before everything else ? He is one of our country's top
few lawyers who was selected by Mahinda to defend the
country in Geneva . Whatever his religious or political
adherence is, he must serve his country first. We can
of course reject his politics if we don't like it . We
all talk about Mahinda and Gota involvement in Aluthgama
incident , but yet we haven't proved anything in the
courts even against Gnanasara who led the whole thing in
public ! The whole world knows how it happened , why it
happened and who is behind it ! Ok now we have voted out
the culprits , are we feeling full safe today ? Shall we
be tomorrow ? So Roshan , let us all be a little bit
realistic with all the issues of today and in store for
tomorrow .