முஸ்லிம்களிடம் தங்கியுள்ள நல்லாட்சியின் வெற்றியும், தோல்வியும்..!
(நவமணி ஆசிரியர் தலையங்கம்)
வில்பத்து வனத்தின் எல்லைப் பகுதிகளை விரிவாக்கி, அவற்றையும் வனஜீவிகள் பிரதேசமாக பிரகடனப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு முஸ்லிம்களை பெரிதும் கவலைகொள்ளச் செய்துள்ளது.
இவ்வாறு வில்பத்து வனத்தின் எல்லைப் பகுதிகள் விரிவாக்கப்பட்டு, அவை வனஜீவிகள் பிரதேசமாக வர்த்தமானியில் அறிவிக்கப்படும்போது, மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலகத்துக்குட்பட்ட மறிச்சுக்கட்டி, பாலைக்குளி, கரடிக்குளி முஸ்லிம் கிராமங்கள் அபகரிக்கப்படும் நிலை உருவாகும்.
இலங்கை எதிர்கொண்ட 3 தசாப்த சிவில் யுத்தம் காரணமாக, இந்தப் பிரதேச முஸ்லிம் மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் துரத்தப்பட்டதனால், அவர்கள் புத்தளம் மாவட்டத்தில் அகதிகளாக தஞ்சமடைந்தனர். 2009 இல் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதும் முஸ்லிம்கள் தமது பாரம்பரிய நிலங்களுக்கு மீள ஆரம்பித்தனர்.
முஸ்லிம்கள் தமது பாரம்பரிய கிராமங்களுக்கு மீள ஆரம்பித்ததும், பேரினவாதிகள் அதற்கு வேறு கதையை சோடித்து அவிழத்துவிட்டனர். அதாவது, முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு ஆதரவளித்த அமைச்சர் ரிசாத் பதியுதீனும், முஸ்லிம்களும் வில்பத்து வனத்தை அழிப்பதாக பேரினவாதிகள் மக்களை தவறான வழிநடத்த ஆரம்பித்தனர்.
வில்பத்து வனத்தை அண்மித்து, அதன் எலலைப் புறத்தில், ஆனால், விலபத்து வனத்துக்கு வெளியால் அமைந்திருந்த மறிச்சுக்கட்டி, பாலைக்குளி, கரடிக்குளி முதலிய கிராமங்களிலிருந்த மக்கள் அங்கிருந்து வெளியேறியதனால, யுத்தம் நிகழ்ந்த 30 வருடங்களிலும் அந்தப் பகுதிகள் மொத்தமாகவும் காடுகளாக மாறிப் போயிருந்தன.
ஒரு பெரும் வனத்தை அண்மித்துள்ள எல்லைப் புறங்களில் 30 வருட காலத்துக்கு எந்தவொரு மனித நடமாட்டமும் இல்லாதபோது அவை காடுகளாக மாறுவது இயல்பானதாகும். அதேநேரம், அந்தப் பகுதிகளில் முஸ்லிம்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்களாக, வீடுகள், பள்ளிவாசல்கள், கிணறுகளின் இடிபாடுகள் அங்கு இன்னமும் உள்ளன.
இவ்வாறான நிலையில், இந்த உண்மைகளை மறைத்து, பெரும்பான்மை மக்கள் மத்தியில், பொய்யான கருத்துக்களை பேரினவாதிகள் கொண்டு சென்றனர். எனவே, இப்போது இந்த எல்லைக் கிராமங்களை வில்பத்து வனப் பகுதிகளாக அறிவித்தால், பெரும்பான்மை மக்களிடம் தனக்கான செல்வாக்கை அதிகரித்துக் கொள்ளலாம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எண்ணுகிறார் போலும்.
இந்தப் பகுதிகளில் வாழும் முஸ்லிம்கள் ஒரு அங்குல நிலத்தையேனும் சட்டவிரோதமாக கைப்பற்றிக் கொள்ளவிலலை. 30 வருடங்களுக்கு முன்னர் தாம் துறந்து சென்ற ஊர்களிலேயே அவர்கள் மீளவும் குடியமர்ந்துள்ளனர். எனவே, ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு கண்டிக்கப்பட வேண்டிய, மிகவும் மோசமான ஒரு நடவடிக்கையாகும்.
சமீப காலமாக ஜனாதிபதியும், சில அமைச்சர்களும் தொடர்ந்தும் முஸ்லிம்களின் எதிர்ப்பையும், வெறுப்பையும் சம்பாதித்துக் கொள்ளும் நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டு வருகின்றனர். இஸ்லாத்தையும் அல்லாஹ்வையும் நிந்தித்த ஞானசார தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமை, தொல்பொருள் ஆய்வு என்ற பேரில் முஸ்லிம்களின் காணிகளை அபகரிக்கும் முயற்சி, இப்போது வில்பத்துவை அண்டிய முஸ்லிம் கிராமங்களை வில்பத்து வனஜீவிப் பிரதேசமாக அறிவிப்பது என்ற இந்த நடவடிக்கைகள் தொடர்கின்றன.
ஜனாதிபதியும் சில அமைச்சர்களும் இவ்வாறு முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதன் மறைமுக நோக்கம், சிங்கள சமூகத்தின் ஆதரவை பெற்றுக்கொள்வதாகும். அதிகாரத்துக்கு வருமுன் அளித்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாது போயுள்ளதால், எப்படியேனும் சிங்கள சமூகத்தின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்காக, தொடர்ந்தும் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை இவர்கள் எடுத்து வருகிறார்கள்.
ஆனால், முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் இப்படியே தொடர்ந்தால், இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி தேர்தலில், இந்த அரசின் பங்காளிகளுக்கு ஆதரவு வழங்குவதை முஸ்லிம்கள் முற்றாக நிறுத்தி விடுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன. அதற்கான பிரசாரங்களையும் இப்போது சமூக மட்டத்தில் காண முடியுமாயுள்ளது.
சிங்கள சமூகத்தின் ஆதரவைப் பெறுவதற்காக, முஸ்லிம்களின் எதிர்ப்பையும், வெறுப்பையும் சம்பாதித்துக் கொள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், நல்லாட்சி என்று சொல்லிக் கொள்ளும் இந்த அரசும், அடுத்த தேர்தல்களில் வெற்றி பெறுவதும், தோல்வியடைவதும், முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்துவதில்தான் தங்கியுள்ளது.
WE SHOULD Saw our power.......and we all shoueld work together without any political against
ReplyDeleteWE SHOULD Saw our power.......and we all shoueld work together without any political against ...please all politician think our muslim future and nature.....
ReplyDeleteThis man deceived not only Muslims but entire 6.2 million voters who supported him.Soon after his victory he did was to protect his party than country.According to E-news he had secret discussion with Rajapaksha Family.then criticized FCID and UNP,filled the case against puravesi balaya leader Prof. Wijesuriya for 100 million defamation case.Now he is attacking Muslims.UNP,Puravesi Balaya and Muslims are the main power behind him to defeat the Rajapaksha.So he wants to attack those power because he is more concern about his party and Mahinda than his victory.
ReplyDelete