'மாட்டிறைச்சிக் கடைகளை மூடுவதே, முதலில் செய்ய வேண்டிய மேலான பணியாகும்'
எங்களுடைய மரபுகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை இன்னமும் எங்களுடைய கல்வியலாளர்கள், புத்திஜீவிகள் உணராமை கவலைக்குரிய விடயம் என சைவப்புலவர் க.நித்தியதசீதரன் தெரிவித்துள்ளார்.
யாழ் - விஷனின் கொக்குவில் கிருஷ்ணா அறநெறிப் பாடசாலையின் ஏற்பாட்டில் பட்டிப் பொங்கல் விழா நேற்று(15) கொக்குவில் கிழக்கிலுள்ள மேற்படி அறநெறிப் பாடசாலையில் இடம்பெற்ற போது கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், எங்களுடைய மண்ணில் பயிரிடப்படும் மிளகாய்ச் செடியிலிருந்து பெறப்படும் மிளகாய்கள் முன்னர் போல உறைப்பதில்லை. எங்களுடைய பப்பாசிப் பழ இனம் அழிக்கப்பட்டு விட்டது.
இவ்வாறான செயற்பாடுகள் கால ஓட்டத்தில் எங்களுடைய இனத்தின் கூர்ப்பையே அழித்து விடும் என்பதை நாங்கள் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
முன்னைய காலங்களில் நாங்கள் பாடப்புத்தகங்களில் கற்க முடியாத பல விடயங்களை எங்கள் வாழ்கையில் கடைப்பிடித்துக் கொள்ளக்கூடிய சூழலிருந்தது.
மண் வீடு கட்டி விளையாடிய வரலாறு, குரும்பட்டியில் தென்னம் ஈர்க்குக் குற்றித் தேர் கட்டிய வரலாறெல்லாம் இன்று மறைந்து விட்டது.
தற்போது அறிவு வளர்ந்தாலும் மாணவர்களின் சிந்தனையோட்டம் பாடப்புத்தகங்களுக்குள் குறுக்கியிருப்பது மனவேதனை தருகிறது.
தற்போது இந்தியாவில் ஜல்லிக் கட்டுச் சவாரியை நிறுத்த வேண்டும் என்று சொல்லி ஜல்லிக் கட்டு மாட்டு இனத்தையே அழிப்பதற்குச் சிலர் கங்கணம் கட்டி நிற்கிறார்கள்.
ஜல்லிக் கட்டில் காளையை அடக்குதல் என்பது தமிழர்களுடைய வீரத்தைப் பறைசாற்றுமொரு விளையாட்டாகும்.
யாழ்ப்பாணத்தில் சவாரி என்று சொல்லப்படுகின்ற காளை ஓட்டுதலை வதை என்று சொல்லுகிறார்கள். இவையெல்லாவற்றையும் நிறுத்த முற்படுவோர் மாட்டிறைச்சிக் கடைகளை மூடுவதே முதலில் செய்ய வேண்டிய மேலான பணியாகும்.
தெய்வம்சம் நிறைந்த பசுக்களையும், எருதுகளையும் ஒருநாள் மாத்திரம் போற்றி நன்றி கூறி வணங்குவது எங்களுக்குப் பெருமையல்ல. வருடம் முழுவதும் நன்றி கூறி அவற்றைப் போற்றிப் பேணிப் பாதுகாக்க வேண்டியது எங்களுடைய கடமை.
முன்னைய காலத்தில் விவசாயிகள் அனைவரும் ஒன்று கூடிப் புதிரெடுத்தார்கள், பொங்கினார்கள், படைத்தார்கள். அக மகிழ்ச்சியுடன் ஆடிப்பாடி மகிழ்ந்தார்கள்.
தற்காலத்தில் பசுக்கள் வளர்ப்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவுள்ளமையால் பட்டிப் பொங்கல் குறிப்பிட்ட சில வீடுகளில் மாத்திரம் ஒரு அடையாளமாக மாத்திரமே நடைபெறுகிறது.
ஆனால், எமது முன்னோர்களின் காலத்தில் அவர்கள் எல்லோரது வீடுகளிலும் பசுக்கள் வளர்த்தார்கள். பசுவை அவர்கள் தெய்வமாகவே கருதினார்கள்.
ஒரு வீட்டிலே பசு நிற்குமானால் அங்கு இலக்குமி தேவியினுடைய பேறு நிறைவாகக் காணப்படும். பசுவிலே முப்பத்து முக்கோடி தேவர்கள் குடியிருக்கிறார்கள்.
ஆகவே, நாங்கள் பசுவை வணங்கும் போது முப்பத்து முக்கோடி தேவர்களையும் நினைந்து வணங்க வேண்டும். மேலும், பசுவை பின்னால் நின்று வணங்குவதே நன்மை பயக்கும் என சைவப்புலவர் க.நித்தியதசீதரன் குறிப்பிட்டுள்ளர்.
Nonsense
ReplyDeleteஇந்தச் செய்தியை இந்தியாவுக்குப் போய் மாட்டிறைச்சி ஏற்றுமதிசெய்யும் ஹிந்துக்கலுகு சொல்லும்
ReplyDeleteபசுவைப் படைத்த இறைவனை வணங்காமல் பசுவை ஏன் ஐயா வணங்குகிறீர்கள்? இது பாவம் இல்லையா?
ReplyDeleteஏன்டா மூதேவி முக்கோடி தேவர்கள் பசுவினுல் இருப்பார்கள் என்றால் அப்புறம் ஏன்டா கோவில்ல ஆயிரக்கணக்கான சிலைகள் வைத்து கும்பிடுகிரீங்க முட்டாப் பயங்க
ReplyDeleteஅதிகமானவர்களுக்கு பைத்தியம் இருக்கிறது ஆனால் எல்லோருக்கும் ஒரே வகையான பைத்தியம் இல்லை.ஆளாளுக்கு வெவ்வேறு பைத்தியம்.அதில் ஒருவகை இது,
ReplyDelete