முல்லைத்தீவு சென்ற ஜனாதிபதி, இடைநடுவில் கொழும்பு திரும்பினார்
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இன்றைய தினம் விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காலநிலை சீரின்மையால் தனது பயணத்தை இடைநடுவில் முடித்துக்கொண்டு கொழும்பு திரும்பியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியில் இன்று இடம்பெற்று வருகின்ற நிகழ்வில் கலந்துகொள்வதற்காக விஜயத்தை மேற்கொண்டிருந்த நிலையிலேயே குறித்த விஜயம் இடைநடுவில் இரத்துச்செய்யப்பட்டுள்ளது.
முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியில் இன்றைய தினம் இடம்பெறும் பொது நிகழ்வில் பாடசாலைக் கட்டிடத் திறப்புடன் மாவட்டத்தின் 1500 பேருக்கான காணி அனுமதிப் பத்திரங்களும் விநியோகிக்கப்படுவதுடன் 500 குடும்பங்களிற்கான வாழ்வாதார உதவிகள் மற்றும் கேப்பாபுலவில் விடுவிக்கப்படும் நிலங்களிற்கான சான்றிதழ்கள் போன்றன வழங்கி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சித்தாத்தன், பிரபா கணேசன், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர, வடமாகாண சபை அவைத் தலைவர் கமலேஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் சிவநேசன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment