பாராட்டி கௌரவிப்பு
பதவியுயர்வு பெற்றுச் சென்ற சாய்ந்தமருது முன்னாள் பிரதேச செயலாளரும், சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சின் தற்போதைய மேலதிக செயலாளருமான அல்-ஹாஜ் ஏ. எல். எம். சலீம் அவர்களின் சேவையைப் பாராட்டி கௌரவித்து சாய்ந்தமருது சமூக நலன்புரி மன்றத்தினால் -Social Welfare Forum- நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வானது கடந்த 2016. 12. 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு சாய்ந்தமருது ABM Restaurant இல் அதன் தலைவர் வைத்திய கலாநிதி அல்-அமீன் றிசாத்தின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், சாய்ந்தமருதின் தற்போதைய பதில் பிரதேச செயலாளர் ஐ. எம். ஹனிபா அவர்களும் கலந்து கொண்டதோடு, அவரை வரவேற்று, அந்த அமைப்பின் போசகராக இணையுமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளை மனமுவந்து ஏற்றுக் கொண்டதோடு அந்த அமைப்பின் வெற்றிப்பாதையில் அவரும் இணைந்து பயணிக்க ஆரம்பித்துள்ளார்.
ஏற்கெனவே அந்த அமைப்பின் போசகராக இருந்த மேலதிக செயலாளர் ஏ. எல். எம். சலீம் அவர்கள், அந்த அமைப்பின் தேசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான இணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், அந்த அமைப்பின் தகவல் தொடர்பு இணைப்பாளராக அதன் முன்னாள் தலைவரும், கல்முனை பிராந்திய தொற்றுநோய் தடுப்பு பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரியுமான வைத்திய கலாநிதி என். ஆரிப் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment