'ஆற்றில் தண்ணீர் அருந்திவிட்டு, கடலைப் போற்றுவது'
தோல்வியடைந்தவர்களுக்கு தமது கட்சியே அமைச்சுப் பதவிகளை வழங்கியதாக அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
மொனராகலையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
கடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் புண்ணியத்தில் அமைச்சர்களாகப் பதவியேற்றுவர்கள் ஆற்றில் தண்ணீர் அருந்திவிட்டு கடலைப் போற்றுவது போல் நடந்து கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வந்திருந்தால் இவர்களுக்கு போக இடமின்றிப்போயிருக்கும்.
எனினும், சுதந்திரக் கட்சியினர் தற்போதைய அரசாங்கத்தில் இருந்து கொண்டு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அருவருக்கத்தக்கது. மாகாண முதலமைச்சர்கள் கூட ஐக்கிய தேசியக் கட்சியே நியமித்தது.
இப்படியான நிலையில் சில முதலமைச்சர்கள் ஊடகங்களுக்கு முன்னால் வீரர்கள் போல் தனிக்கட்சி அரசாங்கம் பற்றி பேசிவருவதாக அமைச்சர் மத்தும பண்டார மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment